#justnow:சட்டப்பேரவையில் இன்று…முக்கிய அறிவிப்புகளை வெளியிடும் முதல்வர் ஸ்டாலின்!

தமிழக சட்டப்பேரவை நான்கு நாட்கள் விடுமுறைக்கு பின் இன்று மீண்டும் கூடும் நிலையில்,இந்து சமய அறநிலையத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறவுள்ளது.அதன்படி எதிர்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு அமைச்சர் சேகர்பாபு மற்றும் அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் பதிலளித்து,பின்னர்,புதிய அறிவிப்புகளை வெளியிடவுள்ளனர். மேலும்,2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு மதிப்புக்கூட்டு வரி(திருத்த) சட்ட முன்வடிவு வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி அவர்களால் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.குமரியில் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்திற்கு நவீன படகுகள் வாங்குவது குறித்து … Read more

கோவில் அலுவலர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை எச்சரிக்கை..!

புதிய கோவில்களை துறை கண்காணிப்பு கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக அறிவுறுத்தல்களை இந்து சமய அறநிலைத்துறை வெளியிட்டது. அதில், விதிகளை மீறி செயல்படும் திருக்கோவில் உதவி ஆணையர் மற்றும் தலைமை எழுத்தர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கோவில் அலுவலர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.  

குட்நியூஸ்…இவர்களுக்கும் மானியம் – விண்ணப்பிக்குமாறு தமிழக அரசு அறிவிப்பு!

தமிழகத்தை சார்ந்த யாத்ரீகள் மானியம் பெற விண்ணப்பிக்குமாறு தமிழக அரசு  அறிவித்துள்ளது. 2021-2022 ஆம் நிதியாண்டில் சீனாவில் உள்ள மானசரோவர் மற்றும் நேபாளத்தில் உள்ள முக்திநாத் ஆகிய திருத்தலங்களுக்கு புனித யாத்திரை மேற்கொண்டு யாத்திரையை முழுமையாக நிறைவு செய்த, தமிழ்நாட்டை சேர்ந்த யாத்ரீகள் மானியம் பெற விண்ணப்பிக்குமாறு தமிழக அரசு அறிவிப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது: “2021-2022 ஆம் நிதியாண்டில் சீனாவில் உள்ள மானசரோவர் மற்றும் நேபாளத்தில் உள்ள … Read more

தமிழகத்தில் 3 தினங்களுக்குள் இதனைசெய்ய வேண்டும்;மீறினால் ஒழுங்கு நடவடிக்கை – அரசு உத்தரவு!

தமிழகத்தில் உள்ள முக்கிய திருக்கோயில்களில் வைக்கப்பட்டுள்ள  சிசிடிவி கேமிராக்களில் உள்ள குறைபாடுகளை 3 தினங்களுக்குள் சரிசெய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவு. இந்து சமய அறநிலையத்துறை ஒருங்கிணைந்த திருக்கோயில் மேலாண்மை திட்ட செயலாக்கத்தின் ஒருபகுதியாக தமிழகத்தில் உள்ள முக்கிய திருக்கோயில்களின் அன்றாட நிகழ்வுகளை கண்காணிப்பு கேமராக்கள் வழியாக நேரலையாக கண்காணித்திட ஆணையர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டு 20.01.2022 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. அதன்படி,கட்டுப்பாட்டு அறை பணிகள் நாள்தோறும் சிறப்பாக … Read more

மக்களே…இன்று இதற்கு அனுமதி இல்லை – இந்து சமய அறநிலையத்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அண்ணா நினைவு நாளையொட்டி இன்று வழிபாடு மற்றும் பொது விருந்துக்கு அனுமதி இல்லை என்று  இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு  விடுத்துள்ளது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் அண்ணா நினைவு நாளையொட்டி இன்று வழிபாடு மற்றும் பொது விருந்து அனுமதி இல்லை என்று  இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பில்,தமிழகத்தில் பிப்ரவரி 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரேகட்டமாக நடைபெற உள்ளது.இதனால் கடந்த 26-ஆம் தேதி முதல் … Read more

திருக்கோவில் குடமுழுக்கு – உரிய ஆவணங்கள் வழங்க இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு.!

