ஒன்றிய அரசுக்கு குஜராத்தான் கண்ணு – சு.வெங்கடேசன் எம்.பி

ஒன்றிய அரசுக்கு குஜராத்தான் கண்ணு. அந்த கண்ணுக்கு வெண்ணெய். தமிழ்நாட்டிற்கு சுண்ணாம்பு என சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட்.  கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள மாநிலங்களின் விளையாட்டு உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக மத்திய விளையாட்டு துறை நிதி ஒதுக்கியுள்ளது.  இத்திட்டத்தின் கீழ் 33 மாநிலங்களுக்கு 2754.28 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் விளையாட்டு உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக மத்திய விளையாட்டு துறை தமிழகத்திற்கு குறைவான நிதி ஒதுக்கியுள்ளதாக குற்றசாட்டுகள் எழுந்துள்ளது. அதன்படி, தமிழகத்திற்கு ரூ.33 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.  … Read more

தமிழக காவல் ஆய்வாளருக்கு மனித உரிமைக் குழு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தது!!

சிறுமுகை எஸ்ஆர்எஸ் நகரை சேர்ந்தவர் விஜயகுமார். பொறியாளரான இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். அவரது மனைவி அளித்த புகாரின் பேரில், 2019ல் துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்மீனாம்பிகை நிதி முறைகேடு, வரதட்சணை கொடுமை உள்ளிட்ட பல்வேறு ஐபிஎஸ் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விஜயகுமாரை கைது செய்ததார். விஜய்குமாருக்கு எதிரான ஆதாரங்களை மனித உரிமை ஆணையம் கேட்டது, அதை இன்ஸ்பெக்டர் மீனாம்பிகை தாக்கல் செய்யவில்லை. விசாரணைக் குழு முன்வைத்த கேள்விகளுக்கு அவளிடம் … Read more

சூடான கஞ்சி பானையில் தவறி விழுந்து பக்தர் உயிரிழப்பு!!

பழங்காநத்தம் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவிலுக்கு ஆடி இரண்டாவது வெள்ளிக்கிழமை (ஜூலை 29) சிறப்பு வழிபாடு செய்ய முத்துக்குமார் ஏ முருகன் சென்றபோது இந்த விபத்து நடந்துள்ளது. பூஜை முடிந்து பக்தர்கள் பிரசாதத்தை பயன்படுத்தி அம்மனுக்கு கஞ்சி தயார் செய்தனர். முத்துக்குமாரும் இன்னும் சில பக்தர்களும் சுமார் 6 பெரிய பாத்திரங்களில் கஞ்சியைக் காய்ச்சிக் கொண்டிருந்தபோது, அவருக்கு வலிப்பு ஏற்பட்டு கொதிக்கும் பாத்திரம் ஒன்றில் விழுந்து பலத்த தீக்காயம் ஏற்பட்டது. அவரது அலறல் சத்தம் … Read more

இலங்கை மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை அனுப்பிய தமிழக அரசு..

இலங்கை மக்களுக்காக இந்திய அரசும் மக்களும் ஒன்றிணைந்துள்ளனர். 40,000 மெட்ரிக் டன் அரிசி, 500 மெட்ரிக் டன் பால் பவுடர், 100 மெட்ரிக் டன் மருந்துகள் உள்ளிட்ட பொருட்களை தமிழக அரசு நன்கொடையாக இலங்கை அரசுக்கு இன்று வழங்கியது. இலங்கை மக்களுக்கு இதுபோன்ற அத்தியாவசிய பொருட்களை தமிழக அரசு முன்பு இரண்டு முறை அனுப்பியுள்ளது. இது மூன்றாவது முறையாகும். உணவு, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய மருந்துகள் போன்ற அடிப்படைத் தேவைகளை சமாளிக்க இலங்கைக்கு ரூ.123 கோடி மனிதாபிமான … Read more

ஒளியியல் மாயை: ஐராவதேஸ்வரர் கோவில் முதல் தாஜ்மஹால் வரை!!

பரந்த காட்சிகள், சிலிர்ப்பூட்டும் சாகசங்கள், வரலாற்றுச் சின்னங்கள், குளிர்ச்சியான கடற்கரைகள் மற்றும் அமைதியான மலைகள் இந்தியாவில் இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்தவையே. ஆனால், நீங்கள் அறிந்திராத சில புதிரான ஒளியியல் மாயைகளின் தாயகமாக இந்தியா உள்ளது. ஐராவதேஸ்வரர் கோவில், தமிழ்நாடு தஞ்சாவூர் மாவட்டம் , கும்பகோணம் பகுதியில் மறைந்திருக்கும் இக்கோயில் 11-12 ஆம் நூற்றாண்டுகளில் சோழர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. இந்த கோவிலில் உள்ள கைவினைத்திறன் மிகவும் அசாதாரணமானது. இது இந்தியாவின் பழமையான ஒளியியல் மாயைகளில் ஒன்றாகும். … Read more

அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்..!

அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அவரது குழுவுக்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் ட்வீட்.  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தொழில் புரிய எளிதான மாநிலங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளார். இந்த பட்டியலில் தொழில் புரிய எளிதான மாநிலங்கள் பட்டியலில் 14 இடத்திலிருந்து மூன்றாவது இடத்திற்கு தமிழ்நாடு முன்னேறியுள்ளது. பட்டியலில் டாப் சாதனையாளர்கள் பிரிவில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, பஞ்சாப், குஜராத், தெலுங்கானா மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன. இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர், பக்கத்தில், … Read more

இப்போது மோடி சொல்வதை எப்போதோ செய்துவிட்ட மாநிலம் தமிழ்நாடு – ஆளூர் ஷா நவாஸ்

இப்போது மோடி சொல்வதை எப்போதோ செய்துவிட்ட மாநிலம் தமிழ்நாடு என ஆளூர் ஷா நவாஸ் ட்வீட்.  பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், நேற்று குஜராத்தில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை காணொளி மூலம் திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், அடுத்த 10 ஆண்டுகளில் மருத்துவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்கிறது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு மருத்துவ கல்லூரி அமைக்க வேண்டும் என்பதை  மத்திய அரசு இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறது என தெரிவித்திருந்தார். இதுகுறித்து, … Read more

#Breaking:”இனி வரலாறு தமிழகத்தில் இருந்து எழுதப்படும்…7 இடங்களில் தொல்லியல் அகழாய்வுகள்” – முதல்வர் அறிவிப்பு!

சென்னை:நடப்பு ஆண்டில் தமிழகத்தில் 7 இடங்களில் தொல்லியல் அகழாய்வுகள் நடைபெறவுள்ளன என்று முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு. தமிழகத்தில் நடப்பு ஆண்டில் ஏழு இடங்களில் தொல்லியல் அகழாய்வுகள் மற்றும் சங்ககாலக் கொற்கைத் துறைமுகத்தினை அடையாளம் காண முன்களப் புல ஆய்வு நடைபெறும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக,முதல்வர் கூறியதாவது: “தமிழ் நிலமானது மிகத்தொன்மை வாய்ந்தது.தமிழின் தொன்மையையும், தமிழரின் பண்பாட்டையும் அறிவியல்பூர்வமாக நிறுவ வேண்டுமானால் முறையான அகழாய்வுகள் அவசியமாகும்.அண்மைக்காலமாக,கீழடி, அழகன்குளம்,கொற்கை,சிவகளை,ஆதிச்சநல்லூர், கொடுமணல், மயிலாடும்பாறை, கங்கைகொண்ட சோழபுரம் ஆகிய … Read more

‘நிதி ஆயோக்’ சுகாதாரத்தில் சிறந்த மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 2-வது இடம்..!

இந்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பு ஒட்டுமொத்த சுகாதார செயல்பாட்டில் சிறப்பாக செயல்பட்ட மாநிலங்களின் தரவரிசை பட்டியல் தயாரித்துள்ளது. இந்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பு ஒட்டுமொத்த சுகாதார செயல்பாட்டில் சிறப்பாக செயல்பட்ட மாநிலங்களின் தரவரிசை பட்டியல் தயாரித்துள்ளது. இந்த பட்டியல், சுகாதார செயல்பாட்டின் முக்கிய அம்சங்கள் அடங்கிய 24 அளவுகோல் அடிப்படையில் நான்காவது ஆண்டாக உருவாக்கப்பட்டுள்ளது. இப்பட்டியலில் முதலிடத்தில் கேரளாவும், இரண்டாவது இடத்தில் தமிழ்நாடும், மூன்றாவது இடத்தில் தெலுங்கானாவும் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில் பெரிய மாநிலமான … Read more

மக்களே தடுப்பூசி போடுங்க…தமிழகம் முழுவதும் இன்று 50 ஆயிரம் இடங்களில் 8 வது கொரோனா மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்!

தமிழகம்:சென்னை மாநகராட்சி பகுதிகளில் மட்டும் 2000 இடங்களில் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் நேற்று 1,500 நடமாடும் மருத்துவ முகாம்கள் உள்பட 6,000 மெகா சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்றது. சென்னை ரிப்பன் மாளிகையில் மருத்துவ முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.அமைச்சர் சேகர்பாபு மற்றும் தலைமைச்செயலாளர் இறையன்பு உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.இதனையடுத்து,செய்தியாளர்களிடம் நேற்று பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் கூறியதாவது: “சென்னையில் இன்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட … Read more