திமுக கூட்டணி – மதுரை, திண்டுக்கல்லில் சிபிஎம் போட்டி!

cpm

CPM : திமுக கூட்டணியில் சிபிஎம் கட்சிக்கு மதுரை, திண்டுக்கல் ஆகிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு திமுக கூட்டணியில் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வந்த தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நிறைவு பெற்றது. Read More – 15 தொகுதிகளுக்கான விருப்ப பட்டியல்… பாஜகவிடம் கொடுத்த ஓபிஎஸ்! திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 10, விசிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 , மதிமுகவுக்கு 1, கொமதே … Read more

மதுரை துணை மேயர் மீது கொலை முயற்சி.? எம்.பி சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் போராட்டம்.!

Madurai Deputy Mayor Nagarajan

மதுரை துணை மேயராகவும் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகராட்சி குழு உறுப்பினராகவும் பொறுப்பில் இருந்து வரும் நாகராஜனின் வீடு மற்றும் அலுவலகம் மீது மர்ம நபர்கள் நேற்று மாலை தாக்குதல் நடத்தினர். இவரது வீட்டிற்கு நேற்று வந்த 2 மர்ம நபர்கள் அரிவாள் உள்ளிட்ட கூறிய ஆயுதங்களோடு நாகராஜனை தாக்க முற்பட்டுள்ளனர். இதனை கண்டு சுதாரித்துக்கொண்ட நாகராஜன் தனது மனைவி, குழந்தைகளை சட்டென்று அழைத்து கொண்டு வீட்டினுள் சென்றார். இதனால் கோபமுற்ற அந்த மர்ம நபர்கள் … Read more

களைகட்டும் அயோத்தி கும்பாபிஷேக விழா.! தவிர்க்கும் I.N.D.I.A கூட்டணி தலைவர்கள்.!

Ayodhya - Ramar Temple Opening

இந்து கடவுள்களில் ஒருவராக இருக்கும் ஸ்ரீ ராமர் பிறந்த இடமாக உத்திரபிரதேச மாநிலம், அயோத்தி கருதப்படுகிறது. ராமர் பிறந்த ஊரில் அவருக்கு ஒரு பிரமாண்ட கோயில் கட்ட மத்திய பாஜக அரசு முயற்சிகள் மேற்கொண்டு அதற்கான வேலைகளை முழுவீச்சில் ஆரம்பித்தது. தற்போது பெரும்பாலான பணிகள் நிறைவடைந்ததை அடுத்து வரும் ஜனவரி மாதம் இதன் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது வரும் ஜனவரி 22, 2024இல் ராமர் கோயில், பிரான் பிரதிஷ்டா (Pran Pratishtha) விழா வெகு கோலாகலமாக நடைபெற … Read more

தமிழகம் முழுவதும் அக்.11ம் தேதி சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி..!

தமிழகம் முழுவதும் அக்.11ம் தேதி சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி நடைபெறும் என அறிவிப்பு.  அக்.11ம் தேதி தமிழகம் முழுவதும் சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காங்., மதிமுக, விசிக, சிபிஎம், மனிதநேய மக்கள் கட்சி, நாம் தமிழர் கட்சி, திராவிடர் கழகம் போன்ற கட்சிகள் பங்கேற்கிறது. இதுகுறித்து கே.பாலகிருஷ்ணன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘சமூக நல்லிணக்க மனித சங்கிலி அறப்போர் அக்டோபர் 11 ஆம் தேதி மாலை 4 மணிக்கு … Read more

