சத்துணவு திட்டத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி – முன்னாள் அமைச்சர் சரோஜா மீது புகார்!

சத்துணவு திட்டத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் சரோஜா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த சத்துணவு மற்றும் சமூக நலத் துறை முன்னாள் அமைச்சர் சரோஜாவின் நெருங்கிய உறவினர் தான் குணசீலன். இவர், முன்னாள் அமைச்சர் சரோஜா சத்துணவு திட்டத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி 76 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மோசடி செய்ததாக ராசிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து அவர் … Read more

#Breaking:படிக்காமல் ஏன் ஃபார்வர்ட் செய்தீர்கள்?; நடிகர் எஸ்.வி சேகரின் வழக்கை ரத்து செய்ய – நீதிபதி மறுப்பு..

பெண் பத்திரிக்கையாளர்கள் பற்றிய அவதூறான கருத்து பகிர்ந்த நடிகர்எஸ்.வி சேகரின் வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்ற கிளை நீதிபதி மறுப்பு தெரிவித்துள்ளார். பெண் பத்திரிகையாளர்கள் பணிபுரிவது குறித்து அவதூறான கருத்தை நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர்,கடந்த  2018 ஆம் ஆண்டு தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதைத் தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் மிதார் மொய்தீன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். … Read more

முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி – மும்பை பங்கு சந்தை முதல் முறையாக 57 ஆயிரம் புள்ளிகளை தாண்டி வர்த்தகம்!

இந்திய பங்குச்சந்தை முதன்முறையாக 57 ஆயிரம் புள்ளிகளை தாண்டி வர்த்தகம் செய்யப்படும் நிலையில், ஒரே மாதத்தில் 4 ஆயிரம் புள்ளிகள் உயர்வு. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் குறியீட்டு எண் முதன் முறையாக 57 ஆயிரம் புள்ளிகளை தாண்டி புதிய உச்சத்தை எட்டியுள்ளது. மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் 312.39 (0.55%) புள்ளிகள் உயர்ந்து, 57,202.15 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்படுகிறது. இதுபோன்று தேசிய பங்குச்சந்தை நிஃப்டி குறியீட்டு எண் 17 ஆயிரம் புள்ளிகளை கடந்து வர்த்தகம் நடைபெறுகிறது. தேசிய … Read more

இளம் காதல் இயக்குனருடன் கைகோர்த்த தனுஷ்.!?

நடிகர் தனுஷ் அடுத்ததாக பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இயக்குனர் இளன் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்.  நடிகர் தனுஷ் தற்போது திருச்சிற்றம்பலம், மாறன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் மாறன் திரைப்படத்தை கார்த்திக் நரேன் இயக்கி வருகிறார். படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுமட்டுன்றி இயக்குனர் மித்ரன் ஆர்.ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் திரைப்படத்திலும் தனுஷ் நடித்து வருகிறார். அடுத்ததாக இயக்குனர் செல்வராகவன் இயக்கவுள்ள நானே … Read more

டெங்கு காய்ச்சல் : உத்தர பிரதேசத்தில் 32 சிறுவர்கள் உட்பட 40 பேர் பலி!

உத்தர பிரதேச மாநிலத்தில் டெங்கு காய்ச்சலால் 32 சிறுவர்கள் உட்பட 40 பேர் உயிரிழந்துள்ளனர்.  நாடு முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் மிக அதிகளவில் பரவி வரும் நிலையில், உத்திரப்பிரதேச மாநிலத்தில் கொரோனாவின் தாக்கம் தொடந்து பரவிக்கொண்டிருக்கிறது.  இந்நிலையில் உத்திரபிரதேசம் மாவட்டம் பிரசோபாத் மாவட்டத்தில் இதுவரை டெங்கு காய்ச்சலால் 32 குழந்தைகள் உட்பட 40 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதி அடையாளம் தெரியாத மர்ம காய்ச்சலுக்கு 5 குழந்தை உட்பட 6 பேர் … Read more

ராஜஸ்தான் விபத்து;உயிரிழந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் – பிரதமர்மோடி ஒப்புதல்..!

ராஜஸ்தான் மாநிலம் நகாவுர் பகுதியில் விபத்தில் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு நிதியுதவி வழங்க பிரதமர் ஒப்புதல் அளித்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் நகாவுர் பகுதியில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று லாரி மீது இன்று காலை திடீரென மோதி விபத்து ஏற்பட்டது.இந்த விபத்தில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர்.இது தொடர்பாக நகாவுர்,பாலாஜி காவல் நிலையம் போலீசார் கூறுகையில்,இந்த விபத்தில் எட்டு பெண்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர் என்றும் 7 பேர் பலத்த … Read more

இளம் இசையின் ஜாம்பவான்.! பின்னணி இசையின் அரசன்.! யுவன்.! U1.! என்றும் No.1.!

இளைஞர்களின் கொண்டாட்டம், காதலின் அழகு, காதலின் வலி, தெறிக்கும் பிண்ணனி இசை என்று யார் என்ன கேட்டாலும் தனது இசையை அள்ளி அள்ளி தரும் இளம் இசையுலக ஜாம்பவான் யுவன் சங்கர் ராஜாவுக்கு இன்று 42வது பிறந்தநாள். தமிழ் சினிமாவில் எத்தனை இசையமைப்பாளர்கள் உருவெடுத்தாலும், தமிழ் இளைஞர்கள் மத்தியில் யுவன் ஏற்படுத்திய தாக்கத்தை அவர்களால் தொட கூட முடியாது என்பதே உண்மை. காரணம், மற்ற இசையமைப்பாளர்கள் புது புது இசைக்கருவிகளை அறிமுகப்படுத்தி, புது புது இசை சப்தங்களை … Read more

மாணவர்கள் பள்ளிக்கு வர கட்டாயப்படுத்தவில்லை – தமிழக அரசு

பள்ளி மாணவர்கள் வகுப்புகளுக்கு நேரடியாக வர கட்டாயப்படுத்தவில்லை என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு பதில். கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு செப்டம்பர் 15ம் தேதி காலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டது. இதில், நாளை முதல்  முதல் 9-12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. அதேபோல், அனைத்து கல்லூரிகளும்நாளை முதல் திறக்கப்படவுள்ளது. பள்ளிகளை திறக்க பள்ளிக் கல்வித்துறை ஆயத்தமாகி வருகிறது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் அரசு வெளியிட்டுள்ளது. … Read more

மேல்சிகிச்சைக்காக சென்னை அழைத்து செல்லப்பட்ட புதுச்சேரி சபாநாயகர்….!

மேல்சிகிச்சைக்காக சென்னை அழைத்து செல்லப்படுகிறார் புதுச்சேரி சபாநாயகர் செல்வம்.  புதுச்சேரியில் கடந்த 26-ம் தேதி சட்டப்பேரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இக்கூட்டமானது செப்-3ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்நிலையில், புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்க வந்த சபாநாயகர் செல்வத்திற்கும் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் புதுச்சேரி அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், அவர் மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து … Read more

சென்னை உள்பட கடலோர மாவட்டங்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்.!

கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்கள் தெரிவித்துள்ளது.  தென்மேற்கு பருவக்காற்று காரணமாக இன்று தென் மாவட்டங்கள் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை: கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வளிமண்டல மேடுக்கு சுழற்சி காரணமாக … Read more