ஆவின் பால் பாக்கெட்டில் ‘ஈ’.! அதிர்ச்சியில் நுகர்வோர்.! அதிகாரிகள் தீவிர விசாரணை.!

மதுரை, ஆரப்பாளையம் பகுதியில் ஆவின் பால் பாக்கெட்டில் ஈ இருந்ததால் நுகர்வோர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் பால் பாக்கெட் திரும்ப பெறப்பட்டு, எப்படி ஈ வந்தது என விசாரணை நடைபெற்று வருகிறது.   மதுரை மாநகராட்சி ஆரப்பாளையம் பகுதிக்கு உட்பட்ட 33வது வழித்தடத்தில் ஆவின் பால் வேன் மூலம் டிப்போக்களுக்கு அனுப்பப்படும். அப்படி, நாகமலை புதுக்கோட்டை, மதுரை காமராஜ் பல்கலை கழகம், கீழமாத்துார் உ ள்ளிட்ட ஆவின் பால் டெப்போக்களுக்கு பால் பாக்கெட்டுகள் அதிகாலையில் வினியோகிக்கப்பட்டன. இதில் காமராஜ் காமராஜ் … Read more

கடவுள் முன் அனைவரும் சமம்.! யாருக்கும் முதல் மரியாதை கிடையாது.! உயர்நீதிமன்ற கிளை அதிரடி தீர்ப்பு.!  

புதுக்கோட்டை மாவட்டம் குலமங்கலம் கோவில் திருவிழா தொடர்பான வழக்கில், ‘ கடவுள் முன் அனைவரும் சமம். யாருக்கும் முதல்மரியாதை என்பது கிடையாது.’ என மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.  புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு கோவிலில் குறிப்பிட்ட சிலர் முதல் மரியாதை கேட்டு தகராறு செய்வதாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. அதில் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி அமர்வு அதிரடி உத்தரவை பிறப்பித்து உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில், குலமங்கலம் எனும் கிராமத்தில் உடையபராசக்தி அம்மன் கோயில் … Read more

நீர்நிலை புறம்போக்கு ஆக்கிரமிப்பு.! அதிகாரிகள் மெத்தனம்.! உயர்நீதிமன்றம் கருத்து.!

தூத்துக்குடி, விளாத்திகுளம், கல்லாறு ஓடை பகுதி புறம்போக்கு ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கில் தூத்துக்குடி கலெக்டர் பதிலளிக்க மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.  தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் பேரூராட்சி பகுதியில் இருக்கும்  கல்லாறு ஓடை பகுதிகளில் உள்ள புறம்போக்கு இடங்கள் ஆக்கிரமிக்கபட்டதாக புகார்கள் எழுந்தது. இது தொடர்பான வழக்கு , மதுரை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கானது, உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இந்த வழக்கை விசாரித்த … Read more

ஜம்முவில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் நாளை மதுரை கொண்டுவரப்படுகிறது.!

ஜம்முவில் உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணனின் உடல் நாளை மதுரை புதுப்பட்டிக்கு கொண்டுவரப்பட உள்ளது.  ஜம்மு காஷ்மீர், ரஜோரி அருகே 25 கி.மீ தொலைவில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்ட நிலையில், 3 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களில் ஒருவர் தமிழகத்தை சேர்ந்த லட்சுமணன் என்ற ராணுவ வீரர் ஆவர்.24 வயதான  இவர்  மதுரை மாவட்டம் T.புதுப்பட்டியை … Read more

சூடான கஞ்சி பானையில் தவறி விழுந்து பக்தர் உயிரிழப்பு!!

பழங்காநத்தம் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவிலுக்கு ஆடி இரண்டாவது வெள்ளிக்கிழமை (ஜூலை 29) சிறப்பு வழிபாடு செய்ய முத்துக்குமார் ஏ முருகன் சென்றபோது இந்த விபத்து நடந்துள்ளது. பூஜை முடிந்து பக்தர்கள் பிரசாதத்தை பயன்படுத்தி அம்மனுக்கு கஞ்சி தயார் செய்தனர். முத்துக்குமாரும் இன்னும் சில பக்தர்களும் சுமார் 6 பெரிய பாத்திரங்களில் கஞ்சியைக் காய்ச்சிக் கொண்டிருந்தபோது, அவருக்கு வலிப்பு ஏற்பட்டு கொதிக்கும் பாத்திரம் ஒன்றில் விழுந்து பலத்த தீக்காயம் ஏற்பட்டது. அவரது அலறல் சத்தம் … Read more

