குட்நியூஸ்…இவர்களுக்கெல்லாம் மிதிவண்டி வழங்கப்படும் – தமிழக அரசு அரசாணை!

உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள 10,583 நபர்களுக்கு மிதிவண்டிகள் வழங்க அனுமதி மற்றும் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு. தமிழ்நாட்டில் உள்ள பள்ளிவாசல்கள், தர்காக்கள் மற்றும் மதரஸாக்களில் பணிபுரியும் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக உள்ள 10,583 நபர்களுக்கு மிதிவண்டிகள் வழங்குவதற்கு அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக,பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது: கடந்த செப்டம்பர் … Read more

ஓமைக்ரான் வைரஸ் பரவல் கவலையளிக்கிறது; ஆனால், பயப்பட தேவையில்லை – அதிபர் பைடன்!

ஓமைக்ரான் வைரஸ் பரவல் கவலையளிக்கிறது, ஆனால், பயப்பட தேவையில்லை என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் புதிய உருமாற்றம் அடைந்து தெற்கு ஆப்பிரிக்க நாடுகளில் தற்போது அதிகளவில் பரவி வருகிறது. இந்த வைரசுக்கு ஓமைக்ரான் என பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவர்கள் பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், ஓமைக்ரான் கண்டறியப்பட்டு உலக சுகாதார அமைப்பால் அறிவிக்கப்பட்டது முதல் தென் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரக்கூடிய பயணிகள் … Read more

பிக் பாஸ் புது ரகசியம்.! கடைசி நேரத்தில் கைவிட்ட விஜய் சேதுபதி.! கைகொடுத்த ரம்யா கிருஷ்ணன்.!

பிக் பாஸ் நிகழ்ச்சியை சென்றவாரம் கமலுக்கு பதில் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்குவதாக இருந்ததாம். ஆனால், கடைசி நேரத்தில் அவருக்கு ஷூட்டிங் இருக்கவே ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினாராம். கடந்த வாரம் உலகநாயகன் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதியானது. அதனால், கடந்த வார இறுதியில் அவர் தொகுத்து வழங்கி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார்கள் என ரசிகர்களிடம் கேள்வி இருந்தது. அந்த போட்டியில் பலர் இருந்தனர். ரசிகர்கள், விஜய் சேதுபதி, சுருதி … Read more

மெட்ரோ ரயில் நிலையங்கலுக்கு மினி பேருந்து சேவை-தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்!

சென்னை:மெட்ரோ ரயில் நிலையங்களிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு 12 மினி பேருந்துகளின் இயக்கத்தினை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் உள்ள 210 மினி பேருந்துகளில் 66 மினி பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருவதாகவும், சென்னையில் குறைந்த அளவில் மினி பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதால், கூடுதலாக மினி  பேருந்துகளை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்நிலையில்,பொதுமக்களின் பயன்பாட்டிற்காக,சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் … Read more

மூன்று நாள் சுற்றுப்பயணமாக மும்பை செல்கிறார் மம்தா பானர்ஜி!

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மூன்று நாள் சுற்றுப்பயணமாக மும்பை செல்கிறார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் 3 நாள் சுற்றுப்பயணமாக மும்பை செல்ல உள்ளார். இன்று மேற்கு வங்கத்திலிருந்து மும்பை புறப்பட உள்ளார். இந்த மூன்று நாள் பயணத்தின்போது மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் தேசிய காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஆகியோரை சந்தித்து பேச உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் டிசம்பர் 1-ஆம் தேதி தொழிலதிபர்களை அவர் சந்திக்க உள்ளதாகவும் தகவல் … Read more

BIGG BOSS 5 : ஆத்தி, நல்லா செம்மையா பண்ணுறீங்க நீங்க….!

தாமரைக்கும், ப்ரியங்காவுக்கும் ஏற்பட்டுள்ள வாக்குவாதம் தொடர்பான வீடியோ இரண்டாவது ப்ரோமோவில் வெளியாகியுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் தற்போது 13 போட்டியாளர்கள் வீட்டிற்குள் உள்ளனர். இந்நிலையில், கடந்த வாரம் முதல் பிரியங்காவும் தாமரைக்கும் இடையே அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது. முதல் ப்ரோமோவிலும் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் குறித்த வீடியோ தான் காண்பிக்கப்பட்டது. இரண்டாவது ப்ரோமோவிலும்  பிரியங்காவுக்கு தாமரைக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது. இதோ அந்த ப்ரோமோ வீடியோ,

சற்று முன்னர்…உருவாகியது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி;புயலாகவும் மாற வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

தெற்கு அந்தமான் கடற்பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரம் மற்றும் குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.இதனால்,பல்வேறு பகுதிகளில் சாலைகள் மற்றும் குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில்,தெற்கு அந்தமான் கடற்பகுதியில் இன்று (30-11-2021) புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது என்று … Read more

#Breaking:ஆறுமுகசாமி ஆணைய வழக்கு – தீர்ப்பு ஒத்திவைப்பு!

டெல்லி:மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்திற்கு எதிரான வழக்கில் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்திற்கு எதிராக அப்போலோ மருத்துவமனை தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது. மேலும்,ஆணையத்தின் செயல்பாடுகள்,மருத்துவக்குழு உள்ளிட்டவை பற்றி விரிவான தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் உறுதியளித்துள்ளனர்.

#Breaking:இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு!

எதிர்க்கட்சிகளின் அமளியால் மக்களவை,மாநிலங்களவை இன்று பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த முறை நடைபெற்ற நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின்போது எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் செய்தனர்.இதனால், கூச்சல் குழப்பம் ஏற்பட்டு நாடாளுமன்ற அவை நடவடிக்கைகள் நடத்த முடியாமல் போய்விட்டது.இது தொடர்பாக மத்திய அரசு இந்த எம்.பி.க்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து இருந்தது. இந்த நிலையில்,நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.முதல் நாளான நேற்று … Read more

மழை நீரில் ஷூ நனையாமல் இருக்க நாற்காலிகள் மீது நடந்து சர்ச்சையில் சிக்கிய திருமாவளவன்….!

மழை நீரில் ஷூ நனையாமல் இருக்க தொண்டர்களின் உதவியுடன் நாற்காலிகள் மீது திருமாவளவன் நடந்து சென்றது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையின் பல பகுதிகளிலும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையின் முக்கிய பகுதியான வேளச்சேரி பகுதியிலும் பலரது வீடுகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது . இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவரும் சிதம்பரம் தொகுதி … Read more