டாஸ் முடிஞ்சதுன்னு நினைச்சேன் போட்டியே முடிஞ்சது -கே.எல்.ராகுல் பேச்சு!

kl rahul about ind vs sa

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வரலாற்று வெற்றி பெற்றது. செஞ்சூரியனில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த நிலையில், அடுத்ததாக நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்று இந்திய அணி தொடரை 1-1 என சமன் செய்தனர். இந்த இரண்டாவது போட்டி மிகவும் குறைவான நேரத்திலே நடந்து முடிந்தது. குறிப்பாக சொல்ல போனால் குறைந்த ஓவர்கள் வீசப்பட்டு முடிந்த  டெஸ்ட் போட்டி என்றால் அது இதுவாக தான் இருக்கும் என்று … Read more

தோனிக்கு பிறகு சாதனை படைத்த ரோஹித் ஷர்மா..!

இந்தியா -தென்னாப்பிரிக்கா இடையான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இதில்,  முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து, 2-வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது.  இப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா கேப்டன் டீன் எல்கர் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். இருப்பினும், தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் வெறும் 55 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து இந்திய அணி 153 ரன்களுக்கு … Read more

IndVsSA: 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!

SAvIND

தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியா ஆகிய அணிகளுக்கு இடையே நேற்று முதல்  (ஜனவரி 3)  கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில்  நடைபெற்று வந்தது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி 23.2 ஓவர்களில் 55 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. அடுத்து களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 34.5 ஓவரில் 153 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனால் முதல் … Read more

2-வது டெஸ்ட்: இந்தியாவிற்கு 79 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தென்னாப்பிரிக்கா..!

தென்னாப்பிரிக்கா இந்தியா அணிகளுக்கு இடையே நேற்று முதல் 2-வது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானதில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி 23.2 ஓவர்களில் 55 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில் முகமது சிராஜ் 6 விக்கெட்களையும், பும்ரா, முகேஷ் குமார் தலா 2 விக்கெட்களையும் பறித்தனர். அடுத்து களமிறங்கிய இந்திய அணி முதல் … Read more

முதல் நாள் முடிவில் இந்திய அணி முன்னிலை..!

தென்னாப்பிரிக்கா இந்தியா அணிகளுக்கு இடையே இன்று முதல் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானதில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி  23.2 ஓவர்களில்  அனைத்து விக்கெட்டையும் இழந்து 55 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியில் முகமது சிராஜ் 6 விக்கெட்களையும், பும்ரா, முகேஷ் குமார் தலா 2 விக்கெட்களையும் பறித்தனர்.  அடுத்து … Read more

அடுத்தடுத்து டக் அவுட்…153 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன இந்தியா ..!

தென்னாப்பிரிக்கா இந்தியா ஆகிய அணிகளுக்கு இடையே இன்று 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானதில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி  23.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து முதல் இன்னிங்ஸில் 55 ரன்கள் மட்டுமே எடுத்தது. தென்னாப்பிரிக்கா அணியில் அதிகபட்சமாக பெடிங்கம் 12, வெர்ரைன் 15 ரன்கள் மட்டுமே எடுத்தனர். மற்ற வீரர்கள் … Read more

பயிற்சியின் போது ஷர்துல் தாக்கூருக்கு ஏற்பட்ட காயம்..!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, பயிற்சியின் போது ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்கூருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இந்த காயத்தின் தீவிரம் இன்னும் தெரியவில்லை, மேலும் அவருக்கு ஸ்கேன் பரிசோதனையும் செய்யப்படலாம். தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஷர்துல் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து வெளியேறலாம் என்று கூறப்படுகிறது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் ஜனவரி 3ஆம் தேதி தொடங்குகிறது. தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று டி20 போட்டி, … Read more

புஜாராவை விட சிறந்த வீரர் இருக்காங்களா? கொந்தளித்த ஹர்பஜன் சிங்!

harbhajan singh about pujara

செஞ்சூரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி தோல்வி அடைந்தது. இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்திய அணியின் தோல்வி பற்றி முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் விமர்சித்து பேசி வருகிறார்கள். குறிப்பாக நேற்று சுனில் கவாஸ்கர் விமர்சித்து பேசி இருந்தார். அவரை தொடர்ந்து இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் பேசியுள்ளார். இது … Read more

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இருந்து கோட்ஸி விலகல்..!

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையே இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவை இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வீழ்த்தியது . இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையே ஜனவரி 3 முதல் கேப்டவுனில் நடைபெறவுள்ள இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிக்கு முன்பாக தென்னாப்பிரிக்கா அணிக்கு மற்றொரு அடி ஏற்பட்டுள்ளது. அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் … Read more

தவறு நடந்ததில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளலாம்! ரோஹித் ஷர்மா பேச்சு!

rohit sharma speech

செஞ்சூரியன் நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் இந்தியா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கேப்டன் ரோஹித் ஷர்மா முதல் இன்னிங்ஸில் கே.எல்.ராகுலின் அபார சதத்தை பாராட்டியும் தோல்வி பற்றியும் பேசி உள்ளார். இது குறித்து பேசிய அவர் ” கே.எல்.ராகுல் அடித்த சதம் மிகவும் முக்கியமான ஒன்றாகும். இந்திய அணியில் தொடர்ச்சியாக விக்கெட்கள் விழுந்த சமயத்தில் அவர் மட்டும் நிதானமாக விளையாடினார். அவரிடம் இருந்து நாம் இதனை தான் கற்றுக்கொள்ளவேண்டும். அந்த அளவிற்கு அவர் நிதானமாக விளையாடினார். ஒவ்வொரு தனி … Read more