#எய்ம்ஸ் : தமிழ்நாட்டிற்கு மட்டும் ஏன் நிதிஇல்லை? அண்ணாமலையாருக்கு மட்டுமே தெரியும் – பீட்டர் அல்போன்ஸ்

தமிழ்நாட்டிற்கு மட்டும் ஏன் நிதிஇல்லை? அண்ணாமலையாருக்கு மட்டுமே தெரியும் என பீட்டர் அல்போன்ஸ் ட்வீட்.

பிரதான் மந்திரி ஸ்வஸ்திய சுரக்ஷா யோஜனா (பிஎம்எஸ்எஸ்ஒய்) திட்டம் கடந்த 2003ம் ஆண்டு ஆகஸ்ட் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 22 புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 2018 இல் மதுரை தோப்பூரில் அமைக்க இடம் தேர்வு செய்து 2019 ஜனவரி 27 இல் அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்தில் அமைக்கப்படவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து அரசியல் பிரபலங்கள் பலரும் விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், சிறுபான்மை நல ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஹிமாச்சல் பிரதேசத்தில் ₹1470 கோடியில் 250 ஏக்கரில் 750 படுக்கைகளுடன் கட்டப்பட்டு வரும் எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனை 6 மாதங்களில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் -ஒன்றிய அமைச்சர் அனுராக் தாகூர் .தமிழ்நாட்டிற்கு மட்டும் ஏன் நிதிஇல்லை? அண்ணாமலையாருக்கு மட்டுமே தெரியும்.’ என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.