இன்று அரசால் அமல்படுத்தப்பட்டுள்ள புதுமைப் பெண் திட்டம் கானல் நீர் போன்றது – செல்லூர் ராஜு

இன்று அரசால் அமல்படுத்தப்பட்டுள்ள புதுமைப் பெண் திட்டம் கானல் நீர் போன்றது செல்லூர் ராஜு விமர்சனம். 

கல்லூரி மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை துவக்கி வைத்துள்ளார். புதுமைப்பெண் என்ற பெயரிலான திட்டத்தை சென்னை ராயபுரம் பாரதி மகளிர் கல்லூரியில் பயனடைய உள்ள மாணவிகளுக்கு புதுமைப்பெண் என்று அச்சிடப்பட்ட டெபிட் கார்டுகளை முதலமைச்சர் வழங்கினார்.

6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப்பள்ளியில் படித்து உயர்கல்விக்காக கல்லூரியில் சேர்ந்த மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும். புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் சுமார் 6 லட்சம் மாணவிகள் ஆண்டுதோறும் பயன்பெறுவர்.

இந்த திட்டம் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த செல்லூர் ராஜு, இன்று அரசால் அமல்படுத்தப்பட்டுள்ள புதுமைப் பெண் திட்டம் கானல் நீர் போன்றது என விமர்சித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment