தனது முன்னாள் பள்ளி ஆசிரியரை சந்தித்த பிரதமர் மோடி..!

குஜராத் பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், தனது முன்னாள் ஆசிரியரையும் சந்தித்து ஆசி பெற்றுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் குஜராத்தில் ரூ.3500 கோடி மதிப்பிலான நலத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், கடந்த 20 ஆண்டுகளாக குஜராத் அடைந்துவரும் வளர்ச்சி மாநிலத்தின் பெருமையாக காணப்படுகிறது என தெரிவித்தார். இந்த  நிலையில், குஜராத் பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், தனது முன்னாள் ஆசிரியரையும் சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.

#BREAKING : இந்த திட்டத்தை தமிழகம் முழுவதும் ஏன் அமல்படுத்தக்கூடாது? – உயர்நீதிமன்றம்

நீலகிரி மாவட்டத்தில் விற்கப்படும் மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை தமிழகம் முழுவதும் ஏன் அமல்படுத்தக் கூடாது? என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மலைப் பிரதேசமான நீலகிரி மாவட்டத்தில் வனப் பகுதிகளில் டாஸ்மாக் கடைகளில் கண்ணாடி பாட்டில்களில் விற்கப்படும் மது பானங்களை பயன்படுத்திய பின்னர் காலி மது பாட்டில்களை வனப்பகுதிகளில் வீசிச் செல்வதால், அவற்றை விலங்குகள் மிதிக்கும்போது காயமடைவதாகவும், அடுத்த மூன்று மாதங்களில் அவை இறந்து விடுவதாக நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் … Read more

தலைக்கேறிய போதை…! தண்டவாளத்தில் ரயில் ஏறி இறங்கிய ரயில்..! இருவர் உயிரிழப்பு..!

தூத்துக்குடியில்மதுபோதையில் ரயில் தண்டவாளத்தில் படுத்துறங்கிய 3 பேர் மீது ரயில் ஏறி இறங்கியதில் 2 பேர் உயிரிழப்பு.  தூத்துக்குடியில் மதுபோதையில் ரயில் தண்டவாளத்தில் படுத்துறங்கிய 3 பேர் மீது ரயில் ஏறி இறங்கியதில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஜெபசிங், திருவிக நகரை சேர்ந்த மாரிமுத்து, பசும்பொன் நகரை சேர்ந்த மாரிமுத்து ஆகிய 3 பேரும் மதுபோதையில் 3-வது மைல் மேம்பாலத்தின் கீழே உள்ள தண்டவாளத்தில் உறங்கியுள்ளனர்.  அப்போது அந்த வழியே … Read more

ரம்மியில் பணத்தை இழந்த கணவர்…! தற்கொலை செய்துகொண்ட மனைவி..!

கணவன் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த காரணத்தால் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இன்று ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு குழந்தைகள் முதல் முதியோர் வரை பலர் அடிமையாகியுள்ளனர். இதனால் தங்களது பணத்தை இழப்பது மட்டுமல்லாமல், தங்களது குடும்பத்தையும் சிலர் இழக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. அந்த வகையில், சென்னை நந்தபாக்கத்தில் கணவன் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த காரணத்தால் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். மகனின் பள்ளி கட்டணத்துக்காக  வைத்திருந்த பணத்தை கணவர் எடுத்து சூதாட்டத்திற்கு பயன்படுத்தியதால், மனமுடைந்த மனைவி … Read more

வரும் 13-ம் தேதி திறக்கப்படும் பள்ளிகள்…! முதல்வர் ஆய்வு…!

3-ம் தேதி திருவள்ளூர் மாவட்டம் புழல் ஒன்றியம் அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு. தமிழகத்தில் மாணவர்களுக்கு வரும் 12-ஆம் தேதி வரை கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனையடுத்து, கோடை விடுமுறை முடிந்து 13-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. இதனையடுத்து, 13-ம் தேதி திருவள்ளூர் மாவட்டம் புழல் ஒன்றியம் அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு, அன்றைய தினமே எண்ணும் எழுத்தும் திட்டத்தையும் துவக்கி வைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழக அரசின் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கவை – ராமதாஸ்

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டம் குறித்து அரசுக்கு பரிந்துரைக்க வல்லுனர் குழு அமைக்கப்பட்டிருப்பதற்கு வரவேற்பு தெரிவித்துடாக்.ராமதாஸ் ட்வீட்.  தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டம் குறித்து அரசுக்கு பரிந்துரைக்க வல்லுனர் குழு அமைக்கப்பட்டிருப்பதும், அக்குழுவின் அறிக்கையை இரு வாரங்களில் பெற்று அவசர சட்டம் பிறப்பிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பதற்கு டாக்.ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டம் குறித்து அரசுக்கு … Read more

போலி E – Mail – அண்ணா பல்கலைக்கழகம் எச்சரிக்கை..!

அண்ணா பல்கலைக்கழகத்தில் இடம் இருப்பதாக கூறி முன் பணம் கேட்டு வரும் இ-மெயில்கள் போலியானவை என்று அண்ணா பல்கலைக்கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான முன்பதிவு ஜூன் 20 முதல் ஆன்லைனில் தொடங்க உள்ளது. மேலும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும், அசல் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யவும் ஜூலை 19ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை குறித்த தவறான தகவல் பரவி வருகிறது. அதன்படி அண்ணா பல்கலைக்கழகத்தில் … Read more

அண்ணாமலை ஒரு அடிமை – சீமான் அதிரடி

அண்ணாமலை அவரே முதலாளி போல பேசி வருகிறார். அவர் டெல்லிக்கு காவடித் தூக்கும் ஒரு அடிமை சீமான் பேட்டி.  நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், அண்ணாமலை அவரே முதலாளி போல பேசி வருகிறார். அவர் டெல்லிக்கு காவடித் தூக்கும் ஒரு அடிமை. ஈழத்தை பெற்றுக் கொடுப்பேன் என அமித் ஷா, நரேந்திர மோடி என்னிடம் கூற வேண்டும். 8 ஆண்டுகளாக ஈழத்தை பற்றி பேசாத … Read more

சிதம்பரம் நடராஜர் கோயில், தீட்சிதர்களின் தனிப்பட்ட சொத்து அல்ல – கே.பாலகிருஷ்ணன்

சிதம்பரம் நடராஜர் கோயில், தீட்சிதர்களின் தனிப்பட்ட சொத்து அல்ல என கே.பாலகிருஷ்ணன் அறிக்கை.  சிதம்பரம் நடராஜர் கோயில், தீட்சிதர்களின் தனிப்பட்ட சொத்து அல்ல. அது மக்களின் சொத்தே ஆகும். அங்கு நிர்வாகம் ஒழுங்காக நடக்கிறதா என்று ஆய்வு செய்வதற்கான உரிமை அரசுக்கு உண்டு என சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘சிதம்பரம் தில்லை நடராஜர் கோயிலின் கணக்கு வழக்குகளை ஆய்வு செய்வதற்காக சென்ற அறநிலையத்துறை உயர் அதிகாரிகளை தீட்சிதர்கள் தடுத்து … Read more

ஜாக்கிரதை : தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு…!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 144 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 144 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை. 79 மருத்துவமனையிலிருந்து குணமடைந்து வீடு … Read more