குடியரசு துணை தலைவர் பதவி – ஓபிஎஸ் ட்வீட்..!

திரு.ஜக்தீப் தன்கர் அவர்களுக்கு அஇஅதிமுக தனது முழு ஆதரவினையும் நல்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என ஓபிஎஸ் ட்வீட். நாட்டின் தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் ஜூலை 24-ம் தேதி நிறைவடைகிறது. இதன் காரணமாக இந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் கடந்த மாதம் வெளியிட்டிருந்தது. அதன்படி, நாட்டின் 15-வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், … Read more

மொத்த சொத்தையும் தானமாக கொடுக்கும் பில் கேட்ஸ்..? அந்த இடம் அவருக்கு பிடிக்கவில்லையாம்..

பில் கேட்ஸுக்கு தான் உலக பணக்காரர் வரிசையில் இருப்பது சுத்தமாக பிடிக்காதாம். மேலும், வருங்காலத்தில் தமது குடும்பம் தொண்டு நிறுவனங்கள் மூலம் உதவி செய்வதில் தான் ஈடுபாட உள்ளது எனப்தையும் தெரிவித்துள்ளார்.  உலக பணக்காரர் வரிசையில் எப்போதும் டாப் 10இல் சிக்கி கொள்கிரார் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ். இவரது ஒரு நிமிட வருமானம் மட்டுமே இந்திய மதிப்பில் 6 லட்சம் என கூறப்படுகிறது. பில் கேட்ஸ் சொத்து மதிப்பு மட்டும் இந்திய மதிப்பில் 8 லட்சம் … Read more

#BREAKING: கள்ளக்குறிச்சி கலவரம் திட்டமிட்ட வன்முறை.. மறு உடல் கூராய்வுக்கு உத்தரவு – உயர்நீதிமன்றம்

கள்ளக்குறிச்சியில் உயிரிழந்த மாணவியின் உடலை மறு கூராய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. கள்ளகுறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவியின் உயிரிழப்பை கண்டித்து நடந்த போராட்டம் கலவரமாக மாறியது. இந்த கலவரத்தில் ஈடுபட்டவர்களில் ஏற்கனவே 300க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று 108 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மாணவியின் மர்ம மரணம் தொடர்பாக பள்ளியின் தாளாளர், செயலாளர், முதல்வர் மற்றும் 2 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். … Read more

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியது!

பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. 14 நாட்கள் நடைபெறும் கூட்டத் தொடரில் 24 மசோதாக்களை தாக்கல் செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளாது. மேலும், அக்னிபாத், எரிபொருள் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளது. இதற்கிடையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரதமர் மோடி, பாராளுமன்றத்தில் திறந்த மனதுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், தேவைப்பட்டால் விவாதம் … Read more

ஜி.எஸ்.டி வரி அதிகரிப்பு.. முக்கிய பொருட்களின் விலை கிடுகிடு உயர்வு… முழு விவரம் இதோ…

புதிய ஜி.எஸ்.டி வரி அமல்படுத்துதல் காரணமாக முக்க்கிய பொருட்களின் விலை இன்று முதல் ஏற்றம் கண்டுள்ளது.  இன்று முதல் நுகர்வோர் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி அதிகரிப்பு காரணமாக விலை உயர்ந்துள்ளது. முன்கூட்டியே பேக் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள், மருத்துவமனை அறைகள் உள்ளிட்ட பல அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் இன்று முதல் அதிகரிக்கப்பட உள்ளன. கடந்த மாதம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற 47வது ஜிஎஸ்டி கூட்டத்தில், ஏராளமான பொருட்கள் மற்றும் … Read more

ஜீன்ஸ் அணியக்கூடாது – கட்டுப்பாடு விதித்த கணவனை கத்தியால் குத்தி கொன்ற மனைவி..!

