‘நான் ஒரு தியாகியின் மகன்’ – தியாகிகளின் அவமானத்தை நான் பொறுத்துக் கொள்ளமாட்டேன் – ராகுல் காந்தி

ஜாலியன் வாலாபாக் தியாகிகளுக்கு, இத்தகைய அவமானம், தியாகத்தின் பொருள் தெரியாதவர்களால் மட்டுமே செய்ய முடியும் என ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.  மத்திய அரசு ஜாலியன்வாலாபாக் பகுதியில் பல்வேறு புனரமைப்பு பணிகளை மேற்கொண்டுள்ளது. இதனையடுத்து கடந்த சனிக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஜாலியன் வாலாபாக் நினைவிடத்தின் புதுப்பிக்கப்பட்ட வளாகத்தை திறந்து வைத்தார். இந்த நினைவுச் சின்னத்தில் உள்ள டிஜிட்டல் முறையிலான அருங்காட்சியகத்தையும் பிரதமர் மோடி திறந்துவைத்தார். இந்த நிலையில், ஜாலியன் வாலாபாக் நினைவிடத்தை புதுப்பித்ததன் மூலம்,  அவதித்துள்ளதாக  … Read more

அந்தமானில் மிதமான நிலநடுக்கம்..!

இன்று அதிகாலையில் அந்தமான் நிக்கோபார் தீவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளின் தலைநகரமான போர்ட் பிளேயரில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை 12.25 மணியளவில் சுமார் 116 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தென்கிழக்கு போர்ட் பிளேயரில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட … Read more

பாகிஸ்தானிலுள்ள இந்து கோவில் மீது தாக்குதல்; கிருஷ்ணர் சிலை உடைப்பு!

பாகிஸ்தானிலுள்ள கிப்ரோ எனும் பகுதியிலுள்ள இந்து கோவில் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், அங்கிருந்த கிருஷ்ணர் சிலையும் உடைக்கப்பட்டுள்ளது.  நாடு முழுவதும் வெகு விமரிசையாக நேற்று கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்ட நிலையில், பாகிஸ்தான் நாட்டிலும் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இந்நிலையில் இதனை முன்னிட்டு பக்தர்கள் பலர் விரதம் மேற்கொண்டதுடன், கோவில்களிலும் வழிபாடு செய்துள்ளனர். இந்நிலையில் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் சங்கார் மாவட்டத்தில் கிப்ரோ எனும் பகுதியில் உள்ள கிருஷ்ணர் கோவிலில் கிருஷ்ணர் சிலை ஒன்று இருதுள்ளது. … Read more

இந்தோ-திபெத்திய எல்லை காவல்;புதிய டிஜியாக சஞ்சய் அரோரா பொறுப்பேற்பு..!

இந்தோ-திபெத்திய எல்லை காவல் (ITBP) இன் புதிய டிஜியாக சஞ்சய் அரோரா பொறுப்பேற்றுள்ளார். இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப்படை தலைவர் எஸ்.எஸ்.தேஸ்வால் இன்று ஆகஸ்ட் 31-ல் பணி ஓய்வு பெறுவதை முன்னிட்டு,இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப்படை தலைவராக ஐபிஎஸ் அதிகாரி சஞ்சய் அரோரா கடந்த ஆக.25 ஆம் தேதி நியமிக்கப்பட்டார்.அதேபோல எல்லை பாதுகாப்புப்படை தலைவராக ஐபிஎஸ் அதிகாரி பங்கஜ் குமார் சிங் நியமிக்கப்பட்டார். இந்நிலையில்,இந்தோ-திபெத்திய எல்லை காவல் (ITBP) இன் புதிய DG யாக சஞ்சய் அரோரா பொறுப்பேற்றுள்ளார்.1988ம் ஆண்டு, … Read more

சாலை மறியலில் ஈடுபட்டு கைதான ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் விடுவிப்பு…!

சாலை மறியலில் ஈடுபட்டு கைதான ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் விடுவிப்பு.  ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துடன் இணைக்கும் மசோதாவை, சட்டப்பேரவையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் தாக்கல் செய்தார். அதிமுகவினர் சட்டப்பேரவையில் எழுந்து நின்று அமளியில் ஈடுபட்டு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதிமுக எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம் மசோதாவை ஆரம்ப நிலையிலேயே எதிர்ப்பதாக தெரிவித்தார். அதனை தொடர்ந்து, இந்த மசோதாவை கண்டித்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். இந்நிலையில், அதிமுக எம்ஏல்ஏக்கள் வாலாஜா … Read more

#Breaking:4 மாநிலங்கள் சம்மதித்தால் மட்டுமே மேகதாது அணை – தமிழக அரசு திட்டவட்டம்.!

