#BREAKING: கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மரணம் – மேலும் இருவர் கைது!

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் தொடர்பாக மேலும் 2 பேரை கைது செய்தது சிபிசிஐடி. கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மரணம் தொடர்பாக மேலும் 2 பேர் சிபிசிஐடி போலீசால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சங்கராபுரம் பகுதியை சேர்ந்த கார்த்திக் மற்றும் ராஜ்குமார் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனிடையே, கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த வழக்கில் பள்ளி நிர்வாகிகள் உள்பட 5 பேருக்கு ஒரு நாள் சிபிசிஐடி காவல் விதிக்கப்பட்டது. 3 … Read more

#BREAKING: கள்ளக்குறிச்சி மாணவி மரணம் – 5 பேருக்கு ஒரு நாள் சிபிசிஐடி காவல்!

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழந்த வழக்கில் நிர்வாகிகள் உள்பட 5 பேருக்கு ஒரு நாள் சிபிசிஐடி காவல். கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த வழக்கில் நிர்வாகிகள் உள்பட 5 பேருக்கு ஒரு நாள் சிபிசிஐடி காவல் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 3 பள்ளி நிர்வாகிகள், 2 ஆசிரியைகளை ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிபிசிஐடி ஒருநாள் மட்டும் காவலில் எடுத்து விசாரிக்க விழுப்புரம் மாவட்டம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. … Read more

#BREAKING: மகளின் உடலை பெற்றுக்கொள்கிறோம் – மாணவியின் பெற்றோர் சம்மதம்!

கள்ளக்குறிச்சி மாணவியின் உடலை நாளை பெற்றுக் கொள்ளவதாக உயர்நீதிமன்றத்தில் பெற்றோர் சம்மதம். கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி உடல் ஒப்படைப்பு தொடர்பாக இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. அப்போது, மாணவி உடல் கூராய்வு அறிக்கையை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவனை ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. பிரேத பரிசோதனை அறிக்கைகளை 3 மருத்துவர்கள் அடங்கிய குழு ஆராய வேண்டும் என்றும் பிரேத பரிசோதனையின் போது எடுக்கப்பட்ட வீடியோ பதிவை ஜிப்மரில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதி … Read more

கண்ணியமாக இறுதிச் சடங்கை நடத்துங்க, மகளின் ஆன்ம இளைப்பாறட்டும் – உயர்நீதிமன்றம்

நாளை காலை 11 மணிக்குள் மாணவியின் உடலை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவு. கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி மாணவி உயிரிழப்பு மற்றும் உடல் ஒப்படைப்பு தொடர்பாக இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. அப்போது, மாணவியின் உடல் மறு கூராய்வு உத்தரவில் உச்சநீதிமன்றம் தடையிடாததால் ஏற்கனவே, உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை திரும்ப பெற போவதில்லை. மாணவியின் உடலை வைத்து பந்தயம் கட்டாதீர்கள் என உயர்நீதிமன்றம் நீதிபதி பெற்றோருக்கு அறிவுறுத்தினார். நீதிமன்றம் உத்தரவிட்டும் மாணவியின் உடலை … Read more

#BREAKING: கள்ளக்குறிச்சி பள்ளியில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை!

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் காவல்துறை சிறப்பு புலனாய்வு குழு விசாரணை. கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவியின் மரணம் தொடர்பாக நடந்த கலவரத்தை விசாரிக்க 18 பேர் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டிருந்தார். 6 டிஎஸ்பி-க்கள், 9 காவல் ஆய்வாளர்கள் மற்றும் 3 சைபர் கிரைம் பிரிவில் பணிபுரியும் அதிகாரிகள் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். மேலும், சின்னசேலம் போலீசார் பதிவு செய்த 3 குற்ற வழக்குகள், அது தொடர்பான ஆவணங்கள் இந்த குழுவிடம் … Read more

#BREAKING: இன்றே இறுதிச்சடங்கு..மாணவியின் உடலை பெற்றுக்கொள்ள பெற்றோர் சம்மதம்?

