இடஒதுக்கீடு கிடைக்கும் வரை கூட்டணி இல்லை – ராமதாஸ் விளக்கம்..!

இடஒதுக்கீடு கிடைக்கும் வரை கூட்டணி இல்லை – ராமதாஸ் விளக்கம்..!

தமிழகத்தில் வன்னியர்களுக்கு 20 சதவீதம் தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என கூறி பா.ம.க சார்பில் பல போராட்டங்கள் நடைபெற்றது.இதனால், வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக உடன் பாமக கூட்டணி தொடருமா..? என கேள்வி எழுந்தது.

இந்நிலையில், பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸை அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி ஆகியோர் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின் போது கூட்டணி குறித்து பேசப்பட்டதாக தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து, பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டரில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், தமிழக அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி. வேலுமணி ஆகியோர் இன்று என்னை தைலாபுரம் இல்லத்தில் சந்தித்துப் பேசினார்கள். வன்னியர்கள் இட ஒதுக்கீடு குறித்து பேசப்பட்டது. பொங்கல் திருநாளுக்குப் பிறகு மீண்டும் இதுகுறித்து பேசுவதாக உறுதியளித்துச் சென்றுள்ளனர்.

மேலும், அமைச்சர்களுடன் வன்னியர் இடப்பங்கீடு குறித்து மட்டும் தான் பேசப்பட்டது. அரசியலோ, தேர்தல் குறித்தோ பேசப்படவில்லை. வன்னியர் இடப்பங்கீடு கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை கூட்டணி குறித்த பேச்சுக்கே இடமில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

பாமக 2019-ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி அமைத்தது. கடந்த சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan
Join our channel google news Youtube