பெண் பத்திரிகையாளர்கள் பற்றி அவதூறு பேச்சு:எஸ்.வி.சேகர் பற்றிய கேள்விக்கு எஸ்கேப் ஆன தமிழிசை சவுந்தரராஜன்!

தமிழக  பாஜக  மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்,பெண் செய்தியாளர்களை விமர்சித்த எஸ்.வி.சேகர் மீது பா.ஜ.க சார்பில் நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளிக்காமல் சென்றார். சென்னை பள்ளிக்கரணையை அடுத்த நன்மங்கலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பா.ஜ.க. மாநிலத் தலைவர் என்ற முறையில் தன்னுடைய கருத்து மட்டுமே கட்சியின் கருத்து என்று கூறினார். எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது சிரித்துக் கொண்டே அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

வட மாநிலங்களில் இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை!

இரண்டு சிறுமிகள் சட்டீஸ்கர்,உத்தரப்பிரதேசம் மாநிலங்களில் நடந்த இரு வேறு சம்பவங்களில், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டனர். சட்டீஸ்கரின் கபிர்தாம் மாவட்டத்தில் திருமண நிகழ்ச்சியின் போது, சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று, 25 வயது உத்தம் சாஹூ என்ற இளைஞர், பலாத்காரம் செய்து கொன்றுள்ளார். அந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். உத்தரப்பிரதேச மாநிலம் Etah மாவட்டத்தில் நடந்த மற்றொரு திருமண நிகழ்வில், 9 வயது சிறுமி வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக … Read more

பெண் பத்திரிகையாளர்கள் பற்றி அவதூறு பேச்சு:எஸ்.வி.சேகர் வீட்டை முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பத்திரிகையாளர்கள் கைது!

காவல்துறையினர் , சென்னை மயிலாப்பூரில் உள்ள நடிகர் எஸ்.வி.சேகரின் வீட்டை முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பத்திரிகையாளர்களை கைது செய்தனர். நடிகர் எஸ்.வி.சேகர் தனது பேஸ்புக் பக்கத்தில் பெண் பத்திரிகையாளர்கள் தொடர்பாக வெளியிட்டிருந்த பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.  அவரது பதிவு ஒட்டுமொத்த பத்திரிகையாளர்களையும் கொச்சைப்படுத்தும் வகையில்  இருப்பதாக கூறி அனைத்துத் தரப்பிலும் கடும் கண்டனங்கள் எழுந்தன. இந்த நிலையில் சென்னை மயிலாப்பூரில் உள்ள எஸ்.வி.சேகரின் வீட்டை முற்றுகையிட்ட பத்திரிகையாளர்கள், அவருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். … Read more

வீராட் கோலி உலகின் 100 முக்கியமான நபர்களின் ஒருவர்!எப்படி தெரியுமா?

இந்திய கிரிக்கெட் வீரர் வீராட் கோலி, இந்தி திரைப்பட நடிகை தீபிகா படுகோன், ஓலா கால் டாக்ஸி நிறுவனர்களில் ஒருவரான பவிஷ் அகர்வால் உள்ளிட்டோர் உலகின் அதிக செல்வாக்கு மிக்க 100 பேர் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். உலக அளவில் மக்களிடம் செல்வாக்கு உள்ள பிரபலங்கள் குறித்து டைம்ஸ் பத்திரிக்கை ஆண்டுதோறும் கருத்து கணிப்பு நடத்தி அதன் விவரங்களை வெளியிட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான உலக அளவில் அதிக செல்வாக்கு மிக்க 100 பிரபலங்களின் பட்டியலை அந்த … Read more

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரம்: மதுரை காமராஜர் பல்கலை துணைவேந்தர் மற்றும் பதிவாளர் அறைகளில்  அதிரடி சோதனை!

மதுரை காமராஜர் பல்கலை துணைவேந்தர் மற்றும் பதிவாளர் அறைகளில் பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தினர்.சோதனைமாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற விவகாரம் தொடர்பாக கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். இது தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று(ஏப்.,19) மதுரை காமராஜர் பல்கலை துணைவேந்தர் செல்லதுரையிடம் விசாரணை நடத்திய சிபிசிஐடி அதிகாரிகள், இன்று பதிவாளர் சின்னையாவை தங்களது அலுவலகத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்தினர்.   … Read more

பெண் பத்திரிகையாளர்கள் பற்றி அவதூறு பேச்சு!அடங்க்கிப்போய் மன்னிப்புப்கேட்ட எஸ்.வி.சேகர் !

