மக்களவையில் நிறைவேறிய முக்கிய ‘தேர்தல்’ சட்ட மசோதா.! எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு.! 

Election Commission of India - Winter session of Parliament

தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் மற்ற உயர் தேர்தல் அதிகாரிகளை நியமிக்கும் குழுவில்  பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் இந்திய தலைமை நீதிபதி ஆகியோர் இருக்க வேண்டும் என்று இந்த ஆண்டு தொடக்கத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து இருந்தது. ஆனால் அதனை மறுத்து, மத்திய அரசு புதிய சட்டத்தை இயற்றி உள்ளது. புதிய சட்டதிருத்தத்தின் படி, தேர்தல் உயர் அதிகாரிகளை நியமிக்கும் குழுவில், பிரதமர் , எதிர்க்கட்சி தலைவர் உடன் இந்திய தலைமை நீதிபதிக்கு பதில் மத்திய அமைச்சர் … Read more

34 நாடுகளில் 403 இந்திய மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.! மத்திய அமைச்சர் அதிர்ச்சி தகவல்.!   

Union Minister V Muralidharan

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த திங்கள் கிழமை தொடங்கி இன்று 5வது நாளாக நடைபெற்று வருகிறது. இதில் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களின் கேள்விக்கு அந்தந்த துறை அமைச்சர்கள் பதில் கூறி வருகின்றனர். மேலும் தங்கள் துறை சார்ந்த தரவுகளையும் நாடாளுமன்ற இரு அவைகளிலும் மத்திய அமைச்சர்கள் கூறி வருகின்றனர். அதில் மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.முரளிதரன் முக்கிய தரவு விவரங்களை மாநிலங்களவையில் தாக்கல் செய்தார். அதில், இந்தியாவில் இருந்து வெளிநாட்டிற்கு படிப்பிற்காக சென்ற மாணவர்களில் கடந்த … Read more

மிக்ஜாம் புயலில் ஒரு கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.! நாடாளுமன்றத்தில் டிஆர் பாலு கோரிக்கை.!

DMK MP TR Balu speak about Michaung cyclone in Parliment

2023ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று முதல் துவங்கி இன்று இரண்டாவது நாளாக இன்று நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தில் மக்களவையில் பேசிய திமுக எம்பி டி.ஆர்.பாலு சென்னையை புரட்டி போட்ட மிக்ஜாம் புயல் பாதிப்பு குறித்தும், மத்திய அரசு தமிழகத்திற்கு உடனடியாக உதவ வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். அவர் கூறுகையில், வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம் , செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக பொதுமக்கள் … Read more

பரபரக்கும் குளிர்கால கூட்டத்தொடர்… இன்றைய நாடாளுமன்ற நிகழ்வுகள்…

parliament winter session 2023

இன்று நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் முதல் நாள் கூட்டம் காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.  இன்று முதல் அடுத்த 15 வேலை நாட்கள் (திங்கள் முதல் வெள்ளி வரையில்) நடைபெற்று, வரும் டிசம்பர் 22ஆம் தேதி வரையில் கூட்டத்தொடர் நடைபெறும். இந்த கூட்டத்தொடரில், பல்வேறு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன. கூட்டத்தொடருக்கு முன்னர் பேசிய பிரதமர் மோடி, ‘ எதிர்க்கட்சிகளுக்கு ஆக்கப்பூர்வமாக ஏதாவது செய்ய இது ஒரு பொன்னான வாய்ப்பு’ என கூறினார். நேற்றைய முடிவுகளின் மூலம் … Read more

கூட்டத்தொடரில் விவாதங்கள் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும்.! – நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி பேட்டி.! 

குளிர்கால கூட்டத்தொடரில் விவாதம் மிக ஆரோக்கியமாக இருக்க வேண்டும். – பிரதமர் மோடி.  இன்று முதல் இம்மாதம் 29ஆம் தேதி வரையில் நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இந்த குளிர்கால கூட்டத்தொடரில் 16 மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளன. அதே போல , விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து எதிர்க்கட்சிகள், விவாதங்களை முன்னெடுக்கவும் தயாராக உள்ளன. இதனால், இந்த கூட்டத்தொடர் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இதுகுறித்து நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி பத்திரிகையாளர்களிடம் … Read more

கடும் அமளி:நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஒரு நாள் முன்னதாகவே நிறைவு!

டெல்லி:நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நாளை வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்,எதிர்க்கட்சிகளின் கடும் அமளியால் முன்கூட்டியே இன்று நிறைவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில்  “கட்டுப்பாடற்ற முறையில்” நடந்து கொண்டதாக கூறி 12 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து,நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 29 ஆம் தேதி தொடங்கிய நிலையில்,முதல் நாளில் இருந்தே 12 எம்பிக்கள் இடைநீக்கத்தை ரத்து செய்யக்கோரி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து … Read more

#Breaking:இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு!

எதிர்க்கட்சிகளின் அமளியால் மக்களவை,மாநிலங்களவை இன்று பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த முறை நடைபெற்ற நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின்போது எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் செய்தனர்.இதனால், கூச்சல் குழப்பம் ஏற்பட்டு நாடாளுமன்ற அவை நடவடிக்கைகள் நடத்த முடியாமல் போய்விட்டது.இது தொடர்பாக மத்திய அரசு இந்த எம்.பி.க்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து இருந்தது. இந்த நிலையில்,நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.முதல் நாளான நேற்று … Read more

#Breaking: 3 வேளாண் சட்ட ரத்து மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் !

3 வேளாண் சட்ட ரத்து மசோதாவை நாடாளுமன்றத்தின் மக்களவையில் மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தாக்கல் செய்துள்ளார். டெல்லியில் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது.மேலும்,இந்தக் குளிர்காலக் கூட்டத்தொடரானது டிசம்பர் 23 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.அதன்படி,நடைபெறும் இந்தக் கூட்டத்தொடரில்,3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவது மற்றும் 26 மசோதாக்களை பாஜக தலைமையிலான மத்திய அரசு நிறைவேற்றத் திட்டமிட்டிருந்தது. ஆனால்,நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கிய சிறிது நேரத்திலேயே,பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்க்கட்சிகளின் மக்களவை … Read more

இன்று கூடுகிறது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்..! வேளாண் சட்ட ரத்து மசோதா தாக்கல்..!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின் முதல்நாளான இன்று, மூன்று வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறுவது உள்ளிட்ட 26 மசோதாக்களை பாஜக தலைமையிலான மத்திய அரசு நிறைவேற்ற திட்டம். மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் கடந்த ஒரு வருட காலமாக விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 3 வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என்று தெரிவித்திருந்தார். … Read more