#IPL 2024 : ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறினார் சமி ? அப்போ குஜராத் கதி ..?

இந்தியாவில் ஆண்டுக்கு ஒரு முறை நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 17-வது சீசன் தற்போது மார்ச் மாதம் 22-ம் தேதி தொடங்கும் என ஐபிஎல் லீக்கின் தலைவரான அருண் துமால் தெரிவித்திருந்தார். அதை தொடர்ந்து ஐபிஎல் தொடருக்கான ஏற்பாடுகள் நடைபெற்று கொண்டே வரும் நிலையில் முதல்பாதியில் நடைபெறும் சில போட்டிகளுக்கான அட்டவணையை இன்று மாலை வெளியிடுவதாக தெரிவித்தனர். இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரும், குஜராத் டைட்டன்ஸ் அணியின் வீரருமான முகமது சமி வரவிருக்கும் … Read more

தேசிய விளையாட்டு விருதுகள் விழா – முகமது ஷமி, வைஷாலிக்கு அர்ஜுனா விருது!

ArjunaAwards

2023-ஆம் ஆண்டிற்கான மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா விருது, அர்ஜுனா விருது உள்ளிட்ட தேசிய விருதுகளை பெறும் இந்திய விளையாட்டு வீரர்களின் பெயர் பட்டியல் கடந்த டிசம்பர் 20ம் தேதி மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டது. மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தால், சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் அர்ஜுனா விருதுக்கான வீரர்கள் பட்டியலில், கிரிக்கெட் வீரர் முகமது ஷமி, தமிழகத்தை சேர்ந்த செஸ் வீராங்கனை … Read more

ஐசிசி விருதுகள் 2023: சிறந்த வீரருக்கான பட்டியலில் 3 இந்தியர்களின் பெயர் பரிந்துரை..!

2023-ம் ஆண்டு ஐசிசி விருதுகளுக்கான பரிந்துரை பட்டியலை ஐசிசி அறிவித்தது வருகிறது. அதன்படி, ஒருநாள் , டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் 2023-ம் ஆண்டு சிறப்பாக செயல்பட்ட வீரர்களின் பெயரை ஐசிசி அறிவித்தது வருகிறது. அதன்படி, 2023-ம் ஆண்டு ஒருநாள் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட 4 பேர் கொண்ட வீரர்களின் பெயர் பட்டியல் வெளியானது. இந்தப் பட்டியலில் இந்திய அணி சேர்ந்த மூன்று பேரும், நியூசிலாந்தை சேர்ந்த ஒருவரும் இடம் பெற்றுள்ளனர். அதன்படி இந்திய அணியில் இந்திய … Read more

முகமது ஷமிக்குப் பதிலாக முக்கிய பந்துவீச்சாளரை அணியில் இணைத்த பிசிசிஐ..!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் காயமடைந்த முகமது ஷமிக்கு பதிலாக அவேஷ் கானை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) சேர்த்துள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டி 3 ஜனவரி 2024 முதல் தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் நியூலேண்ட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நவம்பர் 30 அன்று அறிவிக்கப்பட்ட டெஸ்ட் அணியில் முகமது ஷமி சேர்க்கப்பட்டார். ஆனால், வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி கணுக்கால் காயத்தில் இருந்து இன்னும் குணமடையாததால் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து … Read more

தென்னாபிரிக்கா தொடரில் இருந்து முகமது ஷமி, தீபக் சாஹர் நீக்கம்… பிசிசிஐ அறிவிப்பு!

Deepak Chahar

தென்னாபிரிக்கா சென்றுள்ள இந்திய மூன்று விதமான தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், 3  டி20 தொடர் முடிந்த நிலையில், இரு அணிகளும் தலா போட்டிகளில் வெற்றி பெற்று தொடர் சமன் செய்யப்பட்டது. இதையடுத்து, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடர் நாளை முதல் 21ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இடம்பெற்றிருந்த தீபக் சாஹர், குடும்ப மருத்துவ … Read more

இந்தியாவிற்கு பெரிய அடி.. நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் விலகல் ..?

