அண்ணாமலை என்ன ஜோசியரா? – செல்லூர் ராஜு பதிலடி

SELLUR RAJU

Sellur raju: பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு அரசியல் தெரியாது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம். தேனியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை ஆதரித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது, அதிமுகவை காண்ட்ராக்ட் காரர்களுக்கு தாரை வார்த்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. ஒப்பந்தக்காரர்களுக்கான கட்சியாக மாறிவிட்டது. அதிமுக வேட்பாளர்களை பார்த்தாலே அது தெரியும் என பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா … Read more

அரசியல் நெறி… மதுரை எம்.பி சு.வெங்கடேசனை போனில் பாராட்டிய செல்லூர் ராஜு.!

Sellur Raju - Su Venkatesan

மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மதுரை, எம்பி சு.வெங்கடேசனை போனில் அழைத்து அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். மதுரை, வண்டியூரில் தெப்பக்குளம் மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதம் வெகு விமர்சையாக தெப்பக்குள விழா நடைபெறும். தை மாத பௌர்ணமி நாளன்று தெப்பக்குள மாரியம்மன் திருவிழா நடைபெறும். அப்போது மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நடை சாத்தப்பட்டு , தெப்பக்குளத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு … Read more

வீட்டுவரியால் வீட்டை விற்றுவிடலாமா என்று தோன்றுகிறது – செல்லூர் ராஜு

வீட்டு வரியை நினைத்தால் வீட்டையே விற்றுவிடலாமா என தோன்ற வைக்கிறது என செல்லூர் ராஜு பேச்சு.  திமுக அரசைக் கண்டித்து சேலம் ஆத்தூரில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. பால்விலை, சொத்துவரி, மின்கட்டண உயர்வை கண்டித்து அதிமுகவினர் முழக்கம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மதுரையில் செல்லூர் ராஜு, ஓமலூரில் செம்மலை, சத்தியமங்கலத்தில் செங்கோட்டையன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மதுரையில் ஆர்ப்பாட்டத்தில் பேசிய செல்லூர் ராஜு, வீட்டு வரியை நினைத்தால் வீட்டையே … Read more

அணில் அமைச்சர் ஆதார் அமைச்சராகி விட்டார் – செல்லூர் ராஜு

அணில் அமைச்சர் தற்போது ஆதார் அமைச்சராக மாறிவிட்டார் என செல்லூர் ராஜு விமர்சனம்  மதுரை காமராஜர் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதாவின் 6-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அஞ்சலி நிகழ்ச்சி குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமை தாங்கினார். இந்த நிகழ்வில் பேசிய அவர் அதிமுகவை குறைத்து மதிப்பிட முடியாது. அண்ணன் தம்பிகள் போல் ஒன்றுபட்டு உழைத்துக் கொண்டு இருக்கிறார்கள். நாங்கள் … Read more

அதிமுக எனும் எக்ஸ்பிரஸ் டெல்லிக்கு புறப்பட்டு விட்டது – செல்லூர் ராஜு

மிழ்நாடு திராவிட பூமி; இங்கு திராவிட இயக்கம் மட்டும் தன் ஆட்சி அமைக்க முடியும் செல்லூர் ராஜு பேட்டி.  அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவர்கள் மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், அதிமுக தலைமையில் தான் எப்போதும் கூட்டணி என்று தெரிவித்துள்ளார். மேலும், அதிமுக எனும் எக்ஸ்பிரஸ் டெல்லிக்கு புறப்பட்டு விட்டது; அதில் ஏறுகிறவர்கள் டெல்லிக்கு செல்லலாம்.  கூட்டணியை நம்பி வந்தால் எரிக் கொள்வோம். தமிழ்நாடு திராவிட பூமி; இங்கு திராவிட … Read more

