எட்டாவது முறையாக சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற தமிழக வீரர்

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் தேசிய சீனியர் டேபிள் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று முடிந்தது. நேற்றய ஆட்டத்தில் இறுதி சுற்று போட்டிகள் நடைபெற்றன. ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிபோட்டியில் ஏழுமுறை சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டி சென்ற தமிழகத்தை சேர்ந்த சரத் கமலும், மற்றொரு வீரரும் தமிழகத்தை சேர்ந்தவருமான ஆண்டனி அமல்ராஜை எதிர்கொண்டார். இதில் ஆண்டனி அமல்ராஜை வீழ்த்தி எட்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றார். இதன்மூலம் முன்னாள் டேபிள் டென்னிஸ் சாம்பியன் கமலேஷ் மேத்தாவின் சாதனையை சரத் … Read more

ஸ்கார்பியன் ரக நீர்மூழ்கி கப்பல் சோதனை ஓட்டம்!

3 வது ஸ்கார்பியன் ரக நீர்மூழ்கி கப்பல் சோதனை ஓட்டம் நடைபெற்றது. மும்பையில் உள்ள மசகோன்(Mazagon) கப்பல் கட்டும் தளத்தில், ஸ்கார்பியன் ரக நீர்மூழ்கிகள் கட்டப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே ஐ.என்.எஸ். கல்வாரி மற்றும் ஐ.என்.எஸ்.காந்தாரி ஆகிய நீர்மூழ்கி கப்பல்கள் இந்த தளத்தில் தயாரிக்கப்பட்ட நிலையில் மூன்றாவது கப்பலான ஐ.என்.எஸ். கரஞ்ச் இன்று சோதனை ஓட்டம் விடப்பட்டது. நீருக்கடியிரும், நீர்ப்பரப்பிலும் இருந்தவாறு இந்த நீர்மூழ்கீ கப்பலில் இருந்து போர்க்கருவிகளை பயன்படுத்தலாம். சோதனை ஓட்டம் விடப்பட்டதைத் தொடர்ந்து விரைவில் ஐ.என்.எஸ் … Read more

வசூலில் சக்கை போடு போட்ட எறும்பு மனிதன் படத்தின் டிரைலர் இதோ …

எறும்பு மனிதன் எனப்படும் ‘Ant-Man’ படத்தின முதல் பாகம் சுமார் 500 மில்லியன் டாலர் வசூலித்து சக்கைப் போடு போட்ட நிலையில் அப்படத்தின் இரண்டாம் பாகம் ‘Ant-Man and the Wasp’ படம் ஜூலை மாதம் வெளியாகிறது. மார்வெல் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள அப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. ஹாலிவுட்டின் பிரபல நட்சத்திரங்கள் பலரும் இடம் பெற்றுள்ள இந்த விறுவிறு ஆக்சன் படத்தை இயக்கியுள்ளார் பெய்ட்டன் ரீட்.இந்த படத்தின் டிரைலரை காண கீழே தெரியும் லிங்கை கிளிக் … Read more

குட்கா ஊழல் வழக்கு-தீர்ப்பினை ஒத்திவைத்த நீதிமன்றம்…!!

குட்கா ஊழல் வழக்கில் தீர்ப்பினை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. குட்கா ஊழல் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும், உயர்நீதிமன்றம் அல்லது உச்சநீதிமன்றத்தின் ஓய்வுப் பெற்ற நீதிபதிகள் கண்காணிக்க வேண்டும் என்று கூறி தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பிலும், மனுதாரர்கள் தரப்பிலும் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் … Read more

டெல்லி டேர்டெவில்ஸ் பயிற்சியாளராக ஜேம்ஸ் ஹோப்ஸ் மற்றும் சுபாடிப் கோஷ் நியமனம்

2018ம் ஆண்டிற்கான 11வது ஐ.பி.எல் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் பயிற்சியாளர்கள் குழுவை முன்னாள் ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டர்,ஜேம்ஸ் ஹோப்ஸ் இணைந்துள்ளார். இதனை அணி நிர்வாகம் ஜனவரி 29ம் தேதி தெரிவித்துள்ளது. மேலும் முன்னாள் அசாம் மற்றும் ரெயில்வேஸ் முதல் தர கிரிக்கெட் வீரர் சுபாதிப் கோஷ் புதிய ஃபீல்டிங் பயிற்சியாளராக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார்.இருப்பினும், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பிரவீன் அம்ரே மற்றும் ஸ்ரீதரன் ஸ்ரீராம் ஆகியோர் உதவி பயிற்சியாளர்களாகதொடர்ந்து இருக்கிறார்கள். அணியின் மேலாளராக சுனில் வால்சன் மற்றும் … Read more

2020ல் உலக டி20 இறுதிப் போட்டிகளை நடத்தும் எம்.சி.ஜி. ஐ.சி.சி அறிவிப்பு…!!

2020 ஆம் ஆண்டு மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் பெண்கள் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) 2020 ஆம் ஆண்டிற்கான ஆண்கள் மற்றும் பெண்கள் உலக டி20 போட்டிகளுக்கான இடங்களை இன்று அறிவித்துள்ளது.இது முதல் தடவையாக அதே ஹோஸ்ட் நாட்டில் தனித்தனி நிகழ்வாக விளையாடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் பெண்களுக்கான போட்டிகள் பிப்ரவரி 21 முதல் மார்ச் 8 வரை நடைபெறும் என்றும் ஆண்களுக்கான போட்டிகள்அக்டோபர் 18 முதல் நவம்பர் … Read more

பாஜகவை விமர்சிக்கும் ஒபிஎஸ்!பாஜகவின் நிலை குறித்து கருத்து…

பாஜக மற்றும் அதிமுக இடையே இணக்கமான சூழல் நிலவி வருவதாக எதிர்கட்சியினர் கூறிவரும் நிலையில் தற்போது அதற்கு மாறாக துணை முதல்வர் பன்னீர்செல்வம் கருத்து கூறியுள்ளார். தேசிய கட்சிகளை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்னை வேப்பேரியில் உள்ள பள்ளி விழாவில் கலந்துக் கொண்ட பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த ஓ.பன்னீர்செல்வம் எந்தக் காலத்திலும் தமிழகத்தில் எந்த நிலையிலும் தேசிய கட்சிகள் … Read more

இன்று தை பூச நாளன்று ராமலிங்க வள்ளலாரின் நினைவு நாளாக கொண்டாடப்படுகிறது…!!

இன்று தை பூச நாளன்று ராமலிங்க வள்ளலாரின் நினைவு நாளாக கொண்டாடப்படுகிறது வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார் அனைத்து சமய நல்லிணக்கத்திற்காகவும் சன்மார்க்கத்திற்காகவும் தன் வாழ்நாளை அர்ப்பணித்துப் பணியாற்றினார். இந்நோக்கத்தை அடையும் பொருட்டு சிதம்பரம் அருகே உள்ள வடலூரில் சத்திய ஞானசபையும் சத்திய தருமசாலையும் அமைத்தார். வேதம் ஆகமம், புராணம், இதிகாசம், சாத்திரம் போன்ற எதையும் நம்ப வேண்டாம். அவைகள் எதுவும் உண்மையில்லை என்று வள்ளலார் வலியுறுத்தினார். இந்து சமயத்தில் பல மூட நம்பிக்கைகளுக்குக் காரணமாக … Read more

ஆர்.எஸ்.எஸ். பத்திரிக்கையான 'அக்ரேனி' யில் 1945 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கார்ட்டூன்…!

ஆர்.எஸ்.எஸ். பத்திரிக்கையான ‘அக்ரேனி’ யில் 1945 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கார்ட்டூன். இந்த பத்திரிக்கையின் ஆசிரியர் நாதுராம் கோட்ஸே தான். அதில் மகாத்மா காந்தியை வதம் செய்யப்படவேண்டிய பத்து தலை ராவணனாக சித்தரித்துள்ளார்கள். மகாத்மா காந்தியோடு இதர காங்கிரஸ் தலைவர்களும் உள்ளனர். அத்துடன் மிகவும் முக்கியமாக நேதாஜி சுபாஷ் சந்திர போஸும் உள்ளனர்.இன்று நேதாஜி சுபாஷ் சந்திர பொசுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கிறார். ஆர்.எஸ்.எஸ் கோட்ஸேயின் பக்தரான நரேந்திர மோடி.

இன்று தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் எம். பக்தவச்சலம் நினைவு நாள்…

இன்று தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் எம். பக்தவச்சலம் நினைவு நாள் ஜனவரி 31, 1987 . இவர் 1963ம் ஆண்டு தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றார். அரசியல் ரீதியாகவும், தனிமனிதன் என்ற முறையிலும், மனிதாபிமான உணர்வோடு வாழ்ந்தவர் இவர். பக்தவச்சலம் பெருந்தலைவர் காமராஜரின் ஆட்சிக்குப் பின்னரும், அறிஞர் அண்ணாதுரையின் ஆட்சிக்கு முன்னரும் தமிழக முதல்வராக இருந்தார். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றவர். இவரது பதவிக்காலத்தோடு தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சியும் முடிவுக்கு வந்தது. இவரது ஆட்சிக் காலத்தில் தான், … Read more