திருக்கோவில் குடமுழுக்கு தொடர்பாக உரிய ஆவணங்கள் வழங்க இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு. இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், இந்து சமய அறநிலையத்துறையின் ஆளுகைக்குட்பட்ட பட்டியலைச் சேர்ந்த திருக்கோயில்களுக்கு திருக்குடமுழுக்கு நடத்திட ஆணையர் நிலையில் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. திருக்குடமுழுக்கு அனுமதி வேண்டி மண்டல இணை ஆணையர்களால் அனுப்பப்படும் முன்மொழிவில் முழுமையான ஆவணங்கள் இணைத்து அனுப்பப்படாததால் திருக்குடமுழுக்கு நடத்த அனுமதி வழங்குவதில் கால தாமதம் ஏற்படுகிறது என தெரிவிக்கப்ட்டுள்ளது. எனவே இதனை தவிர்க்கும் வகையில், … Read more

#BREAKING : கோயில்களை செம்மைப்படுத்த முதல்வர் தலைமையில் ஆலோசனை குழு அமைத்து அரசாணை வெளியீடு..!

அனைத்து இந்து கோயில்களிலும் பக்தர்களின் வசதியை மேம்படுத்தவும், கோயில்களின் பராமரிப்பை செம்மைப்படுத்துவதற்கும், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை குழு அமைத்து தமிழக அரசு அரசாணை. இந்து சமய அறநிலையத் துறையில், அனைத்து இந்து கோயில்களிலும் பக்தர்களின் வசதியை மேம்படுத்தவும், கோயில்களின் பராமரிப்பை செம்மைப்படுத்துவதற்கும், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, உயர்நிலைக் குழுவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைவராகவும், அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அவர்கள் துணைத் தலைவராகவும் நியமனம் … Read more

கோயில் நிலங்களை விற்க தற்காலிக தடை – இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு!

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில் நிலங்களை விற்க தற்காலிக தடை விதிப்பு. தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில் நிலங்களை விற்பனை செய்ய தடை விதித்து அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார். இதனிடையே, தமிழகம் முழுவதும் அரசுக்குச் சொந்தமான 44 ஆயிரம் திருக்கோவில்கள் உள்ளன. இந்தக் கோவில்களுக்குச் சொந்தமான நிலங்கள் மட்டும் சொத்துக்களை பட்டியலிட்டு, அதனை ஆக்கிரமித்துள்ளவர்களிடமிருந்து மீட்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள அரசுக்குச் சொந்தமான கோயில்களின் நிலங்கள் மற்றும் சொத்துக்கள் … Read more

#Breaking:நிலம் ஆக்கிரமித்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை – இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு!

சென்னை:கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து சார்நிலை அலுவலர்களுக்கும் இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின்கீழ் உள்ள கோயில் நிலங்களை மீட்க அரசு தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.அதன்படி,ஏராளமான ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து,கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் மற்றும் உடந்தையாக இருந்தவர்கள் மீது வழக்குபதிவு செய்து,குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஏற்கனவே … Read more

பிரசாதங்கள் தயாரிக்க ஆவின் பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் – அறநிலையத்துறை உத்தரவு!

சென்னை: ஜனவரி 1 ஆம் தேதி முதல் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோவில்களில் தயாரிக்கப்படும் பிரசாதங்கள் மற்றும் இதர சேவைகளில் அரசின் ஆவின் நிறுவனம் மூலம் தயாரிக்கப்படும் வெண்ணை மற்றும் நெய் பொருட்களை மட்டுமே கொள்முதல் செய்து பயன்படுத்த தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜனவரி 1 ஆம் தேதி முதல் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் தயாரிக்கப்படும் பிரசாதங்கள் மற்றும் இதர சேவைகளில் தமிழ்நாடு கூட்டுறவு உற்பத்தியாளர்கள் ஒன்றியம் லிமிடெட் … Read more