மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மாநில தேர்தல் ஆணையத்துக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள ஊரகப் பகுதிகளுக்கு அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.

இந்தத் தேர்தலில் ஒட்டுமொத்தமாக 77.9 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், வாக்குகள் எண்ணும் பணியும் முடிந்து வெற்றி பெற்றவர்களும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், 9 மாவட்டங்களில் அண்மையில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது பதிவு செய்யப்பட்ட வீடியோ பதிவுகளை, முடிவுகள் வெளியிடப்பட்ட 60 நாட்கள் வரை பாதுகாக்க வேண்டுமென மாநில தேர்தல் ஆணையத்துக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்