ஊரக உள்ளாட்சி தேர்தலில் கோட்பாடுகள் கடைபிடிக்கவில்லை – ஜி.கே.வாசன் குற்றசாட்டு

ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் கோட்பாடுகள் பல்வேறு இடங்களில் மீறப்பட்டுள்ளது என ஜி.கே.வாசன் குற்றசாட்டு.

திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், தமிழகத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை அரசு கொள்முதல் செய்தால் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.15,000 வரை விவசாயிகளுக்கு வருவாய் கிடைக்கும் என்று தெரிவித்தார்.

நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி திமுக அரசு அறிவித்த திட்டங்களை செயல்படுத்த தாமதம் செய்து வருவதால், அறிவித்த திட்டங்கள் ஏமாற்று வேலையோ என மக்கள் நினைப்பதாக கூறினார். மேலும், 9 மாவட்டங்களில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் கோட்பாடுகள் பல்வேறு இடங்களில் மீறப்பட்டுள்ளது என்றும் குற்றசாட்டியுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்