மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்! இன்று முதல் ஏப்ரல் 21 வரை தொடர் விடுமுறை!

tn schools

TN Schools: தமிழகத்தில் 4 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு இன்று முதல் ஏப்ரல் 21 வரை தொடா் விடுமுறை. தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 1ம் தேதி முதல் ஏப்ரல் 8ம் தேதி வரை நடைபெற்று முடிவு பெற்றது. அதேசமயம் 1 முதல் 9ஆம் வகுப்புகளுக்கு முழு ஆண்டு தேர்வு ஏப்ரல் 18 முதல் 30ம் தேதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மக்களவை … Read more

அனைத்து பள்ளி வாகனங்களிலும் சிசிடிவி பொருத்த உத்தரவு!

school vehicles

TNSchools: தனியார் பள்ளி வாகனங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அனைத்து பள்ளி வாகனங்களிலும் ஜிபிஎஸ் மற்றும் சிசிடிவி கேமரா கட்டாயம் பொருத்தவேண்டும் என்றும் என்று தமிழக அரசு உத்தரவிட்டு தனியார் பள்ளி வாகனங்களுக்கான வழிகாட்டுதல் நெறிமுறை வெளியிடப்பட்டுள்ளது. அதில், அனைத்து வாகனங்களிலும் ஒரு பெண் உதவியாளர் நியமிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு பள்ளி வாகனத்திலும் வேக கட்டுப்பாட்டு கருவி பொறுத்தப்பட்டிருக்க வேண்டும். சிசிடிவி கேமரா பொருத்தி, காட்சிகளை சேகரித்து காவல்துறையிடம் வழங்க வேண்டும். பள்ளி வாகன … Read more

மாணவர்கள் கவனத்திற்கு! தேர்வு தேதிகளில் மாற்றம்.. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

SCHOOL STUDENTS

EXAM : தமிழ்நாட்டில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல், சமூக அறிவியல் தேர்வு தேதிகள் மாற்றம். தமிழகத்தில் மார்ச் 1 முதல் 22ம் தேதி வரை 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது. அதேபோல மார்ச் 4ம் தேதி தொடங்கிய 11ம் வகுப்பு தேர்வு 25 தேதியுடன் தேர்வு நிறைவடைந்தது. இதுபோன்று, கடந்த 26ம் தேதி 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கிய நிலையில், ஏப்ரல் 8ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த சூழலில், 1 … Read more

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிரடி மாற்றம் – தமிழக அரசு அரசாணை வெளியீடு!

tn school education

தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பில் விருப்பப்பாடத்திற்கு தேர்ச்சி மதிப்பெண்ணை நிர்ணயம் செய்து தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, பத்தாம் வகுப்பில் விருப்பப்பாடத்துக்கான தேர்ச்சி மதிப்பெண் 35-ஆக நிர்ணயம் செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நடைமுறை அடுத்த 2024-25ம் கல்வியாண்டு முதல் அமலாகும் வகையில் தமிழ்நாடு தமிழ் கற்றல் சட்டம் 2006ல் திருத்தம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ் மற்றும் ஆங்கிலத்தை தாய்மொழியாக கொள்ளாத 10ம் வகுப்பு மாணவர்கள் விருப்ப பாடத்திலும் தேர்ச்சி … Read more

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆலோசனை மையம் – தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அடுத்து என்ன படிக்கலாம்? என்ன படிப்புக்கு வேலைவாய்ப்பு அதிகமாக உள்ளது? என்பதற்கான ஆலோசனை மையம் அமைக்க அரசாணை வெளியீடு. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 9 – 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்த ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள் வழங்குவதற்கு ஆலோசனை மையம் அமைக்க நிதி ஒதுக்கி பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. மாணவர்களுக்கு முன்னாள் மாணவர்களை கொண்டு தொடர் நெறிப்படுத்தும் முறை, ஆலோசனை மையம் மற்றும் தொடர் … Read more

பிப்.1 முதல் 100% மாணவர்களுக்கும் நேரடி வகுப்பு – பள்ளிக் கல்வி ஆணையர்

பள்ளிகளில் 100% மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் நடத்த அனுமதி வழக்கப்பட்டுள்ளது என பள்ளிக்கல்வி ஆணையர் தகவல். தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு கடந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. பின்னர், தமிழகத்தில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவல் அதிகரிக்க தொடங்கிய நிலையில், மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, தமிழகத்தில் பிப்ரவரி 1-ம் தேதி முதல் 1 to 12-ம் வகுப்பு வரை அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும், … Read more

#BREAKING: இரவு நேர ஊரடங்கு ரத்து.. பிப் 1ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு – முதல்வர் அறிவிப்பு!

தமிழகத்தில் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஜனவரி 31-ஆம் தேதி வரை இந்த கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அடுத்தகட்ட ஊரடங்கு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் … Read more

பிப் 1 முதல் பள்ளிகள் திறக்கப்பட்டால் மே மாதத்தில் தேர்வு – அமைச்சர் அறிவிப்பு!

பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் பள்ளிகளை திறப்பது தொடர்பான அறிவிப்பை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியிடுவார் என அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல். தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு கடந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. பின்னர், தமிழகத்தில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவல் அதிகரிக்க தொடங்கிய நிலையில், மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, தமிழகத்தில் பிப்ரவரி 1-ம் தேதி முதல் 1 to 12-ம் … Read more

இன்று முதல்…9-12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு – பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!

9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இன்று முதல் வழக்கம்போல் பள்ளிகள் செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் அரையாண்டு தேர்வு விடுமுறைக்கு பிறகு 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்படவுள்ளது.பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகள் நடைபெறாத போதும்,கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி அரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில்,9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் (3-ஆம் தேதி) தமிழகம் முழுவதும் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதனிடையே கொரோனா … Read more

இடிக்கப்படும் பள்ளி கட்டிடங்களுக்கு மாற்று ஏற்பாடு – அமைச்சர் அன்பில் மகேஷ்

சேதமடைந்த பள்ளி கட்டிடங்கள் இடிக்கும்போது மாணவர்கள் அருகில் உள்ள பள்ளியில் பயில நடவடிக்கை என அமைச்சர் தகவல். நெல்லையில் இயங்கி வரும் சாஃப்டா் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பள்ளி கழிப்பறை சுவா் இடிந்து விழுந்ததில் அந்தப் பள்ளி மாணவா்கள் அன்பழகன், விஸ்வரஞ்சன், சுதீஸ் ஆகிய 3 பேர் உயிரிழந்த நிலையில் 4 மாணவா்கள் காயமடைந்தனா். இதுதொடர்பாக பள்ளித் தலைமை ஆரிசியர் உள்ளிட்ட ஆகிய மூவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. … Read more