வாரிசு படத்தில் உண்மையில் உதயநிதி ஸ்டாலின் தான் நடிக்க வேண்டும் – செல்லூர் ராஜு

நடிகர் விஜய் நடிப்பில் பொங்கலுக்கு வரவுள்ள வாரிசு திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலில் தான் உண்மையில் நடித்திருக்க வேண்டும் என செல்லோர் ராஜு விமர்சனம்.  மதுரையில் அதிமுகவின் 51 வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர் திமுகவில் இருந்து எம்ஜிஆர் நீக்கப்பட்ட பின்பு அதிமுக உருவான வரலாறு அனைவருக்குமே தெரியும். 50 ஆண்டுகளில் 31 ஆண்டுகள் ஆட்சியில் … Read more

முதியோர் உதவித்தொகை விவகாரம்.! எம்எல்ஏக்கள் கூட்டத்தில் வெளியேற முற்பட்ட அதிமுக எம்எல்ஏக்கள்.!

கடந்த அதிமுக ஆட்சியில் 1000 ரூபாய் கொடுத்து வந்தோம். இவர்கள் 1500 உயர்த்தி தருவதாக கூறினார்கள். ஆனால் இன்னும் அதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை. – என அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.  உங்கள் தொகுதியில் முதலமைச்சர் எனும் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் உள்ள தொகுதிகளில் அந்தந்த தொகுதி எம்.எல்.ஏக்கள் வைக்கும் கோரிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, மதுரையில் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன்,  மூர்த்தி, அதிமுக எம்.எல்.ஏக்களான … Read more

தனது குடும்ப உறுப்பினர்களை கட்சிக்குள் கொண்டுவருவது மட்டுமே திமுகவின் கொள்கை – செல்லூர் ராஜு

திமுகவை எதிர்ப்பது மட்டும்தான் அதிமுகவின் கொள்கை  என செல்லூர் ராஜு பேட்டி.  அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர் அதிமுக வலுவாக இருப்பதை பார்த்து அதிமுக உடைந்து உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். திமுக பொதுக்குழுவில் முதலமைச்சர்  மத்தளத்திற்கு இரு பக்கமும் அடி போல தனது நிலைமை உள்ளது என தெரிவித்துள்ளார். இதுவரை எந்த முதல்வரும் எந்த காலகட்டத்திலும் பேசாத ஒன்றை முதல்வர் ஸ்டாலின் மனம் வெதும்பி … Read more

இன்று அரசால் அமல்படுத்தப்பட்டுள்ள புதுமைப் பெண் திட்டம் கானல் நீர் போன்றது – செல்லூர் ராஜு

இன்று அரசால் அமல்படுத்தப்பட்டுள்ள புதுமைப் பெண் திட்டம் கானல் நீர் போன்றது செல்லூர் ராஜு விமர்சனம்.  கல்லூரி மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை துவக்கி வைத்துள்ளார். புதுமைப்பெண் என்ற பெயரிலான திட்டத்தை சென்னை ராயபுரம் பாரதி மகளிர் கல்லூரியில் பயனடைய உள்ள மாணவிகளுக்கு புதுமைப்பெண் என்று அச்சிடப்பட்ட டெபிட் கார்டுகளை முதலமைச்சர் வழங்கினார். 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப்பள்ளியில் படித்து உயர்கல்விக்காக கல்லூரியில் சேர்ந்த மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும். … Read more

பாஜகவிற்கு கூடுவது காகா கூட்டம்…! நீங்க தூசி அளவு பேசுனா நாங்க தூணளவு பதிலடி கொடுப்போம் – செல்லூர் ராஜு அதிரடி

பாஜகவினருக்கு கூடும் கூட்டம் காக்கா கூட்டம்.  ஆனால் அதிமுகவுக்காக கூடும் கூட்டம் கொள்கை கூட்டம் என செல்லூர் ராஜு விமர்சனம். அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவர்கள் மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர்ம், அதிமுக மீதான அண்ணாமலை வி,அரசனும் குறித்து பதிலளித்திருந்தார்.  தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த தமிழிசை,முருகன் ஆகியோர் அரசு பதவி பெறுவது பெற்றதை சுட்டிக்காட்டி, அண்ணாமலை தனக்கும் உயர்ந்த பதவியை அடைய வேண்டும் என்பதற்காக சில சமயங்களில் அதிமுகவை … Read more