#BREAKING : இந்த திட்டத்தை தமிழகம் முழுவதும் ஏன் அமல்படுத்தக்கூடாது? – உயர்நீதிமன்றம்

நீலகிரி மாவட்டத்தில் விற்கப்படும் மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை தமிழகம் முழுவதும் ஏன் அமல்படுத்தக் கூடாது? என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மலைப் பிரதேசமான நீலகிரி மாவட்டத்தில் வனப் பகுதிகளில் டாஸ்மாக் கடைகளில் கண்ணாடி பாட்டில்களில் விற்கப்படும் மது பானங்களை பயன்படுத்திய பின்னர் காலி மது பாட்டில்களை வனப்பகுதிகளில் வீசிச் செல்வதால், அவற்றை விலங்குகள் மிதிக்கும்போது காயமடைவதாகவும், அடுத்த மூன்று மாதங்களில் அவை இறந்து விடுவதாக நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் மே 15ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இந்த நிலையில், நீலகிரி மாவட்டம்முழுவதும் நாள் ஒன்றுக்கு 80 ஆயிரம் காலி மது பாட்டில்கள் திரும்ப பெறப்படுவதாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தகவல் அளித்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் விற்கப்படும் மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை தமிழகம் முழுவதும் ஏன் அமல்படுத்தக் கூடாது? என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழக அரசின் விளக்கத்திற்காக கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும், மலை பிரதேசங்களில் மது பாட்டில்கள் பயன்படுத்தப்படுகின்றனவா என மாவட்ட ஆட்சியரும். டாஸ்மாக் மேலாளரும் ஆய்வு செய்ய வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment