ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்தவர்கள் பற்றிய விவரங்கள் மற்றும் பட்டியலை அளிக்க வேண்டும் – மத்திய அரசு

ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்தவர்கள் பற்றிய விவரங்களை மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் அளிக்க வேண்டும் என மத்திய அரசு கடிதம்.

ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்தவர்கள் பற்றிய விவரங்கள் மற்றும் பட்டியலை அளிக்க வேண்டும் என்று மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது. மாநில அரசுகளிடம் இருந்து வரும் தகவல்களை திரட்டி, நாடாளுமன்ற அவையில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக யாரும் உயிரிழக்கவில்லை என்று மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்த நிலையில், அனைத்து மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.