பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை!

Imran Khan

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதாவது, அரசு ரகசியங்களை கசியவிட்டதாக தொடரப்பட்ட வழக்கில், இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று, பாகிஸ்தான் தெஹ்ரிக் – இ – இன்சாஃப் கட்சியின் துணை தலைவரும், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான ஷா மஹ்மூத் குரேஷிக்கும் இதே வழக்கில் 10 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் இம்ரான் … Read more

கேரளா: சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 90 வயது முதியவருக்கு 3 ஆண்டுகள் சிறை!!

கேரளாவின் பாலக்காடு மாவட்டம் கரிம்பா கிராமத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டு தனது அண்டை வீட்டாரான 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக 90 வயது முதியவருக்கு விரைவு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சதீஷ் குமார் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன் சேர்த்து 50,000 ரூபாய் அபராதமும் விதித்தார். இந்த உத்தரவை உறுதி செய்த சிறப்பு அரசு வக்கீல் நிஷா விஜயகுமார், குழந்தைகளை … Read more

66வயது முதியவருக்கு 81ஆண்டுகள் சிறை – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

15 சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த 66 வயது முதியவருக்கு 81 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, 2.2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை உள்ள பெண்களுக்கு பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக தான் உள்ளது. நாளுக்கு பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 2009ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கேரளாவில், திருவனந்தபுரத்தில் 15 வயது சிறுமி உடல் நலக்குறைவு காரணமாக … Read more

பரபரப்பு : 60 வயது மூதாட்டிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை…! ரூ.2 லட்சம் அபராதம்..!

ஆந்திராவில் இருந்து 150 கிலோ கஞ்சா கடத்திய வழக்க்கில், 60 வயது மூதாட்டி பாக்கியத்திற்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு.  கடந்த 2017ல் ஆந்திராவில் இருந்து 150 கிலோ கஞ்சா கடத்திய வழக்க்கில், 60 வயது மூதாட்டி பாக்கியத்திற்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.2 லட்சம் அபராதம் விதித்து சென்னை போதை  வழக்குகளுக்காக சிறப்பு  தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி, மூதாட்டி பாக்கியம் என்பவருக்கு 10 ஆண்டுகள் சிறைரூ.2 லட்சம் அபராதமும், திருமுருகன், பாலமுருகன் … Read more

பஞ்சாப் மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஓராண்டு சிறை…!

சாலை விபத்து வழக்கில் 34 ஆண்டுகளுக்குப் பின்னர் நவ்ஜோத் சிங் சிந்துவுக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து கடந்த 1987 ஆம் ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்தில் நீதிமன்றம் சிறை தண்டனை வழங்கிய நிலையில் தண்டனையை ரத்து செய்யக்கோரி நவ்ஜோத் சிங் சித்து உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஓராண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. சாலை விபத்து … Read more

முன்னாள் டென்னிஸ் வீரர் போரிஸ் பெக்கருக்கு 2 1/2 ஆண்டுகள் சிறைத்தண்டனை …!

 54 வயதுடைய முன்னாள் டென்னிஸ் வீரரும், மூன்று முறை விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றவருமாகிய போரிஸ் பெக்கர் தற்போது லண்டனில் வசித்து வருகிறார். ஜெர்மனியை சேர்ந்த இவர் ஒரு காலகட்டத்தில் சிறந்த டென்னிஸ் வீரராக இருந்து வந்த நிலையில், தனியார் வங்கி ஒன்றில் கோடிக்கணக்காக பணம் வாங்கிவிட்டு அந்த கடனை திருப்பி செலுத்தாததால் தான் திவாலானவர் என பெக்கர் அறிவித்திருந்தார். ஆனால் போரிஸ் பெக்கர் பொய் சொல்லியதாகவும், அவரது வங்கி கணக்கில் இருந்த பணங்கள் அனைத்தையும் தனது … Read more

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூகிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை!எதற்காக தெரியுமா?!

மியான்மர்:தேசிய ஜனநாயக லீக் கட்சி தலைவர் ஆங் சான் சூகிக்கு  4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மியான்மர் நாட்டின் தேசிய ஜனநாயக லீக் கட்சி தலைவர் ஆங் சான் சூகிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மியான்மர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இராணுவத்திற்கு எதிராக கருத்து வேறுபாடுகளை தூண்டியதற்காகவும், கொரோனா விதிகளை மீறியதற்காகவும்,மேலும் ஆட்சியில் இருந்தபோது தொழில்நுட்ப சட்டம்,ரகசிய தகவல் விதிமுறைகளை மீறியதாகவும் கூறி ஆங் சான் சூகிக்கு இத்தகைய தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. … Read more

எனக்கு கொரோனா வைரஸ்-ங்க…ஐய்யயோ..பீதியாகி ஓட்டம் பிடித்த மக்கள்..பயந்துட்டீங்களா..சும்மா..!ஏமாற்றிய இளைஞனுக்கு 5 ஆண்டு சிறை..!

அண்டை நாடான சீனாவை கடந்த டிசம்பர் மாத இறுதியில் இருந்து கொரோனா என்ற பெயர் கொண்ட வைரஸ் அச்சிறுத்தி வருகிறது.அங்குள்ள மக்கள் இந்நோய்க்கு பாதிக்கப்பட்டு கொத்துகொத்தாக உயிரிழந்து வருகின்றனர்.இந்நிலையில் இந்த வைரஸ் தற்போது நாடு முழுவதும் அசுர வேகத்தில் பரவி வருகிறது. 25க்கும் அதிகமான நாடுகளில் இந்நோய் பரவி உள்ளது. இதன் காரணமாக நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்த வண்ணம் உள்ளன. இந்த கொடூர கொரோனா வைரசுக்கு இதுவரை மட்டும் 1000 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 40 … Read more