சிதம்பரம் நடராஜர் கோயில், தீட்சிதர்களின் தனிப்பட்ட சொத்து அல்ல – கே.பாலகிருஷ்ணன்

சிதம்பரம் நடராஜர் கோயில், தீட்சிதர்களின் தனிப்பட்ட சொத்து அல்ல என கே.பாலகிருஷ்ணன் அறிக்கை.  சிதம்பரம் நடராஜர் கோயில், தீட்சிதர்களின் தனிப்பட்ட சொத்து அல்ல. அது மக்களின் சொத்தே ஆகும். அங்கு நிர்வாகம் ஒழுங்காக நடக்கிறதா என்று ஆய்வு செய்வதற்கான உரிமை அரசுக்கு உண்டு என சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘சிதம்பரம் தில்லை நடராஜர் கோயிலின் கணக்கு வழக்குகளை ஆய்வு செய்வதற்காக சென்ற அறநிலையத்துறை உயர் அதிகாரிகளை தீட்சிதர்கள் தடுத்து … Read more

மே 25 முதல் 30-ஆம் தேதி வரை தொடர் ஆர்ப்பாட்டம் – சிபிஎம், சிபிஐ, விசிக அறிவிப்பு

மத்திய அரசை கண்டித்து மே 25 முதல் 30-ஆம் தேதி வரை தொடர்போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக சிபிஎம், சிபிஐ, விசிக கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளனர்.  பெட்ரோல் மீதான மத்திய கலால் வரியை லிட்டருக்கு 8 ரூபாயும்,டீசல் மீதான லிட்டருக்கு 6 ரூபாயும் குறைக்கிறோம்.இதனால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.9.5ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.7ம் குறையும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார். இதற்கு வரவேற்பும், எதிர்ப்பும் எழுந்து வரும் நிலையில், மத்திய … Read more

எதெற்கெடுத்தாலும் இவ்வாறு முரண்டு பிடிக்கும் நிலை சரியானதல்ல – கே.பாலகிருஷ்ணன்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீதேறி வழிபட பொதுமக்களுக்கு அனுமதி அளித்திருப்பதற்கு வரவேற்பு தெரிவித்து கே.பாலகிருஷ்ணன் ட்வீட்.  சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீதேறி வழிபட பொதுமக்களுக்கு அனுமதியளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டிருப்பதற்கு வரவேற்பு தெரிவித்து கே.பாலகிருஷ்ணன் ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீதேறி வழிபட பொதுமக்களுக்கு அனுமதியளித்து தமிழ்நாடு அரசின் அரசாணை, இன்றைய தினமே அமலுக்கு வந்திருப்பது மகிழ்ச்சி தருகிறது. ஆரம்பத்தில் வி.ஐ.பி தரிசனம் மட்டுமே கனகசபை … Read more

அரசு காவல்துறையை சீர்திருத்தும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும் – கே.பாலகிருஷ்ணன்

காவல்துறையை சீர்திருத்தும் விதத்திலான முயற்சிகளை அரசு திட்டமிட்டு முன்னெடுக்க வேண்டும் என சிபிஎம் அறிவுறுத்தல். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சென்னையில், கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி, காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட விக்னேஷ் என்ற இளைஞர் அடுத்த நாள். காவல் நிலையத்தில் உயிரிழந்தார். அவருடைய மரணத்திற்கு ‘வலிப்பு நோய்’ காரணம் என்று காவல்துறையினர் கூறிவந்த நிலையில். உடற்கூராய்வு அறிக்கையில் அதற்கு மாறான விபரங்கள் வந்துள்ளன. அதன்படி விக்னேஷின் உடலில் 13 இடங்களில் காயங்கள் இருந்துள்ளன. … Read more

#Breaking:சிபிஎம் பொதுச் செயலாளராக சீதாராம் யெச்சூரி மீண்டும் தேர்வு

கண்ணூர்: சிபிஎம் கட்சியை தொடர்ந்து மூன்றாவது முறையாக வழிநடத்தும் முக்கிய பொறுப்பு சீதாராம் யெச்சூரிக்கு வழங்கப்பட்டுள்ளது. கண்ணூரில் நடந்த சிபிஐ (எம்) 23வது அகில இந்திய மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட 85 பேர் கொண்ட மத்திய குழுவின் முதல் கூட்டத்தின் மூலம் சீதாராம் யெச்சூரி பொதுச் செயலாளராக மூன்றாவது முறையாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.