திருக்கோவில் குடமுழுக்கு – உரிய ஆவணங்கள் வழங்க இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு.!

திருக்கோவில் குடமுழுக்கு தொடர்பாக உரிய ஆவணங்கள் வழங்க இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு. இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், இந்து சமய அறநிலையத்துறையின் ஆளுகைக்குட்பட்ட பட்டியலைச் சேர்ந்த திருக்கோயில்களுக்கு திருக்குடமுழுக்கு நடத்திட ஆணையர் நிலையில் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. திருக்குடமுழுக்கு அனுமதி வேண்டி மண்டல இணை ஆணையர்களால் அனுப்பப்படும் முன்மொழிவில் முழுமையான ஆவணங்கள் இணைத்து அனுப்பப்படாததால் திருக்குடமுழுக்கு நடத்த அனுமதி வழங்குவதில் கால தாமதம் ஏற்படுகிறது என தெரிவிக்கப்ட்டுள்ளது. எனவே இதனை தவிர்க்கும் வகையில், … Read more

#BREAKING: நாளை முதல் வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி!

பிப்ரவரி 1 முதல் அனைத்து நாட்களிலும் வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி என்று முன்னர் கூறப்பட்ட நிலையில், தற்போது நாளை முதல் இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது. பிப்ரவரி 1 முதல் அனைத்து நாட்களிலும் வழிபாட்டு தலங்களிலும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்களில் வழிபாட்டுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுவதாகவும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி அனைத்து கோயில்களிலும் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் எனவும் இந்துசமய … Read more

கோயில்களுக்கான மானியத் தொகை உயர்வு – காசோலைகளை வழங்கிய முதலமைச்சர்!

உயர்த்தப்பட்ட கோயில்களின் அரசு மானியத்துக்கான காசோலையை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வழங்கினார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உயர்த்தப்பட்ட கோயில்களின் அரசு மானியத்துக்கான காசோலையை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வழங்கினார். அதன்படி, புதுக்கோட்டை சமஸ்தானத்துக்குட்பட்ட 225 கோயில்களின் அரசு மானியம் ரூ.1 கோடியில் இருந்து ரூ.3 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் 490 கோயில்களுக்கான அரசு மானியம் ரூ.3 கோடியில் இருந்து ரூ.6 கோடியாக அதிகரித்துள்ளது. இதற்கான காசோலையை முதலமைச்சர் நிர்வாகிகளுக்கு வழங்கினார். இந்த நிகழ்வில் … Read more

கோயில் நிலங்களை விற்க தற்காலிக தடை – இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு!

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில் நிலங்களை விற்க தற்காலிக தடை விதிப்பு. தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில் நிலங்களை விற்பனை செய்ய தடை விதித்து அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார். இதனிடையே, தமிழகம் முழுவதும் அரசுக்குச் சொந்தமான 44 ஆயிரம் திருக்கோவில்கள் உள்ளன. இந்தக் கோவில்களுக்குச் சொந்தமான நிலங்கள் மட்டும் சொத்துக்களை பட்டியலிட்டு, அதனை ஆக்கிரமித்துள்ளவர்களிடமிருந்து மீட்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள அரசுக்குச் சொந்தமான கோயில்களின் நிலங்கள் மற்றும் சொத்துக்கள் … Read more

#BREAKING: கோவில் நகை – 6 வாரங்களுக்கு முடிவு எடுக்க கூடாது!

கோவில் நகைகளை உருக்குவது தொடர்பாக 6 வாரங்களுக்கு எந்த முடிவும் எடுக்க கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவு. தமிழக கோவில்களில் உள்ள நகைகளை உருக்குவது தொடர்பாக 6 வாரங்களுக்கு எந்த முடிவும் எடுக்க கூடாது என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். கோவில் தங்கத்தை உருக்கி கட்டிகளாக மாற்றி வைப்பீடு வைப்பது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அறக்கட்டளை ஒன்று வழக்கு தொடுத்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த … Read more

அறங்காவலர்களை நியமிக்கும்வரை கோயில் நகைகளை உருக்கக்கூடாது – உயர்நீதிமன்றம் உத்தரவு

அறங்காவலர்களை நியமிக்கும் வரை கோயில் நகைகளை உருக்குவது தொடர்பாக முடிவெடுக்க கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவு. அறங்காவலர்களை நியமிக்கும் வரை கோயில் நகைகளை உருக்குவது தொடர்பாக எந்தவித முடிவெடுக்க கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அறங்காவலர்கள் நியமனத்திற்கு பிறகே கோயில் நகைகள் உருக்கப்படும் என தமிழக அரசு நீதிமன்றத்தில் உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளது. கோயில்களுக்கு காணிக்கையாக வழங்கபட்ட நகைகளை கணக்கெடுப்பு தடையில்லை என்றும் அறங்காவலர்களை நியமிக்காமல் கோயில் நகைகளை உருக்க தடைகோரிய வழக்கில் … Read more

இனி கோயில் இட வாடகையை ஆன்லைனில் செலுத்தலாம் – அமைச்சர்

சென்னை நுங்கப்பாக்கம் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் புதிய வசதியை துவக்கி வைத்த அமைச்சர் சேகர் பாபு. தமிழகத்தில் கோயில் இடத்துக்கான வாடகையை ஆன்லைனில் செலுத்தும் வசதியை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்தார். சென்னை நுங்கப்பாக்கம் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் புதிய வசதியை துவக்கி வைத்த அமைச்சர், கோயில் இடத்தில் உள்ள வாடைகைதாரர்கள் இணைய வழியில் வாடகை செலுத்தலாம் என தெரிவித்தார். இணையவழி வாடகை மூலம், எவ்வளவு … Read more

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உட்பட 600 பேர் மீது வழக்குப்பதிவு!

போராட்டம் நடத்திய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உட்பட 600 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு. சென்னையில் மண்ணடி காளிங்கம்பாள் கோயில் முன் போராட்டம் நடத்திய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொற்று நோய் தடுப்பு சட்டம் உள்பட 5 பிரிவுகளின் கீழ் அண்ணாமலை, இளைஞர் அணி தலைவர் வினோஜ் பி செல்வம் உள்ளிட்ட 600 பேர் மீது கடற்கரை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுபோன்று கோவையில் போராட்டம் நடத்திய கோவை … Read more

கொரோனா குறைந்தவுடன் வாரத்தில் 7 நாட்களும் கோயில் திறப்பு – அமைச்சர் சேகர் பாபு

கொரோனா குறைந்தவுடன் வாரத்தில் 7 நாட்களும் பக்தர்களுக்காக கோயில்கள் திறக்கப்படும் என்று அமைச்சர் சேகர் தகவல். தமிழகத்தில் கொரோனா பரவலால் இம்மாதம் இறுதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் கோயில்களில் வெள்ளி, சனி, ஞாயிறு என வாரத்தில் 3 நாட்களில் பக்கதர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை ஒரு சில அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, திரையரங்குகள் திறப்புக்கு மட்டுமே அனுமதி வழங்கிய அரசு, ஏன் … Read more