மாணவியின் உடலை மதியம் 2 மணிக்குள் பெற்றுக் கொள்ள பெற்றோர் சம்மதம் என தகவல். கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவியின் உடலை பெற்றுக்கொள்ள அவரது பெற்றோர் சம்மதம் தெரிவித்தாக கூறப்படுகிறது. மறு பிரேத பரிசோதனை முடிந்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள மாணவியின் உடலை மதியம் 2 மணிக்குள் பெற்றுக் கொள்ள பெற்றோர் சம்மதம் என தகவல் வெளியாகியுள்ளது. கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் தனியார் பள்ளியில் உயிரிழந்த மாணவியின் உடல் மறுகூராய்வு செய்யப்பட்டு தற்போது … Read more

#BREAKING: கள்ளக்குறிச்சி மாணவியின் தந்தை மனு தள்ளுபடி – உச்சநீதிமன்றம்

கள்ளக்குறிச்சி மாணவியின் மரணம் தொடர்பான தந்தையின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கள்ளக்குறிச்சி மாணவியின் உடல் மறுபிரேத பரிசோதனை தொடர்பாக தந்தை ராமலிங்கம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மனுவில் 3 மருத்துவர்கள் மறு பிரேத பரிசோதனை செய்யும்போது தங்கள் தரப்பு மருத்துவரும் உடனிருக்க வேண்டும் என்று தங்கள் மருத்துவரை சேர்க்கும் வரை மறுபிரேத பரிசோதனை நடத்த தடை விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தார். இதனைத்தொடர்ந்து, கள்ளக்குறிச்சி மாணவியின் உடல் மறுகூராய்வை நிறுத்தி வைக்க உத்தரவிட … Read more

#BREAKING: பெற்றோர் வரவில்லை? மாணவியின் உடல் மறு கூராய்வு தொடங்கியது!

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் மாணவியின் உடல் மறு பிரேத பரிசோதனை தொடங்கியது. கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் மரணமடைந்த மாணவியின் உடல் மறுகூராய்வு பணி தொடங்கியுள்ளது. கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் மாணவியின் உடல் மறு பிரேத பரிசோதனை தொடங்கி நடைபெற்று வருகிறது. மாணவி உடல் பிற்பகல் ஒரு மணிக்கு மறுகூராய்வு செய்யப்படும் என கூறியிருந்த இருந்த நிலையில், தற்போது தான் தொடங்கியுள்ளது. மருத்துவர்கள் ஜூலியானா ஜெயந்தி, கீதாஞ்சலி மற்றும் கோகுலரமணன் மறு பிரேத பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை … Read more

#BREAKING: பிற்பகல் 1 மணிக்கு மாணவியின் உடல் மறுகூராய்வு.. பெற்றோர் இல்லாமல் நடத்த அனுமதி!

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உடலை பெற்றோர் இல்லாமல் மறுகூராய்வு செய்ய உயர்நீதிமன்றம் அனுமதி. கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் மாணவி உடல் பிற்பகல் ஒரு மணிக்கு மறுகூராய்வு செய்யப்படும் என மருத்துவமனை டீன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மறுகூராய்வு செய்வது தொடர்பான நோட்டிஸ், மாணவியின் பெற்றோர் வீட்டில் ஒட்டப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவின்படி, மறு உடற்கூராய்வு செய்யும் இடத்தில் பெற்றோர் இருக்கலாம் என்றும் நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கள்ளக்குறிச்சியில் உயிரிழந்த மாணவியின் மறு உடற்கூராய்வை பெற்றோர் இல்லாமலே நடத்த சென்னை … Read more

#BREAKING: மறுபிரேத பரிசோதனைக்கு தடையில்லை – உச்சநீதிமன்றம்

கள்ளக்குறிச்சி மாணவியின் உடல் மறுகூராய்வுக்கு தடையில்லை என உச்சநீதிமன்றம் உத்தரவு. மறுபிரேத பரிசோதனை விவகாரத்தில் கள்ளக்குறிச்சி மாணவியின் தந்தை ராமலிங்கம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனுவில் 3 மருத்துவர்கள் மறு பிரேத பரிசோதனை செய்யும்போது தங்கள் தரப்பு மருத்துவரும் உடனிருக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். இந்த வழக்கை விரைவாக விசாரணைக்கு எடுக்க தலைமை நீதிபதி அமர்வில் மாணவியின் தந்தை முறையிட்டார். இதனைத்தொடர்ந்து, கள்ளக்குறிச்சி மாணவியின் உடல் மறுகூராய்வை இன்று நிறுத்தி வைக்க உத்தரவிட … Read more