உதயநிதிக்கு அமைச்சர் பதவி… திமுக சகாப்தம் முடிகிறது.! ஜெயக்குமார் விமர்சனம்.!

அரசியலில் உதயநிதி ஒரு கத்துக்குட்டி. ஸ்டாலின் தனது கனவை நினைவாக்கிக் கொண்டுள்ளார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி.  முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுவது தொடர்பாக கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ஜெயக்குமார் திமுக என்பது குடும்ப கட்சியாக மாறிவிட்டது. திமுகவில் கட்சிக்காக உழைத்தவர்கள் பலர் உள்ளனர். அரசியலில் உதயநிதி ஒரு கத்துக்குட்டி. ஸ்டாலின் தனது கனவை நினைவாக்கிக் கொண்டுள்ளார். … Read more

ஜல்லிக்கட்டு ஒரு ரத்த விளையாட்டோ, கொடூரச் செயலோ அல்ல – கமலஹாசன்

எத்தனைத் தடைகள் வந்தாலும் வீரத்துடன் அதை முறியடிப்போம் என கமலஹாசன் ட்வீட்.  வரும் 2023இல் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு உறுதியாக நடைபெறும் என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்கள் உறுதிபட தெரிவித்துள்ளார். இதற்கிடையில், ஜல்லிக்கட்டு குறித்த உச்சநீதிமன்றத்தின் கருத்துக்கு வரவேற்பு தெரிவித்து மநீம கட்சி தலைவர் கமலஹாசன் அவர்கள் ட்விட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘ஏறு தழுவுதல் நம் அடையாளம். இயற்கையோடும் கால்நடைகளோடும் இரண்டறக் கலந்து வாழும் தமிழ்ப் பண்பாட்டின் தொடர்ச்சி. ஜல்லிக்கட்டு ஒரு ரத்த விளையாட்டோ, … Read more

நீலகிரியில் ஜன.4-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு..!

நீலகிரி மாவட்டத்திற்கு ஜனவரி 4-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.  நீலகிரி மாவட்டத்திற்கு ஜனவரி 4-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஹெத்தைஅம்மன் பண்டிகை காரணமாக உள்ள விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் ஜனவரி 4 விடுமுறை ஈடுகட்ட ஜனவரி 21ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உதயநிதி துணை முதல்வர் ஆவாரா என்று உங்களை போல் நானும் காத்துக் கொண்டிருக்கிறேன் – அமைச்சர் பொன்முடி

உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பொறுப்பு கொடுப்பது கூட்டான ஒரு முடிவுதான் என அமைச்சர் பொன்முடி பேச்சு.  உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுவது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் பொன்முடி, உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சரவையில் தற்போது இடம் ஒதுக்கி இருப்பது தாமதம் என்று தான் நான் கூறுவேன். உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பொறுப்பு கொடுப்பது கூட்டான ஒரு முடிவுதான். அவருடன் … Read more

உதயநிதி எந்த பிரச்னைக்கும் உடனடியாக தீர்வு சொல்லக்கூடியவர் – அமைச்சர் முத்துசாமி

உதயநிதி எந்த பிரச்னைக்கும் உடனடியாக தீர்வு சொல்லக்கூடியவர் என அமைச்சர் முத்துசாமி புகழாரம்.  அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துளளார். அப்போது பேசிய அவர், உதயநிதி எந்த பிரச்னைக்கும் உடனடியாக தீர்வு சொல்லக்கூடியவர்; என்ன செய்தாலும் சிறப்பாக செய்வார் எனும் நம்பிக்கை எனக்கு மட்டுமல்ல பொதுமக்களுக்கும் உள்ளது. இனிமேல் ஒரு கட்டடம் கூட அனுமதி இல்லாமல் கட்டப்படாது என உறுதியளிக்கிறோம்; ஏற்கனவே கட்டப்பட்ட கட்டடங்களை வரன்முறைப்படுத்த நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.

நாளை அமைச்சராக பதவியேற்கும் உதயநிதி..! ஈபிஎஸ்-க்கு அழைப்பு..!

உதயநிதி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள இபிஎஸ் மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  திமுக ஆட்சி பொறுப்பில் வந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் நாளை அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. அந்த வகையில், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் நாளை அமைச்சராக பொறுப்பேற்க உள்ளார். ஆளுநர் மாளிகையில் இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், உதயநிதி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள இபிஎஸ்-க்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வீட்டுவரியால் வீட்டை விற்றுவிடலாமா என்று தோன்றுகிறது – செல்லூர் ராஜு

வீட்டு வரியை நினைத்தால் வீட்டையே விற்றுவிடலாமா என தோன்ற வைக்கிறது என செல்லூர் ராஜு பேச்சு.  திமுக அரசைக் கண்டித்து சேலம் ஆத்தூரில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. பால்விலை, சொத்துவரி, மின்கட்டண உயர்வை கண்டித்து அதிமுகவினர் முழக்கம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மதுரையில் செல்லூர் ராஜு, ஓமலூரில் செம்மலை, சத்தியமங்கலத்தில் செங்கோட்டையன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மதுரையில் ஆர்ப்பாட்டத்தில் பேசிய செல்லூர் ராஜு, வீட்டு வரியை நினைத்தால் வீட்டையே … Read more

வாரிசு அரசியலுக்கு முடிவுகட்ட வேண்டும் – ஈபிஎஸ்

திமுகவில் குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கம் நடைபெற்று வருகிறது என ஈபிஎஸ் பேச்சு.   திமுக அரசை கண்டித்து சேலம் ஆத்தூரில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. பால்விலை, சொத்துவரி, மின்கட்டண உயர்வை கண்டித்து அதிமுகவினர் முழக்கம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் உரையாற்றியுள்ளளார். அப்போது பேசிய அவர், வாரிசு அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும்; திமுகவில் குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கம் நடைபெற்று வருகிறது. நான் ஒரு விவசாயி, மழையையும், வெயிலையும் … Read more

ஏன் மு.க.ஸ்டாலின் அவசரப்படுகிறார் என்பது மட்டும் தெரியவில்லை – டிடிவி

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி ஏற்பது தவறு இல்லை என டிடிவி தினகரன் கருத்து.  திமுக ஆட்சி பொறுப்பில் வந்த ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் இன்னும் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படாமல் உள்ள நிலையில், நாளை அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் நாளை அமைச்சராக பொறுப்பேற்க உள்ளார். இதுகுறித்து டிடிவி தினகரன் அவர்கள்,  ‘உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி ஏற்பது தவறு இல்லை, ஏன் மு.க.ஸ்டாலின் … Read more

திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்..!

திமுக அரசை கண்டித்து சேலம் ஆத்தூரில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம். திமுக அரசை கண்டித்து சேலம் ஆத்தூரில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. பால்விலை, சொத்துவரி, மின்கட்டண உயர்வை கண்டித்து அதிமுகவினர் முழக்கம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திமுக அரசை கண்டித்து மாநகராட்சி நகராட்சிகளில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில்,  ஈரோடு, தேனி, திருச்சி, சேலம் ஆகிய மாவட்டங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. மதுரையில் செல்லூர் ராஜு, ஓமலூரில் செம்மலை, சத்தியமங்கலத்தில் … Read more