இந்தியாவிற்கு பெரிய அடி.. நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் விலகல் ..?

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையே 2 டெஸ்ட் கொண்ட தொடர் நடைபெறவுள்ளது. இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி விளையாட மாட்டார் தகவல் வெளியாகியுள்ளது.  இருப்பினும், முகமது ஷமி விளையாடுவது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

முகமது ஷமி ஏன் விளையாட முடியாது?

Cricbuzz அறிக்கையின்படி, முகமது ஷமி கணுக்கால் காயத்தால் அவதிப்பட்டு வருவதால்அவர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் இடம்பெற மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், ரோஹித் ஷர்மா உள்ளிட்ட இந்திய அணி வீரர்கள் நாளை  தென்னாப்பிரிக்கா புறப்படுவார்கள். ஆனால் தென்னாப்பிரிக்கா செல்லும் வீரர்கள் பட்டியலில் முகமது ஷமி இடம்பெற மாட்டார் என கூறப்படுகிறது. அப்படி  தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முகமது ஷமி விளைபடாமல் இருந்தால் இந்திய அணிக்கு பெரும் அடியாக கருதப்படுகிறது.

இந்தியா அணி சுற்றுப்பயணத்தின் அட்டவணை:

தற்போது இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. அதே நேரத்தில், இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணியை தென் ஆப்பிரிக்கா வீழ்த்தியது. இதன் மூலம் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் தென்னாப்பிரிக்க அணி 1-0 என முன்னிலையில் உள்ளது.

இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையே 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறவுள்ளது. ஒருநாள் தொடரின் முதல் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் டிசம்பர் 17ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதைத் தொடர்ந்து இரண்டாவது ஒருநாள் போட்டி டிசம்பர் 10ஆம் தேதி செயின்ட் ஜார்ஜ் பூங்காவில் நடைபெற உள்ளது. பின்னர் இரு அணிகள் மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டி பார்லில் டிசம்பர் 21ம் தேதி நடைபெறுகிறது.

டி20 மற்றும் ஒருநாள் போட்டிக்கு பிறகு இரு அணிகளுக்கும் இடையே டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் செஞ்சூரியனில் டிசம்பர் 26-ம் தேதி தொடங்குகிறது. அதே நேரத்தில் இரண்டாவது டெஸ்ட் கேப்டவுனில் ஜனவரி 3-ம் தேதி தொடங்குகிறது.

author avatar
murugan