#Oscars2023: யார் யாருக்கு என்னென்ன ஆஸ்கர் விருது...? வெற்றி பெற்றவர்களின் முழு பட்டியல் இதோ.!

Mar 13, 2023 - 06:15
 0  1

95-வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிரமாண்டமாக தொடங்கி நடந்து முடிந்துள்ளது. இந்திய நேரப்படி இன்று காலை 5.30 மணி அளவில் தொடங்கப்பட்டு 9 மணி அளவில் முடிந்தது. இந்த விழாவில் பல பிரபலங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

[caption id="attachment_611859" align="aligncenter" width="1200"] oscars 2023 [Image Source : Twitter][/caption]இந்த நிலையில், 95-வது ஆஸ்கர் விருது விழாவில் யார் யாருக்கு என்னென்ன விருது எந்தெந்த படத்திற்கு என்னென்ன விருது வழங்கப்பட்டுள்ளது என்பதற்கான முழு விவரத்தை பற்றி பார்க்கலாம்.

2023 ஆஸ்கார் விருதுகள் வென்றவர்களின் முழு பட்டியல்

சிறந்த படம் (Best movie)

சிறந்த திரைப்படத்திற்கான 95-வது ஆஸ்கர் விருதை சீன திரைப்படமான  ‘எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’  (‘Everything Everywhere All at Once’) திரைப்படம் வென்றுள்ளது.

சிறந்த இயக்குனர்  (Best Director)

சிறந்த இயக்குனருக்கான விருதை டேனியல் குவான் மற்றும் டேனியல் ஷீனெர்ட் ‘எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’  (‘Everything Everywhere All at Once’) திரைப்படத்தை இயக்கியதற்காக வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த நடிகர் (Best Actor)

சிறந்த நடிகருக்கான விருதை (The Whale) தி வேல் திரைப்படத்திற்காக நடிகர் பிரெண்டன் ஃப்ரேசருக்கு வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த நடிகை ( Best Actress) 

சிறந்த நடிகைக்கான விருதை ‘எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’  (‘Everything Everywhere All at Once’) படத்தில் நடித்ததற்காக நடிகை மைக்கேல் யோ வென்றுள்ளார்.

சிறந்த துணை நடிகர் ( Best Supporting Actor) 

சிறந்த துணை நடிகைக்கான விருதை ‘எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’  (‘Everything Everywhere All at Once’) படத்தில் நடித்ததற்காக நடிகை கே ஹுய் குவானுக்கு வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த எழுத்து (அசல் திரைக்கதை) (Best Writing (Original Screenplay)

சிறந்த அசல் திரைக்கதைக்கான விருதை டேனியல் குவான் மற்றும் டேனியல் ஷீனெர்ட், ‘எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’  (‘Everything Everywhere All at Once’) படத்துக்காக வாங்கியுள்ளனர்.

சிறந்த எழுத்து (தழுவல் திரைக்கதை) Best Writing (Adapted Screenplay)

சிறந்த எழுத்து (தழுவல் திரைக்கதை)-கான விருதை சாரா பாலி வுமன் டாக்கிங் ( Women Talking) படத்திற்காக வென்றுள்ளார்.

சிறந்த அனிமேஷன் திரைப்படம் (Best Animated Feature Film)

சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான விருதை கில்லர்மோ டெல் டோரோ வின் பினோச்சியோ ( Guillermo del Toro's Pinocchio) திரைப்படம் வென்றுள்ளது.

சிறந்த சர்வதேச திரைப்படம் ( Best International Feature Film)

சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான விருதை (All Quiet on the Western Front) ஆல் குய்ட் ஒன் தி வெஸ்டர்ன் பிரண்ட் திரைப்படம் வென்றுள்ளது.

சிறந்த ஆவணப்படம் (Best Documentary Feature)

சிறந்த ஆவணப்படத்திற்கான விருதை நவல்னி (Navalny) திரைப்படம் வென்றுள்ளது.

