ஓய்ந்தது பிரச்சாரம்…சூறாவளியாக சுழன்ற தலைவர்கள்.! சூப்பர் ஹைலைட்ஸ்…

Elections 2024

LokSabha Election 2024: முதற்கட்ட மக்களவை தேர்தலுக்கான தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைந்தது. விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரமும் நிறைவடைந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததும் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வருகிறது. இதனால், பிரச்சார நேரம் நிறைவடைந்ததும் தொகுதி சாராத ஆட்கள் வெளியேற வேண்டும் எனத் தேர்தல் … Read more

சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடம் இல்லை.! அமைச்சர் உதயநிதி பேச்சு.!

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரான  உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று ரூ.11.98 கோடி மதிப்பில்  உள்ள சென்னை மாநகராட்சி சார்பில் நிறைவுற்றுள்ள 13 திட்டப் பணிகளை மக்கள் பயன்பாட்டுக்காக இன்று திறந்து வைத்ததோடு, ரூ.152.67 கோடி மதிப்பில் உள்ள சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட உள்ள 52 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல்லும் நாட்டினார். அமைச்சர்கள் சொத்துகுவிப்பு வழக்கு.. ஐகோர்ட்டுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு! இந்த விழாவில் கலந்து … Read more

பிறந்தான் பரிசு… துணை முதல்வர் பொறுப்பு.? அமைச்சர் உதயநிதியின் கலகலப்பான பதில்.!

Minister Udhayanidhi stalin - Tamilnadu CM MK Stalin

தமிழக துணை முதல்வர் பதவி குறித்த கேள்விக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 46வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு அமைச்சர்கள்,திமுக பிரதிநிதிகள், பிற கட்சி தலைவர்கள், திரை நட்சத்திரங்கள் என பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இன்று தனது பிறந்தநாளை முன்னிட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மெரினாவில் உள்ள முன்னாள் முதல்வர் மு.கருணாந்தி நினைவிடம், அறிஞர் அண்ணா … Read more

சமூக நீதியை செயலிலும் காட்ட வேண்டும் – வானதி சீனிவாசன்

வாரிசு அரசியல் என்பது ஒரு கட்சியின் தலைமை ஒரு குடும்பத்திடம் மட்டுமே இருப்பது என வானதி சீனிவாசன் அறிக்கை.  பாஜக எம்.எல்.ஏ வானதி ஸ்ரீநிவாசன் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,  அரை நூற்றாண்டு காலம் தி.மு.க. தலைவராக இருந்த திரு கருணாநிதியின் பேரனும், தந்தையின் மறைவுக்குப் பிறகு தி.மு.க. தலைவராகவும், முதலமைச்சராகவும் ஆகியுள்ள திரு. மு.க.ஸ்டாலினின் மகனுமான திரு. உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகியுள்ளார். இந்திய வரலாற்றில் மட்டுமல்ல, உலக வரலாற்றிலேயே தொடர்ந்து 54 ஆண்டுகள் … Read more

உதயநிதி ஸ்டாலினுக்கு முன்னரே வாழ்த்து தெரிவித்து விட்டேன் – ரஜினிகாந்த்

ஆறுவருடம் கழித்து ஏழுமலையானை தரிசித்தது மகிழ்ச்சி என ரஜினிகாந்த் பேட்டி.  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தானம் சார்பில் உற்சாக  வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ஆறுவருடம் கழித்து ஏழுமலையானை தரிசித்தது மகிழ்ச்சி. உதயநிதி ஸ்டாலினுக்கு முன்னரே வாழ்த்து தெரிவித்து விட்டேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அன்பில் மகேஷின் தாயாரிடம் வாழ்த்து பெற்ற உதயநிதி..!

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், உதயநிதி ஸ்டாலினின் நண்பருமான  அன்பில் மகேஷ் அவர்களின் தாயாரை சந்தித்து உதயநிதி வாழ்த்து பெற்றார்.  முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பில் வந்த ஒன்றரை ஆண்டுகள் ஆகியும், அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படாத நிலையில், இன்று அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில், 10 அமைச்சர்களின் இலகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிதாக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவருக்கு அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் வாழ்த்து … Read more

விமர்சிப்பது – ஒன்று அறியாமை.. இன்றேல் ஆணவப் பொறாமை! – ஆசிரியர் கீ.வீரமணி

தாய்க்கழகத்தின் மனம் நிறைந்த வாழ்த்துகள்! என உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்த ஆசிரியர் கீ.வீரமணி.  புதிதாக அமைச்சராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவருக்கு அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்ற்னர். அந்த வகையில், திராவிட கழக தலைவர் ஆசிரியர் கீ.வீரமணி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘துடிப்பும், செயல்திறனும் மிக்க தி.மு.க.வின் இளைஞரணி செயலாளர் மானமிகு உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ அவர்கள் இன்று ‘திராவிட மாடல்’ … Read more

திமுகவினர் இன்றைக்கு அரங்கேற்றியது மந்திரிசபை மாற்றமா ? அல்லது முடிசூட்டும் விழாவா ? – வி.கே.சசிகலா

திமுகவினர் இன்றைக்கு அரங்கேற்றியது மந்திரிசபை மாற்றமா? அல்லது முடிசூட்டும் விழாவா? என சசிகலா அறிக்கை. உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்றது குறித்து விமர்சித்து, வி.கே.சசிகலா திமுகவினர் இன்றைக்கு அரங்கேற்றியது மந்திரிசபை மாற்றமா? அல்லது முடிசூட்டும் விழாவா? என்ற தலைப்பில் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில், அதிமுக எளிய தொண்டரையும் பதவி கொடுத்து அங்கீகரிக்கும் கட்சி; நானும் இதைப் பின்பற்றித்தான் இதுநாள் வரை வந்து இருக்கிறேன்; எனவே நாங்கள்தான் உண்மையான திராவிட இயக்கத்தை சேர்ந்தவர்கள். அ.தி.மு.க மிக பெரிய … Read more

முதல்வரை சந்தித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்து பெற்ற உதயநிதி…!

உதயநிதி ஸ்டாலின் அவர்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.  உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று புதிதாக அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு  உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், அமைச்சராக பதவியேற்ற பின், உதயநிதி ஸ்டாலின் அவர்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

உதயநிதி ஸ்டாலினின் பதவியேற்பு நிகழ்ச்சியை புறக்கணித்த ஈபிஎஸ்..!

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்ற நிலையில், பதவியேற்பு விழாவை ஈபிஎஸ் புறக்கணித்துள்ளார்.  சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற அமைச்சரவை பதவியேற்பு விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தமிழ்நாட்டின் புதிய அமைச்சராக சேப்பாக்கம் எம்.எல்.ஏ-வும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றார். இந்த நிலையில், இந்த பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், இன்று பதவியேற்பு விழாவில் ஈபிஎஸ் கலந்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது.