கடவுள் முன் அனைவரும் சமம்.! யாருக்கும் முதல் மரியாதை கிடையாது.! உயர்நீதிமன்ற கிளை அதிரடி தீர்ப்பு.!  

புதுக்கோட்டை மாவட்டம் குலமங்கலம் கோவில் திருவிழா தொடர்பான வழக்கில், ‘ கடவுள் முன் அனைவரும் சமம். யாருக்கும் முதல்மரியாதை என்பது கிடையாது.’ என மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. 

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு கோவிலில் குறிப்பிட்ட சிலர் முதல் மரியாதை கேட்டு தகராறு செய்வதாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. அதில் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி அமர்வு அதிரடி உத்தரவை பிறப்பித்து உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில், குலமங்கலம் எனும் கிராமத்தில் உடையபராசக்தி அம்மன் கோயில் உள்ளது. அந்த கோவிலில் தேரோட்ட விழா நடைபெறுவது வழக்கம். அங்கு, கோயிலுடன் தொடர்பில்லாத மேலப்பனையூர் கிராமத்தை சேர்ந்த சிலர் கோவில் விழாவில் முதல்மரியாதை வேண்டும் என தகராறு செய்வதாக, மதுரை உயர்நீதிமன்ற கிளையில் குலமங்கலத்தைச் சேர்ந்த சுப்பையா வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணை மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள்  மகாதேவன், சத்யநாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய நீதிபதி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அதனை விசாரித்த நீதிபதிகள், ‘ கடவுள் முன்னர் அனைவரும் சமமே. கடவுள் முன் யாருக்கும் முதல் மரியாதை கிடையாது. குறிப்பிட்ட தேதியில் திருவிழாவை திட்டமிட்டு நடத்தலாம்.’ என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment