தமிழகத்தில் பிறக்கவில்லையே தவிர நானும் உங்கள் வீட்டு பிள்ளைதான் – ராகுல் காந்தி

ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள ராகுல்காந்தி தமிழை மத்திய அரசு அவமதிப்பதை ஏற்க முடியாது என கூறியுள்ளார். மூன்று நாள் சுற்றுப் பயணமாக தமிழகம் வந்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பியுமான ராகுல்காந்தி, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதன்படி நேற்று முதல் கட்டமாக கோவை மற்றும் திருப்பூரில் தனது பரப்புரையை மேற்கொண்டார். இந்நிலையில் இன்று ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள ராகுல்காந்தி, நான் … Read more

அவரால் ஆதாயம் அடைந்தவர்கள் பலர்., மீண்டு வந்து அரசியலில் ஈடுபட வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்

சசிகலா ஆரோக்கியத்துடன் விடுதையாகி அரசியலில் ஈடுபட வேண்டும் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தலையொட்டி ஸ்ரீபெரம்பத்தூர், பல்லாவரம், தாம்பரம் ஆகிய தொகுதிகளில் தேமுதிக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் இன்று சென்னையை அடுத்து சிக்கராயபுரத்தில் நடைபெற்றது. இதில் மூன்று தொகுதிகளுக்கான தேர்தல் பொறுப்பாளர்களை பிரேமலதா விஜயகாந்த் அறிமுகம் செய்து வைத்து உரையாற்றினார். இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், தொண்டர்கள் விரும்பினால் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன். ஜெயலலிதா என்ற ஒருவருக்காக தன் வாழ்க்கையை … Read more

ஸ்டாலினுக்கு முருகன் வரம் தரமாட்டார்., எங்களுத்தான் – முதல்வர் விமர்சனம்

முக ஸ்டாலினுக்கு முருகன் வரம் கொடுக்கமாட்டார். அதிமுகாவுக்குத்தான் வரம் தர போகிறார் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.  சட்டமன்ற தேர்தல் குறித்து ‘வெற்றிநடை போடும் தமிழகம்’ என்ற பெயரில் அதிமுக சார்பில் முதலமைச்சர் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் கோவை மாவட்டம் புலிக்குளம் பகுதியில் இரண்டாவது நாளாக இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் முதல்வர், திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு முருகன் வரம் கொடுக்கமாட்டார். அதிமுகாவுக்குத்தான் வரம் தர போகிறார் என்று மக்கள் … Read more

மத்திய பட்ஜெட் அல்வா தான்., பாஜக நோட்டாவிற்கு கீழ்தான் இருக்கும் – சீமான் விமர்சனம்

தமிழகத்திற்கு ஜே.பி. நட்டா வந்தாலும் நோட்டாவிற்கு கீழே தான் பாஜக என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மதுரை, மேலூர் அருகே ஒத்தக்கடையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலையொட்டி நாம் தமிழர் கட்சியின் 35 வேட்பாளர் அறிமுகம், நிர்வாகிகள் கலந்தாய்வுக்கூட்டம், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்றது. அப்போது பேசிய சீமான், வலிமை மிக்க இந்திய அரசு ஏன் மீனவர்களை பாதுகாக்கவில்லை? நம் நாட்டின் வெளியுறவுக் கொள்கை தவறாக உள்ளது. … Read more

இஸ்லாமிய தொப்பி அணிந்து ஜமாத் நிர்வாகிகளுடன் முதல்வர் பழனிசாமி கலந்துரையாடல்.!

கோவையில் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் முதல்வர் பழனிசாமி தலையில் தொப்பி அணிந்து கொண்டு ஜமாத் நிர்வாகிகளுடன் உரையாடி உள்ளார்.  தமிழகத்தில் இன்னும் ஒருசில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால்  அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டன. அந்த வகையில் ‘வெற்றிநடை போடும் தமிழகம்’ என்ற பெயரில் அதிமுக சார்பில் முதல்வர் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இன்று கோவையில் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் முதல்வர் பழனிசாமி, தலையில் இஸ்லாமிய தொப்பி அணிந்து கொண்டு ஜமாத் நிர்வாகிகளுடன் … Read more

இடஒதுக்கீடு கிடைக்கும் வரை கூட்டணி இல்லை – ராமதாஸ் விளக்கம்..!

