LIC நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்பது கண்டனத்திற்குரியது – டிடிவி தினகரன்

ஒரே நாடு, ஒரே பதிவு திட்டம் மாநில அரசுகளின் வருவாயில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் அதனை மத்திய அரசு கைவிட வேண்டும் என டிடிவி தினகரன் கோரிக்கை. 2022-23-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அப்போது, ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகள் முழுமையாக தனியாருக்கு பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இனி ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி பங்குகள்  தொடங்கும் என பட்ஜெட் உரையில் தெரிவித்திருந்தார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து … Read more

‘நம் தாய்த்திரு நாட்டின் தவப்புதல்வர்’ – நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாளை முன்னிட்டு டிடிவி தினகரன் ட்வீட்..!

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாளை முன்னிட்டு, ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தைக் கூர்மைப்படுத்திய கள நாயகர், வீரத்திருமகன் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் பிறந்த நாள் இன்று என டிடிவி தினகரன் ட்வீட்.  இன்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் பிறந்தநாள் அனுசரிக்கப்பட்டது வரும் நிலையில், ஒவ்வொரு அரசியல் தலைவர்களும், அவரது வீரத்தையும், அவரது விடுதலை போராட்டத்தையும், நினைவுகூர்ந்து புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், டிடிவி தினகரன் அவர்கள் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நம் … Read more

பொங்கல் வாழ்த்து தெரிவித்த டிடிவி தினகரன்..!

பொங்கல் திருநாளை முன்னிட்டு டிடிவி தினகரன் அவர்கள் வாழ்த்து தெரிவித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.  அந்த அறிக்கையில், ‘விவசாயம் தொழில் அல்ல; வாழ்க்கை முறை’ என்பதை உலகிற்குச் சொல்லும் தமிழ் மக்களின் தனித்துவமான பண்டிகையான பொங்கல் திருநாளில் உலகம் முழுக்க வாழ்கிற தமிழ்ச் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். ‘விவசாயிகள் மகிழ்ச்சியாக இருக்கிற நாடுதான் உன்னதமான தேசமாக இருக்கும்’ என்பதை ஒவ்வொருவரும் மனதில் கொண்டு உழவையும், உழவர்களையும், அவர்களுக்கு உறுதுணையாக உள்ள கால்நடைகளையும் கொண்டாடுவதற்காகத்தான் நம்முடைய … Read more

பொதுமக்களுக்கு தேவையான உதவிகள் கிடைப்பதை கழகத்தினர் உறுதி செய்திட வேண்டும் – டிடிவி தினகரன்

கனமழை நீடிப்பதால் பொதுமக்களுக்கு தேவையான உதவிகள் கிடைப்பதை கழகத்தினர் உறுதி செய்திட வேண்டும் என டிடிவி தினகரன் ட்வீட்.  தமிழகம் முழுவதும் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் பல மாவட்டங்களில் மழை பெய்து வருவதால், வெள்ள பாதிப்பால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். இதனால், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசியல் கட்சியினர் பலரும் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர். அந்த வகையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சியினரும் நிவாரண உதவாய்க்காலி … Read more

திமுக சொன்னது ஒன்று, செய்திருப்பது வேறு.. இதையெல்லாம் சாதனையாக கருத முடியாது – டிடிவி தினகரன்

தமிழக அரசின் வேளாண்மை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தி.மு.க சொன்னது ஒன்று, செய்திருப்பது வேறு என டிடிவி தினகரன் விமர்சனம். இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், வேளாண்மைக்கு தனி பட்ஜெட் என்றவுடன் தமிழகத்தில் விவசாயத்தையும், விவசாயிகளையும் உயர்த்தும் அளவுக்கு தொலைநோக்கு பார்வை கொண்ட மிகப்பெரிய செயல்திட்டத்தை தமிழக அரசு வெளியிடும் என்று அனைத்து தரப்பினரிடமும் ஏற்பட்ட எதிர்பார்ப்பு பொய்யாகி இருக்கிறது. ஏனெனில், வழக்கமான நிதிநிலை அறிக்கையில் இருந்து சில அம்சங்களைப் பிரித்தெடுத்து … Read more

