எங்கள் முயற்சியும், சின்னம்மாவின் முயற்சியும் அதிமுகவை மீட்க வேண்டும் என்பதுதான் – டிடிவி தினகரன்

தேர்தல் வெற்றி தோல்வி எல்லாம், எங்களுக்கு எந்த தடையும் ஏற்படுத்தி விடாது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அம்மாவின் இயக்கத்தை மீட்டெடுக்கத்தான் அமமுக தொடங்கப்பட்டது. அதிமுகவை மீட்க வேண்டும் என்பதே எங்கள் இலக்கு, அதை நோக்கித்தான் பயணித்து செல்கிறோம்.

தேர்தலில் வெற்றி, தோல்வி எந்த தடையும் ஏற்படுத்தாது. தங்கள் இலக்கை நோக்கி பயணிப்போம். எங்கள் முயற்சியும், சின்னம்மாவின் முயற்சியும் அதிமுகவை மீட்க வேண்டும் என்பதுதான் இலக்கு. கொள்கைக்காக தங்களுடன் இலக்கை நோக்கி பயணிப்பார்கள், சுயநலத்திற்காக வந்தவர்கள் செல்கின்றனர்.

அதிமுக தொடங்கப்பட்டது முதல் ஒற்றை தலைமையில் தான் பயணித்தது. தற்போது அது மாறியுள்ளது என்றும் மீண்டும் அது சரியாகும். திமுக எதை எதிர்த்து போராடியதோ அதை எல்லாம் தற்போது செய்து கொண்டியிருக்கிறது என விமர்சித்து, உப்பை தின்றவர்கள் தண்ணீர் குடித்து தான் ஆக வேண்டும், நடவடிக்கை சட்டப்படி இருந்தால் சரிதான் என முன்னாள் அமைச்சர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை குறித்த கேள்விக்கு பதில் தெரிவித்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்