முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி – மும்பை பங்கு சந்தை முதல் முறையாக 57 ஆயிரம் புள்ளிகளை தாண்டி வர்த்தகம்!

இந்திய பங்குச்சந்தை முதன்முறையாக 57 ஆயிரம் புள்ளிகளை தாண்டி வர்த்தகம் செய்யப்படும் நிலையில், ஒரே மாதத்தில் 4 ஆயிரம் புள்ளிகள் உயர்வு.

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் குறியீட்டு எண் முதன் முறையாக 57 ஆயிரம் புள்ளிகளை தாண்டி புதிய உச்சத்தை எட்டியுள்ளது. மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் 312.39 (0.55%) புள்ளிகள் உயர்ந்து, 57,202.15 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்படுகிறது. இதுபோன்று தேசிய பங்குச்சந்தை நிஃப்டி குறியீட்டு எண் 17 ஆயிரம் புள்ளிகளை கடந்து வர்த்தகம் நடைபெறுகிறது.

தேசிய பங்குச்சந்தை நிஃப்டி குறியீட்டு எண் 102.70 (0.61%) புள்ளிகள் உயர்ந்து, 17,033.75 புள்ளிகள் அதிகரித்து வர்த்தகம் செய்யப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் சென்செஸ் 4 ஆயிரம் புள்ளிகள் அதிகரித்து புதிய சாதனையை படைத்துள்ளது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி குறியீட்டு எண் 17 ஆயிரம் புள்ளிகளை தாண்டியதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்