10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்ற கைதிகளை விடுவிக்க முதல்வர் நடவடிக்கை…!

தமிழகத்தில் உள்ள சிறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்று உள்ளவர்களை விடுவிக்க சிறைத்துறை விதிகளுக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு செய்துள்ளார்.

நங்கள் எந்த சோதனைகளையும் வீழ்த்தி வெற்றி கண்டு சாதனைகளாக மாற்றியுள்ளோம்; துணைமுதல்வா் ஓபிஎஸ்

திண்டுக்கல்: திமுக டெபாசிட்டை இழந்து பரிதாபமாக நிற்கிறது.இனிமேல் வேறு எந்த தேர்தல் வந்தாலும் திமுக தேறாது என மதுரையிலிருந்து ஒரு குரல் வருகிறது அதுதான் அழகிரி எனவும் நங்கள் எந்த சோதனைகளையும் வீழ்த்தி வெற்றி கண்டு சாதனைகளாக மாற்றியுள்ளோம் என மாண்புமிகு துணைமுதல்வா் ஓபிஎஸ் அவா்கள் தெரிவித்துள்ளார்.

அசாமில் சட்டவிரோதமான தங்கியிருக்கும் குடிமக்களை கண்டுபிடிப்பதற்கு NRC புதுபிப்பு…!!

அசாம்: 1.9 கோடி விண்ணப்பதாரர்களின் பெயரை உள்ளடக்கிய குடிமக்கள் தேசிய பதிவேட்டின் முதல் வரைவு இன்று துவங்கியது. இது அசாமில் சட்டவிரோதமான தங்கியிருக்கும் குடிமக்களை கண்டுபிடிப்பதற்கு இத்தகைய குடிமக்கள் தேசிய பதிவேடு (NRC) புதுப்பிக்கப்பட்டுள்ளது.  

தமிழகத்தில் அதிக லாபத்தை அள்ளிக்குவித்த படம் எது தெரியுமா….?

இணையதளத்தில் 2018-ம் ஆண்டு அதிக லாபத்திடை பெற்ற டாப் 5 படங்களின் பட்டியல் வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது. இந்த வருடம் மொத்தம் 171 படங்கள் ரிலீஸாகியுள்ளது. இந்நிலையில் இந்த பருடம் வெளியான படங்களின் பட்டியலில் 2.0 படம் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடதிதில் தளபதியின் சர்க்கார் படம் உள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நச்சு ஆலைகளால் ஏற்படும் பாதிப்பு குறித்த குறும்படம் வெளியீடு….!!!

நச்சு அலைகளால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதை வலியுறுத்து குறும்படம் வெளியிடப்பட்டுள்ளதாக வணிகர் சங்க தலைவர் பேட்டியளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய வணிகர் சங்கத்தலைவர் வெள்ளையன், போபாலில் ஏற்பட்டது போன்ற பாதிப்பு நாட்டில் வேறெங்கும் ஏற்படக்கூடாது. நச்சு அலைகளால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட கூடாது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் எல்லாருக்கும் விழிப்புணர்வு ஏற்படும் வகையில் குறும்படம் வெளியிடப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

​புத்தாண்டு வாழ்த்துகளால் ’வாட்ஸ்அப்’ சேவை முடங்கியது

ஃபேஸ்புக் நிறுவனத்தின் மெசேஜிங் அப்ளிகேஷனான வாட்ஸ் அப், தற்போது பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் அனைத்துத் தரப்பட்ட மக்களாலும் பரவலாகப் பயன்படுத்தப்படும் சமூக வலைதளம் மற்றும் தகவல் பரிமாற்றும் செயலி வாட்ஸ்அப் ஆகும். தற்போதுள்ள சூழலில் மிக முக்கியத் தகவல் பரிமாற்றும் ஊடகமாக உள்ளது. புத்தாண்டு முன்னிட்டு அனைவரும்  வாட்ஸ்அப்பில் புத்தாண்டு தெரிவிக்க வாழ்த்துக்கள் மெசேஜ் அனுப்பியவர்கள், அது சென்றடையாத நிலையில், நண்பர்களின் வாட்ஸ்அப்பை சோதனை செய்துள்ளனர். அதுவும் வேலை செய்யாமல் இருந்துள்ளது. இது தொடர்பாக, வாட்ஸ் அப் தரப்பில் இருந்து … Read more