திருப்பூர் : 56 கோடி மதிப்பில் நலத்திட்ட பணிகள் – முதல்வர் தொடக்கி வைத்தார்!

திருப்பூர் மாவட்டத்தில் 56 கோடி மதிப்பிலான நலத்திட்ட பணிகளை  முதல்வர் தொடக்கி வைத்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பங்கேற்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்துள்ளார். சுமார் 56 கோடி மதிப்பிலான நலத்திட்ட பணிகள் முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த விழாவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை துறையின் மூலமாக ரூ.41 லட்சத்து 24 ஆயிரம் மதிப்பில் கொழுமங்குழி ஊராட்சி மன்ற கட்டிடம், மாம்பாடி ஊராட்சி புளியம்பட்டியில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க கட்டிடம் கட்டுவதற்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். மொத்தம் ரூ.56கோடியே 29 லட்சத்து 24 ஆயிரம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி முதல்வர் உரையாற்றியுள்ளார்.

author avatar
Rebekal