அதிமுக வேட்பாளர் கடத்தல்.? தேர்தலுக்கு தடை கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு.!

கரூர் மாவட்ட ஊராட்சி மன்ற துணை தலைவர் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றத்தில் அதிமுக வேட்பாளர் சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.  கரூர் மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர் திருவிக என்பவரை அழைத்துக்கொண்டு, முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கரூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்துகொண்டிருந்தார். அப்போது காரில் வந்த சிலர் முன்னாள் அமைச்சர் காரை வழிமறித்து கார் கண்ணாடியை உடைத்துள்ளனர். மேலும், … Read more

20 ரூபாய்க்கு பெட்ரோல்.. இலவச பைக்.. மேக்கப் கிட்.! வாக்காளர்களை அரசவைத்த வேட்பாளர்.! .

ஹரியானாவில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட ஒரு வேட்பாளர், இலவச பைக், 20 ரூபாய்க்கு பெட்ரோல், 100 ரூபாய்க்கு சிலிண்டர், மேக்கப் கிட் என வாக்குறுதிகளை அறிவித்துள்ளார். ஹரியானா மாநிலத்தில் பஞ்சாயத்து தேர்தலில் ஒரு வேட்பாளர் கொடுத்த அதிரிபுதிரியான வாக்குறுதிகள் தான் தற்போது இணையத்தில் வெகு வைரலாக பரவி வருகிறது. அரியானா மாநிலம், சிர்சாத் எனும் கிராமத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட ஜெய்கரன் லத்வால் எனும் வேட்பாளர் தனது தேர்தல் வாக்குறுதி பட்டியலில் நம்பமுடியாத நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை … Read more

தேர்தல் தோல்வி.. காங்கிரஸ் வேட்பாளர் மாரடைப்பால் மரணம்.. அதிர்ச்சியில் ஆதரவாளர்கள்…

மத்திய பிரதேசத்தில் நடந்து முடிந்த நகராட்சி கவுசின்சிலர் தேர்தலில் தோல்வியடைந்த காங்கிரஸ் வேட்பாளர் மாரடைப்பால் மரணித்துள்ளார்.  மத்திய பிரதேச மாநிலத்தில் 11 நகராட்சிகளுக்கு அண்மையில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அதில் ரேவா எனும் மாவட்டத்தில் ஹனுமனா நகரில் 9 வது வார்டில் கவுன்சிலர் பதவிக்கு போட்டி நடந்தது. அதில் காங்கிரஸ் சார்பில் ஹரி நாராயண குப்தா என்பவர் போட்டியிட்டார். ஆனால் அந்த உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. அப்போது, காலை முதலே, உடல்நல குறைவால் இருந்துள்ளார். … Read more

உள்ளாட்சி தேர்தல் -கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!

உள்ளாட்சி தேர்தலில் அனைவரும் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும் போன்ற  கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் 28-ம் தேதி தொடக்கம் எனவும் வாக்கு எண்ணிக்கை 22-ஆம் தேதியும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தலில் பின்பற்ற வேண்டிய கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அனைவரும் கண்டிப்பாக மாஸ்க் … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை வெளியிட தடையுமில்லை – உயர் நீதிமன்றம்

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை வெளியிட எந்த தடையுமில்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட எந்த தடையும் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 15 மாநகராட்சிகளில் உள்ள 1,064 வார்டுகள், 121 நகராட்சிகளில் உள்ள 3,468 வார்டுகள், 528 பேரூராட்சிகளில் உள்ள 8,288 வார்டுகள் ஆகியவற்றுக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 100% வெற்றி பெற வேண்டும் – திமுக தலைவர் மு.க ஸ்டாலின்

விரைந்து பூத் கமிட்டி அமைக்க வேண்டும் என்று மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிவுறுத்தல். சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 77 மாவட்ட செயலாளர்கள், 30 எம்.பிக்கள், 125 சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றதாக கூறப்பட்டது. இந்த நிலையில், கூட்டத்தில் பேசிய திமுக தலைவர், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீதம் வெற்றி பெற வேண்டும். நகர்ப்புற உள்ளாட்சி … Read more

மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மாநில தேர்தல் ஆணையத்துக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள ஊரகப் பகுதிகளுக்கு அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் ஒட்டுமொத்தமாக 77.9 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், வாக்குகள் எண்ணும் பணியும் முடிந்து வெற்றி பெற்றவர்களும் அறிவிக்கப்பட்டது. இந்த … Read more

ஊரக உள்ளாட்சி தேர்தலில் கோட்பாடுகள் கடைபிடிக்கவில்லை – ஜி.கே.வாசன் குற்றசாட்டு

ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் கோட்பாடுகள் பல்வேறு இடங்களில் மீறப்பட்டுள்ளது என ஜி.கே.வாசன் குற்றசாட்டு. திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், தமிழகத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை அரசு கொள்முதல் செய்தால் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.15,000 வரை விவசாயிகளுக்கு வருவாய் கிடைக்கும் என்று தெரிவித்தார். நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி திமுக அரசு அறிவித்த திட்டங்களை செயல்படுத்த தாமதம் செய்து வருவதால், அறிவித்த திட்டங்கள் ஏமாற்று வேலையோ என மக்கள் … Read more

ஊரக உள்ளாட்சி தேர்தலில் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவில் 78.47% வாக்குகள் பதிவு…! – மாநில தேர்தல் ஆணையம்

ஊரக உள்ளாட்சி தேர்தலில் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவில் 78.47% வாக்குகள் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலானது இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இதில் முதல்கட்ட தேர்தல் அக்.6-ஆம் தேதி நடைபெற்ற நிலையில், இரண்டாம்கட்ட தேர்தல் அக்.9-ஆம் தேதி நடைபெற்றது. இதில் இரண்டாம் கட்டமாக நடைபெற்ற தேர்தலில், 78.47% வாக்குகள் பதிவாகியுள்ளது. இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய … Read more

ஆளுங்கட்சியினரின் கொலைவெறித் தாக்குதலுக்கு கண்டனம் – டிடிவி தினகரன்

ஆளுங்கட்சியினரின் அடாவடி செயலுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என டிடிவி தினகரன் அறிக்கை. இதுகுறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், காஞ்சிபுரம் வருவாய் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற இரண்டாவது கட்ட உள்ளாட்சித் தேர்தல் வாக்கு பதிவின்போது, குன்றத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட கெருகம்பாக்கம் ஊராட்சி, அன்னை இந்திரா நகர் வாக்குச் சாவடியில் ஆளும் தி.மு.க.வினர், அமமுகவினர் மீது கண்மூடித்தனமான கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தாக்குதலில் குன்றத்தூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் … Read more