இது மதுரைக்கு ஓர் நன்நாள்..! முதல்வருக்கு நன்றி தெரிவித்த சு.வெங்கடேசன் எம்.பி..!

S. Venkatesh

ஜல்லிக்கட்டு கலையரங்கம், மத்திய சிறைச்சாலை இடமாற்றம், தொழிற்பேட்டை , 100 கோடியில் வைகை வடகரைச் சாலை , 4 முக்கிய பாலங்கள், பாதாள சாக்கடை வசதி என எமது கோரிக்கைகளை ஏற்று அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி என சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் ட்வீட்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முதல்வராக பொறுப்பேற்றது முதல், தமிழக மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். அந்த வகையில், இன்று மதுரையில், 320 கோடி ரூபாய் மதிப்பில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளை பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகியவற்றை காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இது மதுரைக்கு ஓர் நன்நாள் ! ஜல்லிக்கட்டு கலையரங்கம், மத்திய சிறைச்சாலை இடமாற்றம், தொழிற்பேட்டை , 100 கோடியில் வைகை வடகரைச் சாலை , 4 முக்கிய பாலங்கள், பாதாள சாக்கடை வசதி என எமது கோரிக்கைகளை ஏற்று அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எமது மாவட்ட மக்கள் சார்பில் மனமார்ந்த நன்றி !’ என பதிவிட்டுள்ளார்.