இரவு முதல் முதல்வர் எங்களை இயக்கியபடி இருந்தார்.. திமுக அமைச்சர்கள் பேட்டி!

dmk ministers

வங்கக்கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனிடையே, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வரும் நிலையில், கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பல்வேறு … Read more

இன்று அரசால் அமல்படுத்தப்பட்டுள்ள புதுமைப் பெண் திட்டம் கானல் நீர் போன்றது – செல்லூர் ராஜு

இன்று அரசால் அமல்படுத்தப்பட்டுள்ள புதுமைப் பெண் திட்டம் கானல் நீர் போன்றது செல்லூர் ராஜு விமர்சனம்.  கல்லூரி மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை துவக்கி வைத்துள்ளார். புதுமைப்பெண் என்ற பெயரிலான திட்டத்தை சென்னை ராயபுரம் பாரதி மகளிர் கல்லூரியில் பயனடைய உள்ள மாணவிகளுக்கு புதுமைப்பெண் என்று அச்சிடப்பட்ட டெபிட் கார்டுகளை முதலமைச்சர் வழங்கினார். 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப்பள்ளியில் படித்து உயர்கல்விக்காக கல்லூரியில் சேர்ந்த மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும். … Read more

கடமை தவறாதீர்கள் ; கண்ணியத்தை விட்டு விடாதீர்கள் – முதல்வர் வேண்டுகோள்!

மு க ஸ்டாலின் அவர்கள் கட்சியில் உள்ள அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதாவது யாராக இருந்தாலும் எந்த குற்றச்சாட்டுக்கும் ஆளாகாத வகையில் இருக்க வேண்டும். உங்களிடம் கேட்டுக் கொள்வது கடமை தவறாதீர்கள், கண்ணியத்தை விட்டு விடாதீர்கள் எந்த தவறுக்கும் இடம் கொடுக்காதீர்கள் என தெரிவித்துள்ளார்.

வள்ளலாரை போல அன்பும் மனித நேயமும் தழைக்க செய்வோம் – முதல்வர் ட்வீட்!

வள்ளலாரின் நினைவை போற்றி, அவரை போல அன்பும் மனித நேயமும் தழைக்க செய்வோம் என முதல்வர் ட்வீட் செய்துள்ளார். வாடிய பயிரைக் கண்டால் மனம் வாடும் இரக்கமும், பட்டினி வயிறுகளின் பசியாற்றிட அணையா அடுப்பு மூலம் உணவளிக்கும் கருணையும், சாதி பேதமற்ற சமரச சன்மார்க்க நெறியும் கொண்டவரான வடலூர் வள்ளலார் இராமலிங்க அடிகள் அவர்களின் நினைவு போற்றி, அன்பும் மனிதநேயமும் தழைத்திடச் செய்திடுவோம் என முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,  வாடிய … Read more

திருப்பூர் : 56 கோடி மதிப்பில் நலத்திட்ட பணிகள் – முதல்வர் தொடக்கி வைத்தார்!

திருப்பூர் மாவட்டத்தில் 56 கோடி மதிப்பிலான நலத்திட்ட பணிகளை  முதல்வர் தொடக்கி வைத்துள்ளார். திருப்பூர் மாவட்டம் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பங்கேற்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்துள்ளார். சுமார் 56 கோடி மதிப்பிலான நலத்திட்ட பணிகள் முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை துறையின் மூலமாக ரூ.41 லட்சத்து 24 … Read more

#அறிவிப்பு -முதல்வருக்கு கொரோனா இல்லை!

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா தொற்று இல்லை என பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள தமிழக அரசு:முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா தொற்று இல்லை என பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.மேலும் நேற்று முதல்வர் முகாம் அலுவலகத்தில் முதல்வர் பழனிசாமி,  பணியாளர்களுக்கு பரிசோதனை நடந்தது.இந்த பரிசோதனையில் முதல்வர் உள்பட வேறு யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

கொரோனா ஒழிஞ்சிடனும் கோவிந்தா..ஏழுமலையில் முதல்வர்!

உலகம் முழுவதும் கொரோனா பரவல்  ஒழியவும், நாட்டுப் பாதுகாப்புக்காவும்  ஏழுமலையானிடம் வேண்டுதல் வைத்து திருப்பதி சென்று  முதல்வர் சிவராஜ் சிங்  சௌஹான் தரிசனம் செய்துள்ளார். ஊரடங்கில் கோவிலுக்கு சென்ற  முதல் முதல்வர் இவரே என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து வெளியான தகவல்: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க நேற்று முன்தினம் இரவு, 11 மணிக்கு தன் குடும்பத்துடன் திருமலையை நோக்கி சென்ற மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளஹானை  திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று முதல்வர் உள்ளிட்ட … Read more

சென்னையில் உள்ள அம்மா உணவகங்களை திடீரென ஆய்வு நடத்திய தமிழக முதல்வர்….

சென்னை சாந்தோமில் உள்ள அம்மா உணவகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தற்போது  ஆய்வு நடத்தி வருகிறார். அங்கு தயாரிக்கப்படும் உணவின் தரம் குறித்தும் பின்பற்றப்படும் விதிகள் குறித்தும்  தற்போது ஆய்வு நடத்தினார். அதனைத்தொடர்ந்து சென்னை சாந்தோமை ஆய்வு செய்த பின், கலங்கரை விளக்கத்தில் உள்ள அம்மா உணவகத்திலும் முதல்வர் பழனிசாமி ஆய்வு மேற்கொண்டு வருகிறார். முதல்வர் பழனிசாமியுடன் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரும் உணவின் தரம் குறித்தும் பின்பற்றப்படும் விதிகள் பற்றி உணவகத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.   … Read more

உ.பியில் பாரதிய ஜனதா கட்சி சட்டத்தின் ஆட்சியை நிறுவியுள்ளது… உ.பி மாநில முதல்வர் பெருமிதம்…

உத்திர பிரதேச மாநிலத்தில்  பாரதிய ஜனதா கட்சியின் சார்பில்  மாநில முதல்வராக 3 ஆண்டுகளை நிறைவு செய்த, சாதனையை யோகி ஆதித்யநாத்(47) பெற்றுள்ளார். இவர் வரும் 19ம் தேதி வியாழக்கிழமையுடன்   அவர் 3 ஆண்டுகால ஆட்சியை நிறைவு செய்கிறார். இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்,  கடந்த மூன்று ஆண்டுகளில் உத்திர பிரதேசம்  தனது இழந்த கவுரவத்தை மீண்டும் பெற்றுள்ளது என்றும், பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அரசால் தொடங்கப்பட்ட திட்டங்களை … Read more

நீங்கள் தான் ‘காவிரி காப்பளான்’…முதல்வரை கௌரவித்த விவசாயிகள்

காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி  அன்மையில் அறிவித்தார் இந்நிலையில் இந்த அறிவிப்புக்கு அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் திருவாரூரில் பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டது.அவ் விழாவில் முதலமைச்சருக்கு “காவிரி காப்பாளன்” என்ற விருதை விவசாயிகள் வழங்கி கவுரவித்தனர். பின்னர் இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, பொருளாதார ரீதியில் விவசாயிகள் முன்னேற தேவைப்படுகின்ற அனைத்து  நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதி அளித்தார். மேலும் அவர் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிரான போராட்டங்களின் … Read more