4 மாநிலங்கள் சம்மதித்தால் மட்டுமே மேகதாது அணை பற்றி காவிரி நதிநீர் மேலாண்மை கூட்டத்தில் விவாதிக்க வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு தொடர்ந்து தீவிரம் காட்டி வருகிறது.இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறது. இந்த நிலையில்,மேகதாது அணை பிரச்சனை தொடர்பாக காவிரி நதிநீர்  மேலாண்மை ஆணையத்தின் 13 வது ஆலோசனைக்கூட்டம் டெல்லியில் நீண்ட நாட்களுக்கு பிறகு நேரடியாக நடைபெற்று வருகிறது. காவிரி நதிநீர் … Read more

சட்டப்பேரவை முன்பு விநாயகர் சிலையுடன் போராட்டம் ….!

விநாயகர் சதூர்த்தி அன்று விநாயகர் சிலை வைத்து வழிபட அனுமதி மறுக்கப்பட்டதற்கு, விநாயகர் சிலையுடன் சிலை தயாரிப்பாளர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  தமிழகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரும் செப்டம்பர் 15-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது தொடர்பான அறிவிப்பு நேற்று வெளியாகிய நிலையில் வருகிற விநாயகர் சதுர்த்தி தினத்தன்று பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அனுமதி கிடையாது என்ற அறிவிப்பும் வெளியாகியது. மேலும் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக … Read more

10 ஆண்டுகளுக்கு பிறகு கேள்வி நேரத்தில் பதிலளித்த முதல்வர்..!

கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு முதலமைச்சர் ஒருவர் கேள்வி நேரத்தில் பதிலளித்துள்ளார். சட்டசபை கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக முதல்வர் சார்ந்த துறைகள் கேள்வி நேரத்தில் இடம்பெறாமல் இருந்தது. இதனால், கேள்வி நேரத்தில் முதல்வர் சார்ந்த துறைகளுக்கு பதில் வேண்டும் என்று எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில், இன்று நடைபெற்ற கேள்வி நேரத்தில், தமிழகத்தில் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களை முற்றிலும் தடுக்க தமிழக அரசு முன்வருமா..? என்று சட்டப்பேரவையில் பா.ம.க … Read more

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கைது!

விழுப்புரத்தில் அதிமுக முன்னால் அமைச்சர் சி.வி சண்முகம் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட நிலையில் கைது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் உள்ள பல்கலைக்கழகத்தை, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைப்பதை கண்டித்தும், ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை திறக்கக்கோரியும், விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் திருவள்ளுவர் சிலையின் கீழ் அதிமுக முன்னால் அமைச்சர் சிவி சண்முகம் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இதனிடையே,  சட்டப்பேரவையில் இன்று ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலை கழகத்துடன் இணைக்கும் சட்ட மசோதாவை உயர் … Read more

ஓடிய பேருந்தில் இருந்து உருண்டோடிய சக்கரம்…! நூலிழையில் உயிர்பிழைத்த பயணிகள்..!

சிவகங்கை மாவட்டம், திருபுவனத்தில் சாலையில் அரசு பேருந்து ஒன்று சென்றுக் கொண்டிருந்த போது, சக்கரம் கழன்று ஓடியுள்ளது.  சிவகங்கை மாவட்டம், திருபுவனத்தில் சாலையில் அரசு பேருந்து ஒன்று சென்றுக் கொண்டிருந்துள்ளது. அப்போது பேருந்தின் முன்பக்க சக்கரம் திடீரென, கழன்று தனியாக உருண்டோடியுள்ளது. இதனையடுத்து, சக்கரம் கழன்று ஓடியதை அறிந்த ஓட்டுநர் உடனடியாக பேருந்தை நிறுத்தியுள்ளார். இதனால், நல்வாய்ப்பாக எந்த ஒரு சேதமும் ஏற்படவில்லை. பயணிகளும் உயிர்தப்பினர். ஆனால், உருண்டோடிய சக்கரத்தால், சாலையோரம் நின்றுகொண்டிருந்த இருசக்கர வாகனங்கள் சேதமடைந்துள்ளன.