ஜார்கண்டில் ஜீன்ஸ் அணியக்கூடாது என்று சொன்ன கணவரை கத்தியால் குத்தி கொன்ற மனைவி.  ஜார்கண்ட் மாநிலம் ஜம்தாராவில் உள்ள, ஜோர்பிதா கிராமத்தில்,  புஷ்பா ஹெம்ப்ரோம் என்ற பெண், ஜீன்ஸ் அணிந்து கோபால்பூர் கிராமத்தில் ஒரு கண்காட்சியைப் பார்க்கச் சென்றுள்ளார். அவர் வீடு திரும்பிய பின், கணவன் – மனைவி இருவருக்கும் இடையே ஜீன்ஸ் அணிந்து சென்றது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதத்தில் கோபமடைந்த பெண், கணவனை கத்தியால் குத்தியுள்ளார். இதனையடுத்து ,காயமடைந்தவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். … Read more

27 வயது அமெரிக்க பெண் டெல்லியில் கடத்தல்.? பெற்றோரிடம் பணம் பறிக்க நடந்த சதி அம்பலம்…

டெல்லியில் தங்கியுள்ள 27 வயது அமெரிக்க பெண் தான் கடத்தப்பட்டதாக தனது பெற்றோரை ஏமாற்றி பணம் பறிக்க முயன்றுள்ளார்.  டெல்லியில் 27 வயது அமெரிக்க பெண் ஒருவர் தனது ஆண் காதலருடன் தங்கி வந்துள்ளார். சுற்றுலா விசாவில் வந்த இவர் இங்கு தங்கி இருக்கையில் செலவு செய்ய பணம் தேவைப்பட்டதாக தெரிகிறது. உடனே யோசித்த அந்த பெண், தன்னை யாரோ கடத்திவிட்டார்கள், என்னை ஓர் இடத்தில் அடைத்து வைத்து இருக்கிறார்கள். என்னை துன்புறுத்துகிறார்கள் என தனது பெற்றோர்களுக்கு … Read more

கள்ளக்குறிச்சி கலவரம்: அதிமுக ஐடி பிரிவைச் சேர்ந்த இருவர் கைது!

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் வன்முறையை துண்டியதாக பெரம்பலூர் மாவட்ட அதிமுக ஐடி பிரிவைச் சேர்ந்த இருவர் கைது. கள்ளகுறிச்சி மாவட்டம் சின்னசேலம் கன்னியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்த வந்த மாணவி ஶ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில், மாணவியின் மரணத்திற்கு நீதிகேட்டு நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. கலவரத்தில் இதுவரை 329 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 10 க்கு மேற்பட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவி மர்ம மரணம் தொடர்பாக பள்ளியின் … Read more

தமிழகத்தில் மட்டும் இரவின் நிழல் எத்தனை கோடி வசூல் தெரியுமா.?

ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே தமிழ் சினிமாவில் வித்தியாசமான படங்களை இயக்கியும், நடித்தும் ரசிகர்களுக்கு மத்தியில் பிரபலமாகி வருபவர் பார்த்திபன். இவர் இயக்கி, நடித்த, ஒத்த செருப்பு திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று பல விருதுகளை குவித்தது. இந்த படத்தை தொடர்ந்து இவர் “இரவின் நிழல்” என்ற படத்தை இயக்கியுள்ளார். வரலக்ஷ்மி சரத்குமார், பிரியங்கா ரூத் பிரிஜிடா சாகா ஆனந்த கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபத்திரத்தில் நடித்துள்ளார்கள். உலகின் முதல் நான் லீனியர் திரைக்கதை … Read more

#BREAKING : இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு போலீஸ் சம்மன்…!

அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 11ம் தேதி நடந்த கலவரம் தொடர்பாக இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு ராயபேட்டை காவல்நிலைய போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். கடந்த 11-ஆம் தேதி, அதிமுக தலைமை அலுவலகம் அருகே இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதனிடையே,அதிமுக தலைமை அலுவலகத்துக்குள் ஓபிஎஸ் அவரது ஆதரவாளர்களுடன் அத்துமீறி நுழைந்ததாக இபிஎஸ் தரப்பில் புகார் அளிக்கப்பட்டதன் அடிப்படையில் ராயப்பேட்டை காவல்நிலையத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதனால்,பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னை ராயப்பேட்டையிலுள்ள … Read more