#BREAKING: கள்ளக்குறிச்சி மாணவி மரணம் – 5 பேருக்கு ஒரு நாள் சிபிசிஐடி காவல்!

#BREAKING: கள்ளக்குறிச்சி மாணவி மரணம் – 5 பேருக்கு ஒரு நாள் சிபிசிஐடி காவல்!

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழந்த வழக்கில் நிர்வாகிகள் உள்பட 5 பேருக்கு ஒரு நாள் சிபிசிஐடி காவல்.

கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த வழக்கில் நிர்வாகிகள் உள்பட 5 பேருக்கு ஒரு நாள் சிபிசிஐடி காவல் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 3 பள்ளி நிர்வாகிகள், 2 ஆசிரியைகளை ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிபிசிஐடி ஒருநாள் மட்டும் காவலில் எடுத்து விசாரிக்க விழுப்புரம் மாவட்டம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நாளை நண்பகல் 12 மணிக்கு 5 பேரையும் மீண்டும் ஆஜர்படுத்த நீதிபதி புஷ்பராணி உத்தரவிட்டுள்ளார். இதனிடையே, கடந்த 12-ஆம் தேதி தனியார் பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த 12-ஆம் வகுப்பு மாணவி மர்ம முறையில் உயிரிழந்தார். மாணவி உயிரிழந்த வழக்கில் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி விசாரித்து வரும் நிலையில், தற்போது பள்ளி மாணவி உயிரிழந்த வழக்கில் நிர்வாகிகள் உள்பட 5 பேருக்கு ஒரு நாள் சிபிசிஐடி காவல் விதிக்கப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *