திமுகவில் திறமையானவர்கள் இல்லையா..? – டிடிவி தினகரன்

குடும்பத்தின் அழுத்தம் காரணமாக மகனை மு.க.ஸ்டாலின் அமைச்சர் ஆகியுள்ளார் என டிடிவி தினகரன் விமர்சனம்  முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில், 10 அமைச்சர்களின் இலகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, புதிதாக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், அமமுக பொது செயலாளர் தினகரன் திருப்பூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், திமுகவில் திறமையானவர்கள் யாரும் இல்லையா? குடும்பத்தின் அழுத்தம் காரணமாக … Read more

உதயநிதி ஸ்டாலினின் பதவியேற்பு நிகழ்ச்சியை புறக்கணித்த ஈபிஎஸ்..!

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்ற நிலையில், பதவியேற்பு விழாவை ஈபிஎஸ் புறக்கணித்துள்ளார்.  சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற அமைச்சரவை பதவியேற்பு விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தமிழ்நாட்டின் புதிய அமைச்சராக சேப்பாக்கம் எம்.எல்.ஏ-வும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றார். இந்த நிலையில், இந்த பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், இன்று பதவியேற்பு விழாவில் ஈபிஎஸ் கலந்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

மாணவர்களிடையே பரவும் போதைப் பழக்கம் – மநீம

மாணவர்களிடையே பரவி வரும் போதை பழக்கத்தை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க கோரி மநீம அறிக்கை.  மாணவர்களிடையே பரவி வரும் போதை பழக்கத்தை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மநீம வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள மநீம, கல்வியில் சிறந்த தமிழகம் என்று பெருமை பேசிக்கொள்ளும் தமிழக அரசு மாணவர்களிடம் ஒழுக்கத்தை போதிக்க தீவிர முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும். மாநிலத்தில் போதைப் பொருள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என … Read more

தளபதி மகனே வருக..! தமிழர்க்கு மேன்மை தருக..! – கவிஞர் வைரமுத்து

உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து கவிஞர் வைரமுத்து ட்வீட். அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து கவிஞர் வைரமுத்து ட்வீட்  செய்துள்ளார். உள்ளங்கவர் உதயநிதி! கலைஞர் குடும்பம் உங்களுக்குத் தந்தது அறிமுகம் மட்டும்தான் இன்னொரு முகம் இருக்கிறது; அறிவு முகம்; செயலால் மட்டுமே அடைவது உங்கள் செயலால் வாரிசு என்ற வசை கழியுங்கள் தளபதி மகனே வருக தமிழர்க்கு மேன்மை தருக அமைச்சர் உதயநிதிக்கு வாழ்த்துக்கள் உள்ளங்கவர் உதயநிதி! கலைஞர் குடும்பம் உங்களுக்குத் … Read more

பதவியாக கருதாமல் பொறுப்பாக உணர்ந்து பணியாற்றுவேன் – உதயநிதி

பதவியாக கருதாமல் பொறுப்பாக உணர்ந்து என்றும் பணியாற்றிடுவேன் என உதயநிதி ட்வீட்.  உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அமைச்சராக பதிவியேற்றுள்ளார். அவர் பதவியேற்பதற்கு முன்னதாக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘எப்போதும் வழிநடத்தும் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம், சமூகநீதி திட்டங்களை செயல்படுத்தி தமிழர் நலன் காக்கும் திராவிட மாடல் அரசின் அமைச்சரவையில் பங்கேற்க வாய்ப்பளித்ததற்கு நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்றேன். பதவியாக கருதாமல் பொறுப்பாக உணர்ந்து என்றும் பணியாற்றிடுவேன்.’ … Read more

‘உதயத்தை வரவேற்போம்’ – அலங்கரிக்கப்பட்ட கருணாநிதி நினைவிடம்..!

உதயநிதி அமைச்சராவதை வரவேற்கும் வண்ணம், உதயத்தை வரவேற்போம் என கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.  முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பில் வந்த ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் இன்னும் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படாமல் இருக்கிறது. இந்த நிலையில், இன்று அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. அந்த வகையில், ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், உதயநிதி அமைச்சராவதை வரவேற்கும் வண்ணம், உதயத்தை வரவேற்போம் என கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் மலர்களால் … Read more

இன்று அமைச்சராக பதவியேற்கிறார் உதயநிதி..!

இன்று அமைச்சராக பதவியேற்கிறார் உதயநிதி ஸ்டாலின்.  முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பில் வந்த ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் இன்னும் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படாமல் இருக்கிறது. இந்த நிலையில், இன்று அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. அந்த வகையில், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் இன்று அமைச்சராக பொறுப்பேற்க உள்ளார். ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழாவுக்காக பிரமாண்டமான முறையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த பதவியேற்பு விழாவுக்கு அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய … Read more

ஆளுநர் இதை நிறுத்தவில்லை என்றால் கடும் விளைவுகளை அவர் சந்திக்க நேரிடும் – கே.எஸ்.அழகிரி

ஆதாரமற்ற அவதூறு பேச்சுகளை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் கே.எஸ்.அழகிரி ட்வீட்.  ஆளுநர் ஆர்.என்.ரவி ஆதாரமற்ற அவதூறு பேச்சுகளை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என கே.எஸ்.அழகிரி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘ஆளுநராக நியமனம் செய்யப்பட்டது முதல் ஒரு அரசியல்வாதியாக பா.ஜ.க.வின் கொள்கை பரப்பு செயலாளராக, அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக செயல்பட்டு வருகிற ஆர்.என். ரவி, தமது அத்துமீறிய ஆதாரமற்ற அவதூறு பேச்சுகளை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். அப்படி நிறுத்தவில்லை என்றால் … Read more

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி ஏற்பது புதிய திராவிட மாடலாக இருக்கலாம் – தமிழிசை

புதுச்சேரியில் எந்த அடக்குமுறையும் இல்லை துணை நிலை ஆளுநர் என்ற முறையில் அரசுக்கு துணையாக இருக்கின்றேன் என தமிழிசை பேட்டி.  திமுக ஆட்சி பொறுப்பில் வந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் நாளை அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. அந்த வகையில், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் நாளை அமைச்சராக பொறுப்பேற்க உள்ளார். இதுகுறித்து விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், ஆளுநர் தமிழிசை, புதுச்சேரியில் நல்ல ஆட்சி நடந்து கொண்டுள்ளது. புதுச்சேரிக்கு இப்போது தேவை … Read more

எதிர்க்கட்சி சொல்வதெல்லாம் கேட்கக்கூடாது – அமைச்சர் அன்பில் மகேஷ்

உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்பது மகிழ்ச்சியாக உள்ளது என அன்பில் மகேஷ் பேட்டி.  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்பது மகிழ்ச்சியாக உள்ளது. அவருக்கு  வாழ்த்துக்கள். அவர் அமைச்சராக மிகவும் சிறப்பாக செயல்படுவார். முதல்வரின் அறிவிப்பிற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எதிர்க்கட்சி சொல்வதெல்லாம் கேட்கக்கூடாது. 30 வருடம் கழித்து அமைச்சர் பதவி கொடுத்தாலும் விமர்சிக்க தான் செய்வார்கள் என தெரிவித்துள்ளார்.