சிறந்த படத்தொகுப்பு ( Best Film Editing) 

சிறந்த எடிட்டருக்கான விருதை ‘எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’  (‘Everything Everywhere All at Once’) படத்தில் பணியாற்றிய பால் ரோஜர்ஸ் வென்றுள்ளார்.

சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு ( Best Production Design) 

சிறந்த தயாரிப்பு வடிவமைப்புக்கான விருதை கிறிஸ்டியன் எம். கோல்ட்பெக் மற்றும் எர்னஸ்டின் ஹிப்பர், ஆகியோர் ‘எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’  (‘Everything Everywhere All at Once’) படத்திற்காக வென்றுள்ளனர்.

சிறந்த ஒலி (Best Sound)

சிறந்த ஒலிக்கான ஆஸ்கர் விருதை மார்க் வீன்கார்டன், ஜேம்ஸ் எச். மாதர், அல் நெல்சன், கிறிஸ் பர்டன் மற்றும் மார்க் டெய்லர் ஆகியோர் "டாப் கன்: மேவரிக்" திரைப்படத்திற்காக வென்றனர்.

சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்(Best Visual Effects)

சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்க்கான ஆஸ்கர் விருது, ஜோ லெட்டரி, ரிச்சர்ட் பனேஹாம், எரிக் சைண்டன் மற்றும் டேனியல் பாரெட் ஆகியோருக்கு "அவதார் தி வே ஆஃப் வாட்டர்" திரைப்படத்திற்காக வழங்கப்பட்டது.

சிறந்த ஒளிப்பதிவு(Best Cinematography)

சிறந்த ஒளிப்பதிவுக்கான ஆஸ்கர் விருதை, "ஆல் கொயட் ஆன் தி வெஸ்டர்ன் பிரன்ட்" திரைப்படத்திற்காக ஜேம்ஸ் பிரென்ட் வென்றுள்ளார்.

சிறந்த இசை (Original Song)

சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கர் விருதை, "RRR" திரைப்படத்தில் இடம்பெற்ற "நாட்டு நாட்டு" பாடலுக்காக இசையமைப்பாளர் கீரவாணி, மற்றும் பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆகியோர் வென்றனர்.

சிறந்த இசை (Original Score)

சிறந்த இசை ஒரிஜினல் ஸ்கோருக்கான ஆஸ்கர் விருது, "ஆல் கொயட் ஆன் தி வெஸ்டர்ன் பிரன்ட்" திரைப்படத்திற்காக வோல்கர் பெர்டெல்மேன்-க்கு வழங்கப்பட்டது.

சிறந்த ஆடை வடிவமைப்பு (Best Costume Design)

சிறந்த ஆடை வடிவமைப்புக்கான ஆஸ்கர் விருதை "பிளாக் பாந்தர் வகாண்டா ஃபாரெவர்" திரைப்படத்திற்காக, ரூத் இ. கார்ட்டர் வென்றுள்ளார்.

சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம் (Best Makeup and Hairstyling)

சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரத்திற்கான ஆஸ்கர் விருது, "தி வேல்" திரைப்படத்திற்காக அட்ரியன் மோரோட், ஜூடி சின் மற்றும் அன்னே மேரி பிராட்லி ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

சிறந்த நேரடி அதிரடி குறும்படம் (Best Live Action Short Film)

சிறந்த நேரடி அதிரடி குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதினை "ஆன் ஐரிஷ் குட்பை "An Irish Goodbye" திரைப்படம் வென்றது.

சிறந்த அனிமேஷன் குறும்படம் (Best Animated Short Film)

சிறந்த அனிமேஷன் குறும்படமாக ஆஸ்கர் விருதுக்கு "தி பாய், தி மோல், தி பாக்ஸ், தி ஹார்ஸ் The Boy, the Mole, the Fox, and the Horse" திரைப்படம் வென்றுள்ளது.

சிறந்த ஆவணக் குறும்படம்(Best Documentary Short Film)

சிறந்த ஆவணக் குறும்படத்திற்கான ஆஸ்கர் விருது, "தி எலிபன்ட் விஸ்பரர்ஸ் The Elephant Whisperers" ஆவணப்படத்திற்கு வழங்கப்பட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow