கனமழை எச்சரிக்கை – மாவட்டம் நிர்வாகங்களுக்கு தமிழக அரசு சுற்றறிக்கை

கனமழை எச்சரிக்கை காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும் தமிழக அரசு சார்பாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில்  காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.அடுத்து வரும் நாட்களில் காற்றழுத்த தாழ்வு நிலையானது, வலுவடைந்து தமிழக மற்றும் புதுச்சேரியை நோக்கி நகரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்து வரும் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, கனமழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும், சென்னை … Read more

மீண்டும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு- இந்திய வானிலை மையம் தகவல்.!

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் மீண்டும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல். ஏற்கனவே தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த வளிமண்டல சுழற்சி வலுப்பெற்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சீர்காழியில் ஒரேநாளில் 44செ.மீ மழை பதிவாகியிருக்கிறது. மேலும் இந்த … Read more

கனமழை எச்சரிக்கை – எந்தெந்த மாவட்டங்களில் கல்வி நிலையங்களுக்கு இன்று விடுமுறை?.

கனமழை எச்சரிக்கை காரணமாக மேலும் சில மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர், கடலூர், மயிலாடுதுறை, நீலகிரி, திருச்சி,  திருவாரூர், அரியலூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மேலும் தஞ்சை, கரூர், புதுக்கோட்டை, சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், தருமபுரி, திருவண்ணாமலை,கோவை, திண்டுக்கல்,தேனி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, மதுரை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி … Read more

தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்.

நாளை மறுநாள் திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக்கழக பட்டளிப்பு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி தமிழகத்தின் வருகை தருகிறார். திண்டுக்கல்லில் உள்ள காந்திகிராம பல்கலைக்கழகத்தின் 36 வது பட்டமளிப்பு விழா மற்றும் காந்திகிராம நிறுவனத்தின் பவள விழாவை ஒட்டி நடைபெறும் விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி தமிழகம் வருகிறார்.விழாவில் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரை ஆற்ற உள்ளார். தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி,தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் எல் முருகன் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்க உள்ளனர். … Read more

திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் – ₹ 1.41 கோடி அபராதம்.

திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் அமல்படுத்தபட்ட 10 நாட்களில், சென்னையில் ₹.1.41 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு திருத்தங்களுடன் மோட்டார் வாகன சட்டம் சமீபத்தில் அமலுக்கு வந்தது. இது குறித்து சமூகத்தின் பல்வேறு தரப்பினரும் தங்களது ஆதரவையும், எதிர்ப்பையும் தெரிவித்து வந்தனர். திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் அக்டோபர் 26 தேதி அமல்படுத்தபட்டது. சென்னையில், இச்சட்டம் நடைமுறைக்கு வந்த 10 நாட்களில், 17,453 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை 1.41 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, அதில் … Read more

தமிழக அரசின் நீட் பயிற்சி – பாமக வரவேற்பு

     அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு சார்பாக அளிக்கப்படும் நீட் பயிற்சிக்கு பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.       அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகள் நீட் உள்ளிட்ட பல்வேறு போட்டி தேர்வுகளை எதிர்கொள்ள தமிழக அரசு பயிற்சி வகுப்புகளை நடத்திவருகிறது.இந்த வருடத்திற்கான வகுப்புகள் நவம்பர் மூன்றாவது வாரத்தில் தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை … Read more

“தென்னகத்து போஸ்” முத்துராமலிங்கத் தேவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்,அமைச்சர்கள் பங்கேற்பு !

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அடுத்துள்ள பசும்பொன் கிராமத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 115 ஆம் ஆண்டு ஜெயந்தி இன்று நடைபெறுகிறது. பசும்பொன்னில் நடக்கும் இன்றைய விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொள்ளவில்லை. ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில் ” கொடுங்கோல் சட்டத்துக்கு எதிராக மக்களை அணிதிரட்டியவர் ! ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் நேதாஜியின் கரத்தை வலுப்படுத்தியவர்! “தென்னகத்து போஸ்” ஐயா பசும்பொன் திருமகனார் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் தீரத்தையும், தியாகத்தையும், நற்பணிகளையும் நன்றியோடு நினைவுகூர்கிறேன்!” என்று தெரிவித்துள்ளார். கொடுங்கோல் … Read more

தெலுங்கானா ஆளுநராக 3 ஆண்டுகள் நிறைவு.! புத்தக கண்காட்சியில் பங்கேற்ற தமிழிசை.!

தமிழகத்தில் நான் மூக்கையும் நுழைப்பேன், வாயையும் நுழைப்பேன். வாலையும் நுழைப்பேன். காலையும் வைப்பேன். என்னை யாரும் கேள்வி கேட்க முடியாது என தமிழிசை சவுந்தராஜன் பேசினார்.  தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தற்போது தெலுங்கானா ஆளுநராகவும், புதுசேரி துணை நிலை ஆளுநராகவும் பதவி வகித்துவ வருகிறார். இதில், தெலுங்கானா ஆளுநராக அவர் பதவியேற்று இன்றோடு மூன்றாண்டுகள் ஆகிறது. அதனை குறிப்பிடும் வகையில், புத்தக கண்காட்சி நடைபெற்றது. அதில் பேசிய தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் … Read more

சங்கரலிங்கனாரை நேரில் சந்தித்து உறுதி அளித்தபடி தமிழ்நாடு என்று பெயர் சூட்டினார் பேரறிஞர் அண்ணா – முதல்வர் ட்வீட்

சங்கரலிங்கனாரை நேரில் சந்தித்து உறுதி அளித்தபடி தமிழ்நாடு என்று பெயர் சூட்டினார் பேரறிஞர் அண்ணா என முதல்வர் ட்வீட்.  தியாகி சங்கரலிங்கனாரின் நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இதுகுறித்து ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘தாய்த் தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வலியுறுத்தி உண்ணாநிலை இருந்து உயிர் ஈந்த தியாகி சங்கரலிங்கனாரின் நினைவுநாள்! அவரது தியாகத்தைப் போற்றுவோம்! சங்கரலிங்கனாரை நேரில் சந்தித்து உறுதி அளித்தபடி தமிழ்நாடு என்று பெயர் சூட்டினார் … Read more

திருமணத்தை நிறுத்த காதலனை அழைத்த மணப்பெண்!! தாலி கட்ட முயன்ற காதலன்!!

இன்று காலை திருமணம் நடக்கவிருந்த நிலையில் காதலி தன் திருமணத்தை நிறுத்தி, தன்னை அழைத்துச் செல்லும்படி காதலனுக்கு குறுஞ்செய்தி அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. காலையில் திருமண மண்டபத்தை அடைந்த 24 வயது காதலன், மேடையில் நுழைந்து, மாப்பிள்ளையிடம் இருந்து தாலியை பறித்து, மணப்பெண்ணின் கழுத்தில் கட்ட முயன்றார். ஆனால் அங்கிருந்தவர்கள் இளைஞனை தடுத்து நிறுத்தி தாக்கினர். இச்சம்பவம் சென்னையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது, சம்பவத்திற்குப் பிறகு, போலீசார் வரவழைக்கப்பட்டனர். விசாரணையில் அந்த இளைஞனும் மணப்பெண்ணும் ஒன்றாக … Read more