நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 100% வெற்றி பெற வேண்டும் – திமுக தலைவர் மு.க ஸ்டாலின்

விரைந்து பூத் கமிட்டி அமைக்க வேண்டும் என்று மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிவுறுத்தல். சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 77 மாவட்ட செயலாளர்கள், 30 எம்.பிக்கள், 125 சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றதாக கூறப்பட்டது. இந்த நிலையில், கூட்டத்தில் பேசிய திமுக தலைவர், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீதம் வெற்றி பெற வேண்டும். நகர்ப்புற உள்ளாட்சி … Read more

டிசம்பர் 6 ம் தேதி தேமுதிகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் …!

தேமுதிகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் டிசம்பர் 6 ம் தேதி நடைபெறும் என அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. வருகின்ற திங்கட்கிழமை டிசம்பர் 6 ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது என தேமுதிக தலைமை கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், கட்சியின் வளர்ச்சி உள்ளிட்ட முக்கியமான விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்:அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது.

சென்னை:ஓபிஎஸ்,இபிஎஸ் தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த மாதம் முடிவடைந்த நிலையில்,நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில்,அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கினைப்பளார் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைச்செயலகத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் மட்டுமல்லாமல் அக்கட்சியின் முன்னாள் அமைச்சர்கள்,தலைமைக் கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டுள்ளனர். இக்கூட்டத்தில்,நகர்ப்புற … Read more

நவ.6,7,8 ஆகிய தேதிகளில் அமமுக நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் – டிடிவி தினகரன் அறிவிப்பு..!

நவ.6,7,8 ஆகிய தேதிகளில் அமமுக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் டிடிவி தினகரன் ஆலோசனை நடத்தவுள்ளார். அமமுக தலைமை நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் வருகின்ற நவம்பர் 6 ஆம் தேதி முதல் 3 நாட்களுக்கு சென்னையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என டிடிவி தினகரன் அறிவிப்பு விடுத்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக அமமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: “ஒவ்வொரு கணமும் நம்மை இயக்கிக் கொண்டிருக்கும் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மக்கள் நலக்கொள்கைகளை வாழவைத்திடவும், தமிழ்நாட்டின் உரிமைகளைக் … Read more

#Breaking:அதிமுக செயலாளர்கள் கூட்டம்;ஓபிஎஸ் புறக்கணிப்பு..!

சென்னையில் நடைபெற்று வரும் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்காமல் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் புறக்கணித்துள்ளார். சென்னை,ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைச்செயலகத்தில், அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டமானது தற்போது நடைபெற்று வருகிறது.அந்தக் கூட்டத்தில்,சென்னை மற்றும் புறநகர் மாவட்ட செயலாளர்களுடன் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை மேற்கொண்டுள்ளார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் தோல்விக்கு பிறகு நடைபெறும் முதல் கூட்டம் இதுவாகும்.அதன்படி,மாவட்ட செயலாளர்கள் ஜெயக்குமார்,ஆதிராஜன்,கே.பி.கந்தன்,தி.நகர் சத்யா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். மேலும்,இந்தக்கூட்டத்தில் அதிமுக சட்டமன்ற எதிர்க்கட்சி … Read more

மீண்டும் நாளை மாவட்ட செயலாளர்களை சந்திக்கிறார் ரஜினி.!

ரஜினிகாந்த், மீண்டும் நாளை மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில், நாளை காலை இந்த கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் னைப்பெற்ற கூட்டத்தில் தனிப்பட்ட ஒரு விஷயத்தில் தனக்கு ஏமாற்றம் இருப்பதாக ரஜினி செய்யலர்களிடம் தெரிவித்திருந்தார். இதுகுறித்து நாளை நடைபெற உள்ள ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் … Read more

ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை கூடுகிறது.!

ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை சென்னையில் நடைபெறுகிறது. சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில் மாவட்ட செயலாளர்களை நாளை காலை 10 மணிக்கு ரஜினிகாந்த் சந்திக்கிறார். இந்த கூட்டத்தில் ரஜினி கட்சி தொடங்குவது தொடர்பான முக்கிய ஆலோசனை நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல் வந்துள்ளது. மேலும் அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக ரஜினிகாந்த் தெரிவித்திருக்கும் நிலையில், ஒரு வருடத்திற்கு பிறகு தற்போது மூன்றாவது முறையாக ரஜினி மக்கள் மன்றத்தின் ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் … Read more