படுகொலைச் சாலை! 4 ஆண்டுகளில் 2,000 பேர் பலி – மநீம

சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் விபத்துகளைத் தடுக்க வேண்டும் என மநீம வலியுறுத்தியுள்ளது.  இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சென்னை-திருச்சி இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் 2018 ஜனவரி முதல் கடந்த ஜூன் மாதம் வரையிலான 4 ஆண்டுகளில் நேரிட்ட விபத்துகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக வெளியான தகவல் பெரிதும் அதிர்ச்சி அளிக்கிறது. சாலை விபத்துகளுக்கு வாகன ஓட்டிகள் மட்டுமின்றி, போதுமான அளவுக்கு பயன்பாட்டுச் சாலைகள் இல்லாததும், சாலை வடிவமைப்பில் உள்ள குளறுபடிகளும்தான் … Read more

வழிகாட்டி பலகை விழுந்து உயிரிழந்த சண்முகசுந்தரம்..! முதல்வர் நிவாரணம் அறிவிப்பு..!

சண்முகசுந்தரம் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், நிவாரணம் அறிவிப்பு.  சென்னையை அடுத்த தாம்பரத்தில் இருந்து கோயம்பேடு நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்து கத்திப்பாராவில் நெடுஞ்சாலைத் துறையால் அமைக்கப்பட்டிருந்த வழிகாட்டி தூண் மீது மோதி ஆறு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த திரு. சண்முகசுந்தரம் என்கிற இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சண்முகசுந்தரம் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், நிவாரணமும் … Read more

இந்தியாவில் ஹிட் மற்றும் ரன் வழக்குகள் தொடர்ந்து அதிகரிப்பு!!

இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் சாலை விபத்துகளை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் (MoRTH) கண்காணித்து வருகிறது. 2020 ஆம் ஆண்டில் நாட்டில் ‘ஹிட் அண்ட் ரன்’ பிரிவின் கீழ் மொத்தம் 52,448 சாலை விபத்துகள் நடந்துள்ளன. தேசிய நெடுஞ்சாலைகளில் இதுபோன்ற விபத்துகள் அதிகபட்சமாக எப்படி நடந்தன என்பதை MoRTH தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முழுப் பகுப்பாய்வைப் பகிர்ந்துள்ளது. மக்களவையில் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், … Read more

ராணிப்பேட்டை சாலை விபத்து – முதல்வர் நிவாரணம் அறிவிப்பு..!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்த 3 பேருக்கு முதல்வர் இரங்கல் தெரிவித்து நிவாரணம் அறிவித்துள்ளார்.  ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த நிலையில், அவர்களுக்கு முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், நிவாரணம் அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ‘நேற்று (1.8.2022) மாலை 5 மணியளவில், சோளிங்கர் – அரக்கோணம் சாலை, SR கண்டிகை மின்னலம்மாள் கோவில் எதிரே சாலையோரம் நின்றிருந்த … Read more

இந்தத் திட்டத்தை உடனடியாக தமிழக அரசு நிறுத்த வேண்டும் – டிடிவி தினகரன்

போதிய ஊழியர்களோடு பேருந்துகள் இயங்குவதை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும் என டிடிவி தினகரன் ட்வீட்.  தமிழ்நாடு அரசின் விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துனர் இல்லா பேருந்துகளை இயக்க முடிவெடுத்துள்ள இந்த திட்டத்தை நிறுத்த வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழ்நாடு அரசின் விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துனர் இல்லா பேருந்துகளை இயக்க முடிவெடுத்து அதை அமல்படுத்தத் தொடங்கியிருக்கிறது தமிழக அரசு. சாலை விபத்துகள் அதிகமாக நடக்கும் இந்தக் … Read more

#Breaking:”இவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி;தலா ரூ.25 லட்சம் நிதியுதவி” – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

