ஐபிஎல் 2024: ஹைதராபாத் அணிக்கு ஷாக் கொடுத்த குஜராத்..! அசத்தல் வெற்றி

IPL 2024: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி அசத்தலான வெற்றியை பெற்றது. 2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 12வது லீக் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் விளையாடியது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 162 ரன்களை எடுத்தது. … Read more

அவர் சிஎஸ்கே-வுக்கு மிகப்பெரிய பிளஸ் – ருதுராஜ் கெய்க்வாட்.!

Ruturaj Gaikwad

Ruturaj Gaikwad: ஷிவம் துபேக்கு நம்பிக்கை மிக அதிகமாக உள்ளது. சொல்லப்போனால் அவர் எங்களுக்கு ஒரு பெரிய பிளஸ் என சிஎஸ்கே அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறியுள்ளார். 17ஆவது ஐபிஎல் தொடரின் 7ஆவது போட்டியில், டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 206 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, 207 ரன்கள் இலக்கை துரத்திய குஜராத் டைட்டன்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 … Read more

வயசானாலும் நான் சிங்கம்! அசர வைக்கும் தல தோனியின் கேட்ச்..வைரல் வீடியோ..!!

dhoni catch ipl 2024

MS Dhoni : குஜராத் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் எம்.எஸ். தோனி பிடித்த அசத்தலான கேட்ச் அனைவரையும் வியக்க வைத்துள்ளது. நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிபெற்று இந்த சீசனில் இரண்டாவது வெற்றியையும் பதிவு செய்தது. இந்த போட்டியில் சென்னை அணி பேட்டிங்கின் போது தோனி கடைசி ஓவரில் சிக்ஸர் அடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். … Read more

இது ஒரு லேர்னிங்.. ஆரம்பத்திலேயே தோல்வியை பாத்தது நல்லது… சுப்மன் கில்!

Shubman Gill

Shubman Gill: இந்த தோல்வி இந்த தொடரின் ஆரம்பத்திலேயே வந்ததும் ரொம்ப நல்லது என்று நினைக்கிறன் என குஜராத் கேப்டன் சுப்மன் கில் கூறியுள்ளார். ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. இந்த இரு அணிகளிலும் தங்களது முதல் போட்டியில் வெற்றியை பதிவு செய்த நிலையில், இரண்டாவது போட்டியில் களம் கண்டது. அந்தவகையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற … Read more

CSKvsGT : வெற்றியை தொடரும் சிஎஸ்கே ..!! 63 ரன்களில் சென்னை அணி அபார வெற்றி ..!

CSK Victory 2nd [file image]

CSKvsGT : ஐபிஎல் தொடரின் 7-வது போட்டியாக சென்னை அணியும், குஜராத் அணியும் தற்போது சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால் பேட்டிங் செய்ய சென்னை அணியின் தொடக்க வீரர்களான  ருதுராஜும், ரச்சின் ரவிந்தராவும் களமிறங்கி குஜராத் அணியின் பவுலிங்கை துவம்சம் செய்தனர். அதிரடி காட்டிய ரச்சின் ரவீந்திரா 46 ரன்களில் ஆட்டமிழக்க அவரை தொடர்ந்து களமிறங்கிய ரஹானேவும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து … Read more

CSKvsGT : பேய் அடி அடித்த சிஎஸ்கே வீரர்கள் ..!! குஜராத் அணிக்கு 207 ரன்கள் இலக்கு ..!!

CSK 1st Innings [file image]

CSKvsGT : ஐபிஎல் தொடரின் 7-வது போட்டியாக சென்னை அணியும், குஜராத் அணியும் தற்போது சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால் பேட்டிங் செய்ய சென்னை அணியின் தொடக்க வீரர்களான  ருதுராஜும், ரச்சின் ரவிந்தராவும் களமிறங்கினர். ரச்சின் ரவீந்திரா தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி குஜராத் அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தார். ஆக்ரோஷமாக விளையாடிய அவர் 3 சிக்ஸர், 6 ஃபோர்களுடன் … Read more

CSKvsGT : பேட்டிங் செய்ய களமிறங்கும் சிஎஸ்கே ..!! 2-வது வெற்றியின் முனைப்பில் குஜராத் ..!

CSKvsGT : ஐபிஎல் தொடரின் 7-வது போட்டியாக சென்னை அணியும், குஜராத் அணியும் தற்போது சேப்பாக்கம் மைதானத்தில் விளையாட களமிறங்கி உள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால் பேட்டிங் செய்வதற்கு சென்னை அணி களமிறங்க உள்ளது. இந்த போட்டி MA சிதம்பரம் (சேப்பாக்கம்) மைதானம் என்பதால் பவுலர்களுக்கு ஏதுவான, குறிப்பாக ஸ்பின் பவுலர்களுக்கு எப்போதுமே ஏதுவான பிட்சாக அமையக்கூடும். ஆனால், தற்போது பேட்டிங் பிட்ச்சாக அமைத்துள்ளது என்பதால் … Read more

இந்த முறை விடுங்க..அடுத்த வாட்டி பாருங்க..இஷான் கிஷனுக்கு ஆதரவாக இறங்கிய பொல்லார்ட்!

Kieron Pollard about ishan kishan

Kieron Pollard : இந்த முறை இஷான் கிஷன் சரியாக விளையாடவில்லை அடுத்த முறை பயங்கரமாக விளையாடுவார் என கீரன் பொல்லார்ட் தெரிவித்துள்ளார்.  நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதியதில் குஜராத் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இந்த சீசனில் தங்களுடைய முதல் வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் வீரர் இஷான் கிஷன் டக் … Read more

ரஷித் கானை எதிர்கொள்ள ஹர்திக் பாண்டியா விரும்பவில்லை – இர்பான் பதான்!!

rashid khan gt irfan pathan

HardikPandya :  குஜராத் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் ரஷித் கானை ஹர்திக் பாண்டியா எதிர்கொள்ள விரும்பவில்லை என இர்பான் பதான்  தெரிவித்துள்ளார்.  ஐபிஎல் : குஜராத் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.  முதலில் பேட்டிங் செய்த  குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில்  6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்து.  அதனை தொடர்ந்து 169 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் … Read more

இன்னும் 13 மேட்ச் இருக்கு பாத்துக்கலாம் – தோல்விக்கு பின் ஹர்திக் கருத்து.!

Hardik Pandya

நேற்று நடந்த மும்பை அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்தது குறித்து ஹர்திக், இது ஒரு பிரச்சினை இல்லை, இன்னும் 13 ஆட்டங்கள் இருக்கு என்று கூறினார். புதிய கேப்டனான ஹர்திக் பாண்டியாவின் மும்பை இந்தியன்ஸ் அணி, நேற்றைய தினம் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடக்க ஆட்டத்தில் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. தோல்விக்கு பின் பேசிய மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஆன பாண்டியா பேசுகையில் ‘இன்னும் 13 போட்டிகள் உள்ளதால் அது ஒரு பிரச்சினை … Read more