தீயணைப்புத்துறை அலுவலகத்தில் திடீர் விசிட் அடித்த முதல்வர்..!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், மதுரை உசிலம்பட்டி தீயணைப்பு துறை அலுவலகத்தில் திடீரென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், அவ்வப்போது காவல்துறை உள்ளிட்ட அலுவலகங்களில் திடீர் ஆய்வு மேற்கொள்வதுண்டு உண்டு. அந்த வகையில், இன்று மதுரையில் தீயணைப்புத்துறை அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். மதுரை உசிலம்பட்டி தீயணைப்பு துறை அலுவலகத்தில் திடீரென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார். அப்போது தீயணைப்பு துறை அலுவலகத்தில் எத்தனை பேர் பணியில் உள்ளனர் என்பது தொடர்பான விவரங்களை கேட்டறிந்துள்ளார்.

இது மதுரைக்கு ஓர் நன்நாள்..! முதல்வருக்கு நன்றி தெரிவித்த சு.வெங்கடேசன் எம்.பி..!

ஜல்லிக்கட்டு கலையரங்கம், மத்திய சிறைச்சாலை இடமாற்றம், தொழிற்பேட்டை , 100 கோடியில் வைகை வடகரைச் சாலை , 4 முக்கிய பாலங்கள், பாதாள சாக்கடை வசதி என எமது கோரிக்கைகளை ஏற்று அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி என சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் ட்வீட். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முதல்வராக பொறுப்பேற்றது முதல், தமிழக மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். அந்த வகையில், இன்று மதுரையில், 320 கோடி ரூபாய் மதிப்பில் … Read more

#எய்ம்ஸ் : தமிழ்நாட்டிற்கு மட்டும் ஏன் நிதிஇல்லை? அண்ணாமலையாருக்கு மட்டுமே தெரியும் – பீட்டர் அல்போன்ஸ்

தமிழ்நாட்டிற்கு மட்டும் ஏன் நிதிஇல்லை? அண்ணாமலையாருக்கு மட்டுமே தெரியும் என பீட்டர் அல்போன்ஸ் ட்வீட். பிரதான் மந்திரி ஸ்வஸ்திய சுரக்ஷா யோஜனா (பிஎம்எஸ்எஸ்ஒய்) திட்டம் கடந்த 2003ம் ஆண்டு ஆகஸ்ட் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 22 புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 2018 இல் மதுரை தோப்பூரில் அமைக்க இடம் தேர்வு செய்து 2019 ஜனவரி 27 இல் அடிக்கல் … Read more

நடுரோட்டில் 20 அடி ஆழத்தில் ஏற்பட்ட திடீர் பள்ளம்..! அச்சத்தில் வாகன ஓட்டிகள்..!

மதுரையின் பிரதான சாலையின் நடுவே 20 அடி ஆழத்தில் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிப்பதோடு, பல இடங்களில் அணைகள், ஏரிகள் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், கடந்த சில நாட்களாக, வகுப்பறை மற்றும் வீட்டிற்குள் பள்ளம் ஏற்பட்டது. இந்நிலையில், இன்று மதுரையின் பிரதான சாலையின் நடுவே 20 அடி ஆழத்தில் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது. மேல அனுப்பானடி சாலையில் பாதாள சாக்கடை … Read more

“இது மிகவும் கொடூரமானது;மதச்சார்பின்மைக்கு எதிரானது” – மதுரை எம்பி சு.வெங்கடேசன் கண்டனம்!

மதுரை:நவராத்திரி விழாவை முன்னிட்டு போடப்பட்ட உத்தரவு;இனி இதுபோன்ற தவறு நடக்காது என எம்பி சு.வெங்கடேசன் அவர்களுக்கு யூனியன் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. நவராத்திரி விழாவை கொண்டாடும் வகையில், ஒன்பது வண்ண ஆடைகளை அணிந்து வர வேண்டும் என்று யூனியன் வங்கி தனது ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளதற்கும்,மேலும்,அவ்வாறு கடைபிடிக்காதவருக்கு தலா 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அறிவித்துள்ளதற்கும் மதுரை எம்பி சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும்,இந்த உத்தரவை திரும்ப பெறவேண்டும் என்று கூறி,யூனியன் வங்கி தலைவருக்கு சு.வெங்கடேசன் அவர்கள் … Read more