நாமக்கல் மாவட்டம்,புதுச்சத்திரம் தேசிய நெடுஞ்சாலையில் கட்டுமானப் பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில்,அந்தப் பகுதியில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட கார் விபத்து குறித்து விசாரிப்பதற்காக,இரவு பாதுகாப்புப் பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் சந்திரசேகர்,பழனி மற்றும் காவலர்கள் தேவராஜன்,மணிகண்டன் ஆகியோரும் சம்பவ இடத்திற்குச் சென்று மேற்படி கார் விபத்தில் சிக்கிக் தவித்துக் கொண்டிருந்தவர்களை மீட்டு விசாரணை செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு அதிகாலை சுமார் 2-10 மணி அளவில் அதிவேகமாக வந்த டிராவல்ஸ் வேன் ஒன்று … Read more

BREAKING : பாட்டியாலா முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சரணடைந்தார் நவஜோத் சிங் சித்து…!

உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து, பாட்டியாலா அமர்வு நீதிமன்றத்தில் நவ்ஜோத் சிங் சித்து சரணடைந்துள்ளார்.  கடந்த 1988-ஆம் ஆண்டு டிசம்பர் 27-ஆம் தேதி பஞ்சாப்பின் பாட்டியாலாவில் உள்ள ஷெரன்வாலா கேட் கிராசிங் அருகே ஜீப்பை சாலையில் நிறுத்தியதாக ஏற்பட்ட மோதலில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து, குர்னாம் சிங் என்ற நபரை தாக்கியதாக கூறப்படுகிறது. தாக்கப்பட்ட நபர் பின்னர் இறந்துவிட்டார். இதனால் அப்போது, சித்து மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து, 1999 இல், பாட்டியாலா விசாரணை … Read more

பஞ்சாப் மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஓராண்டு சிறை…!

சாலை விபத்து வழக்கில் 34 ஆண்டுகளுக்குப் பின்னர் நவ்ஜோத் சிங் சிந்துவுக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து கடந்த 1987 ஆம் ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்தில் நீதிமன்றம் சிறை தண்டனை வழங்கிய நிலையில் தண்டனையை ரத்து செய்யக்கோரி நவ்ஜோத் சிங் சித்து உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஓராண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. சாலை விபத்து … Read more

#Shocking:தமிழக இளம் டென்னிஸ் வீரர் சாலை விபத்தில் மரணம் – மத்திய அமைச்சர் இரங்கல்!

தமிழகத்தை சேர்ந்த டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன்(வயது 18) மேகாலாயாவில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேகலாயாவில் இன்று நடைபெறவுள்ள 83-வது டேபிள் டென்னிஸ் போட்டியில் கலந்து கொள்ள கவுகாத்தியில் இருந்து காரில் ஷில்லாங் நோக்கி சென்ற போது இந்த கோர சம்பவம் நிகழ்ந்துள்ளது. எதிர் திசையில் இருந்து வந்த 12 சக்கர டிரெய்லர்,உம்லி சோதனைச் சாவடிக்குப் பிறகு,ஷாங்பங்லாவில்,சாலை வளைவில் எதிர் திசையில் இருந்து வந்த 12 சக்கர டிரெய்லர்,தீனதயாளன் சென்ற காரை … Read more

சகபயணிகளின் புன்னகைக்கு பாதுகாப்பளியுங்கள் – விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட தமிழக காவல்துறை

சாலைகளில் வாகனங்களை ஓட்டும் போது, பாதுகாப்பாகவும் விழிப்புடனும் ஓட்டுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும், சாலை விதிகளை கடைபிடித்து பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளுமாறு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில்,  தமிழக காவல்துறை வாகனம் ஓட்டும் செல்போனை தவிர்க்குமாறு அறிவுறுத்தி விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ பதிவிட்டு, ‘வாகனம் ஓட்டும் போது செல்போனை தவிர்க்கவும் சாலையில் நம்முடன் பயணிப்பவர்களின் கனவுகளை¸ நம்முடைய ஒரு நிமிட கவனக்குறைவு அழித்துவிடும். கைப்பேசியில் இருந்து உங்கள் கவனத்தை நீக்கி சாலையில் செலுத்துங்கள். … Read more