பழைய 60:40 பங்கீட்டு பாசம்.. திமுக அரசு இப்படி நடந்தால் சந்தேகம் எழுவதைத் தவிர்க்க முடியாது – டிடிவி

தமிழ்நாட்டு மக்களின் தலையிலும் நிதிச்சுமையை ஏற்ற தமிழக அரசு முயற்சிக்கக்கூடாது என டிடிவி தினகரன் கருத்து. அதிமுக ஆட்சியின் நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று வெளியிட்ட நிலையில், இதனை குறித்து அரசியல் தலைவர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றன. அந்த வகையில் வெள்ளை அறிக்கை குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், தமிழக அரசின் பொருளாதாரம் குறித்த வெள்ளை அறிக்கையில் … Read more

எங்கள் முயற்சியும், சின்னம்மாவின் முயற்சியும் அதிமுகவை மீட்க வேண்டும் என்பதுதான் – டிடிவி தினகரன்

தேர்தல் வெற்றி தோல்வி எல்லாம், எங்களுக்கு எந்த தடையும் ஏற்படுத்தி விடாது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அம்மாவின் இயக்கத்தை மீட்டெடுக்கத்தான் அமமுக தொடங்கப்பட்டது. அதிமுகவை மீட்க வேண்டும் என்பதே எங்கள் இலக்கு, அதை நோக்கித்தான் பயணித்து செல்கிறோம். தேர்தலில் வெற்றி, தோல்வி எந்த தடையும் ஏற்படுத்தாது. தங்கள் இலக்கை நோக்கி பயணிப்போம். எங்கள் முயற்சியும், சின்னம்மாவின் முயற்சியும் அதிமுகவை மீட்க … Read more

மத்திய, மாநில அரசுகள் ஆரம்பத்திலேயே அடக்கிட வேண்டியது அவசியம் – டிடிவி தினகரன்

கொங்கு நாடு குறித்த சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம். தமிழ்நாட்டை இரண்டாகப் பிரித்து கொங்கு நாடு என்ற ஒரு தனி யூனியன் பிரதேசத்தை மத்திய பாஜக அரசு உருவாக்க முயற்சிப்பதாக நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, இவ்விவகாரம் விவாதப்பொருளாக மாறியுள்ளது. கொங்கு நாடு குறித்த சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இதுகுறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்து … Read more

மேகதாது அணை விவகாரம் – கர்நாடக அரசுக்கு டிடிவி தினகரன் கண்டனம்!

மேகதாது அணை கட்டியே தீருவோம் எனும் கர்நாடக அரசின் முடிவுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். அண்மையில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மேகதாது அணை தொடர்பாக கடிதம் எழுதி இருந்தார். இதற்கு பதில் அளித்த தமிழக முதல்வர் ஸ்டாலின் மக்கள் நலன் கருதி மேகதாது திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்த மேகதாது அணை கட்டுவது தொடர்பாக பல்வேறு அரசியல் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தற்பொழுது அம்மா மக்கள் … Read more

பண மூட்டைகளையும், பொய்மூட்டைகளையும் கடந்து நாம் தனி முத்திரையைப் பதிக்கப் போகிறோம் – டிடிவி தினகரன்

வாக்கு எண்ணிக்கையில் அமமுகவினர் முழு கவனத்துடன் இருக்க வேண்டும் என்று அக்கட்சி பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிக்கை. இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், வாக்கு எண்ணிக்கையில் அமமுகவினர் முழு கவனத்துடன் இருக்க வேண்டும். கருத்துக்கணிப்புகளைத் தாண்டி கழகம் தனி முத்திரை பதிக்கப் போகிறது. போலிகளை அடையாளம் காட்டி புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உண்மையான வழித்தோன்றலாக பிரகாசிக்கப் போகிறோம் என கூறியுள்ளார். தமிழக அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த சட்டப்பேரவைத் தேர்தலின் முடிவுகள் நாளை … Read more