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையே 2 டெஸ்ட் கொண்ட தொடர் நடைபெறவுள்ளது. இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி விளையாட மாட்டார் தகவல் வெளியாகியுள்ளது.  இருப்பினும், முகமது ஷமி விளையாடுவது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. முகமது ஷமி ஏன் விளையாட முடியாது? Cricbuzz அறிக்கையின்படி, முகமது ஷமி கணுக்கால் காயத்தால் அவதிப்பட்டு வருவதால்அவர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் இடம்பெற மாட்டார் என … Read more

என்னை யாரும் தடுக்க முடியாது.. இதற்காக நான் பெருமை கொள்கிறேன் – சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த முகமது ஷமி!

Mohammed Shami

நான் ஒரு இஸ்லாமியனாகவும்  பெருமை கொள்கிறேன், ஒரு இந்தியாகவும் பெருமை கொள்கிறேன் என்று இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். நடந்து முடிந்த உலகக்கோப்பை தொடரில் இலங்கைக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்திய முகமது ஷமி சாதனை படைத்தார். அப்போது, இதனை கொண்டாட விதமாக முகமது ஷமி தரையில் அமர்ந்து தனது கைகளை நீட்டி பிராத்தனை (Sajdah) செய்ய சென்றதாகவும், பின் சுதாரித்துக்கொண்டு பின்வாங்கியதாகவும், சிலர் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான … Read more

ஷமியின் “ஹிந்தி” பதிவு.. நக்கலாக “தமிழில்” பதிலளித்த அஸ்வின்.. வைரலாகும் ட்விட்!

இந்திய  அணியில் கிரிக்கெட் வீரரான முஹமது ஷமி, ஹிந்தியில் பதிவிட்டுள்ளார். இதனை ரி-ட்வீட் செய்த அஸ்வின், “தேங்க்ஸ் டா தம்பி.. நீ இல்லைனு ஒரு சின்ன வருத்தம்” என தமிழில் பதிவிட்டுள்ளார். ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, மெல்போர்ன் மைதானத்தில் நடந்த இரண்டாவது டெஸ்டில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது. இதனால் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. இதனால் 2020-ல் … Read more

முகமது ஷமி இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு உதாரணமாக இருக்கவேண்டும்- ஜான்டி ரோட்ஸ்.!

முகமது ஷமி அணியில் உள்ள இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு உதாரணமாக இருக்கவேண்டும் என்று ரோட்ஸ் கூறியுள்ளார். உலகளவில் ஐபிஎல் போட்டிகளுக்கு ரசிகர் பட்டாளமே உள்ளது. ஆனால் இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே வரும் சூழலில், ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 -ம் தேதி முதல் ஐபிஎல் போட்டிகள் தொடங்கவுள்ளது. இந்த தொடருக்கான பயிற்சி ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில், அணைத்து அணியினரும் ஐபிஎல் போட்டிக்காக அமீரகதிற்கு சென்றுள்ளனர், மேலும் இந்நிலையில் கிங்ஸ் லெவேன் பஞ்சாப் … Read more

3 முறை தற்கொலை செய்ய முடிவெடுத்தேன்.! அதிர்ச்சி தகவலை கூறிய முகமது ஷமி.!

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் முகமது சமி ஆகியோர் இணையதள பக்கத்தில் பேசி கொண்டனர். அப்போது முகமது சமி மனம் திறந்து தனது வாழ்வில் ஏற்பட்ட சில கசப்பான நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.  தற்போது கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், எந்தவித விளையாட்டு நிகழ்வுகளும் நடைபெறாமல் இருக்கிறது. இருந்தாலும் விளையாட்டு வீரர்கள் சமூக வலைதளம் மூலமாக ரசிகர்களை சந்தித்து அவர்களை மகிழ்வித்தும் வருகின்றனர்.  இந்நிலையில் இந்திய … Read more