எஸ்.வி.சேகருக்கு , பெண் பத்திரிகையாளர்கள் பற்றி அவதூறாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்ட நிலையில்  எதிராக கடும் கண்டனங்கள் குவிந்த நிலையில், தனது கருத்துக்கு மன்னிப்பு கோரி உள்ளார். கடும் எதிர்ப்பு நிலவியதை அடுத்து தான் பார்வேடு செய்த கருத்தால் மனவருத்தம் ஏற்பட்டுள்ள அனைத்து பத்திரிகை சகோதரிகளிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என்று கூறி ஒரு கடிதத்தை எஸ் வி சேகர் அனுப்பியுள்ளார். பத்திரிகையாளர்கள் குறித்து எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டிருந்தார். இது செய்தியாளர்களிடையே … Read more

ஜிஎஸ்டியால் இந்தியாவிற்கு நல்ல பலன்கள் கிடைத்துள்ளது! ஐஎம்எஃப் தகவல் !

சர்வதேச செலாவணி நிதியமான ஐஎம்எஃப்,ஜிஎஸ்டி உள்ளிட்ட இந்தியா மேற்கொண்ட சீர்திருத்தங்கள் பலன் தரத் தொடங்கியுள்ளதாக கூறியுள்ளது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடந்த ஆண்டு 6.7 சதவீதமாக இருந்ததாகவும், அது நடப்பு நிதியாண்டில் 7.4 சதவீதமாகவும், அடுத்த நிதியாண்டில் 7.8 சதவீதமாகவும் இருக்கும் என கணித்துள்ளகதாக, ஐஎம்எஃப் அதிகாரி டேவிட் லிப்டன் (First Deputy Managing Director David Lipton) தெரிவித்துள்ளார். இந்தியா இதுவரை மேற்கொண்ட சீர்திருத்தங்கள் பலன் தரத் தொடங்கியுள்ளதாகவும், தொடர்ந்து சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதையே … Read more

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரம்:பேராசிரியை நிர்மலா தேவி சார்பாக ஆஜரான வழக்கறிஞர் எஸ்கேப்!

அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளை தவறான பாதைக்கு  திசைதிருப்ப முயன்று கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ,அவர் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன், வழக்கில் இருந்து விலகுவதாக அறிவித்து உள்ளார். அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி, தன்னிடம் பயிலும் மாணவிகள் நான்கு பேரிடம் பாலியல் தொழிலுக்கு ஆசை காட்டியதாக புகார் கூறப்பட்டது. இதையடுத்து கல்லூரி நிர்வாகம் சார்பில் நிர்மலா தேவி மீது அருப்புக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீஸார் நிர்மலா தேவியை திங்கள்கிழமை கைது … Read more

திருவள்ளூரில் சுட்டெரிக்கும் வெயில்!வெளியே வர பொதுமக்கள் அச்சம் !

கோடை வெயில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில்  கொளுத்தி வருகிறது. பகல் முழுவதுமே தகிக்கும் வெயிலால் வீட்டை விட்டு வெளியில் வரவே பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். வெயிலின் தாக்கத்தை உணர்த்தும் வகையில் சாலையில் கானல் நீர் தோன்றுவதைக் காணமுடிகிறது. திருத்தணியில் கடந்த சில தினங்களாகவே 100 டிகிரி ஃபாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில் இன்று 101.66 டிகிரி ஃபாரன்ஹீட்டைத் தொட்டது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

ஆந்திரா அரசுக்கு சிறப்பு அந்தஸ்து!பிறந்த நாளில் உண்ணாவிரதம் இருந்த ஆந்திர  முதல்வர் சந்திரபாபு நாயுடு!

ஆந்திர  முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஆந்திரா அரசுக்கு சிறப்பு அந்தஸ்து தர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வந்தார். கூட்டணியில் இவரது கட்சி இருந்த போதும் கோரிக்கை பற்றி எவ்வித பரிசீலனையும் ஏற்கப்படவில்லை. இதனால் பார்லிமென்டிலிலும் ஆந்திர எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இருப்பினும் மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை. இதையடுத்து கூட்டணியில் இருந்து சந்திரபாபு வெளியேறினார். இது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது கட்சியினருடன் விஜயவாடாவில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.ஆந்திர மாநிலத்தை … Read more