தமிழகத்தில் வன்னியர்களுக்கு 20 சதவீதம் தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என கூறி பா.ம.க சார்பில் பல போராட்டங்கள் நடைபெற்றது.இதனால், வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக உடன் பாமக கூட்டணி தொடருமா..? என கேள்வி எழுந்தது. இந்நிலையில், பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸை அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி ஆகியோர் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின் போது கூட்டணி குறித்து பேசப்பட்டதாக தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து, பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டரில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், … Read more

#BREAKING: முதல்வர் வேட்பாளரை அதிமுகவே தீர்மானிக்கும் – சி.டி.ரவி

முதல்வர் வேட்பாளரை அதிமுகவே தீர்மானிக்கும் என்று பாஜகவின் தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி பேட்டியளித்துள்ளார். தமிழகத்தில் அதிமுக பெரும்பான்மையான கட்சி என்பதால் முதல்வர் வேட்பாளரை அதிமுகவே தீர்மானிக்கும் என பாஜக தேசிய பொதுச்செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான சி.டி.ரவி திருச்சியில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். முதல்வர் பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் எங்களை ஆதரிக்கின்றன. கே.பி.முனுசாமி கருத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இதனிடையே, கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை மத்திய தலைமை தான் அறிவிக்கும் என தமிழக பாஜக மாநில தலைவர் … Read more

தேமுதிக பொறுப்பாளர்களுடன் பிரேமலதா விஜயகாந்த் ஆலோசனை.!

தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் தேர்தல் பொறுப்பாளர் கூட்டம் நடைபெறுகிறது. கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவகத்தில் தேமுதிக தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டம் தொடங்கியுள்ளது. தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் தேர்தல் பொறுப்பாளர் கூட்டம் நடைபெறுகிறது. மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோருடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையே, சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், தமிழக சட்டசபை தேர்தலில் 41 தொகுதிகளை கொடுக்கும் கட்சி உடன் கூட்டணி என்பது தேமுதிகவின் நிலைப்பாடு … Read more

சமூக நீதிக்கு மட்டுமல்ல, சட்ட நீதிக்கும் ஆபத்து – முக ஸ்டாலின்

சமூக நீதிக்கு எப்படி ஆபத்து வந்துள்ளதோ, அதேபோல சட்ட நீதிக்கும் ஆபத்து வந்துள்ளது என திமுக தலைவர் முக ஸ்டாலின் குற்றசாட்டு. சென்னை ராயப்பேட்டையில் திமுக சட்டத்துறை சார்பில் நடைபெறும் சட்ட கருத்தரங்கின் 2வது மாநில மாநாட்டில் முக ஸ்டாலின் உரையாற்றி வருகிறார். அப்போது, சட்டத்துறையால் நிறைவேற்றப்பட்ட சிறப்புகளை குறித்து பேசிய பின், தற்போது சமூக நீதிக்கு எப்படி ஆபத்து வந்துள்ளதோ, அதேபோல சட்ட நீதிக்கும் ஆபத்து வந்துள்ளது என குற்றசாட்டியுள்ளார். வாசல்கள் இல்லாமல் வீடோ, வழக்கறிஞர்கள் … Read more

தேமுதிக எந்த கூட்டணியில் உள்ளதோ அதுதான் ஆட்சியமைக்கும் – பிரேமலதா விஜயகாந்த்

தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் வேலைகளை செய்து வருகின்றது. தமிழகத்தில் அதிமுக, திமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் மட்டுமே தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், தமிழக சட்டசபை தேர்தலில் 41 தொகுதிகளை கொடுக்கும் கட்சி உடன் கூட்டணி என்பது தேமுதிகவின் நிலைப்பாடு என தெரிவித்தார். தேமுதிக எந்த கூட்டணியில் உள்ளதோ அந்தக் … Read more