மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்! இன்று முதல் ஏப்ரல் 21 வரை தொடர் விடுமுறை!

tn schools

TN Schools: தமிழகத்தில் 4 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு இன்று முதல் ஏப்ரல் 21 வரை தொடா் விடுமுறை. தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 1ம் தேதி முதல் ஏப்ரல் 8ம் தேதி வரை நடைபெற்று முடிவு பெற்றது. அதேசமயம் 1 முதல் 9ஆம் வகுப்புகளுக்கு முழு ஆண்டு தேர்வு ஏப்ரல் 18 முதல் 30ம் தேதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மக்களவை … Read more

அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய ஆசிரியர்களுக்கு சம்பள பிடித்தம்!

teachers

TN Govt: அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பள பிடித்தம் செய்ய உத்தரவு. கடந்த பிப்ரவரி 19 முதல் மார்ச் 8ம் தேதி வரை சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு தமிழ்நாடு முழுவதும் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் குறிப்பாக, திண்டுக்கல் வடமதுரை ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் சம வேலைக்கு சம ஊதியத்தை வலியுறுத்தி 19 நாட்கள் தொடர் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில், உரிய அனுமதி இல்லாமல் அரசுக்கு  … Read more

தமிழகத்தில் ஏப்.15- 19 வரை பள்ளிகளுக்கு விடுமுறை!

TN SCHOOLS

TN Schools: தமிழகத்தில் 4 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 15 முதல் 19 வரை பள்ளிகளுக்கு விடுமுறை. தமிழ்நாட்டில் 4ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வரும் 15ம் தேதி முதல் 19ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஏப்ரல் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு நடைபெறும் என்றும் ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. … Read more

மாணவர்கள் கவனத்திற்கு! தேர்வு தேதிகளில் மாற்றம்.. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

SCHOOL STUDENTS

EXAM : தமிழ்நாட்டில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல், சமூக அறிவியல் தேர்வு தேதிகள் மாற்றம். தமிழகத்தில் மார்ச் 1 முதல் 22ம் தேதி வரை 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது. அதேபோல மார்ச் 4ம் தேதி தொடங்கிய 11ம் வகுப்பு தேர்வு 25 தேதியுடன் தேர்வு நிறைவடைந்தது. இதுபோன்று, கடந்த 26ம் தேதி 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கிய நிலையில், ஏப்ரல் 8ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த சூழலில், 1 … Read more

All The Best மாணவர்களே… 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்கம்!

10th exam

10th Exam : தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்க உள்ள நிலையில், 9 லட்சத்து 38 ஆயிரம் பேர் தேர்வு எழுதுகின்றனர். தமிழ்நாடு  மற்றும் புதுச்சேரியில் 12, 11ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் சமீபத்தில் தான் முடிவடைந்தது. அதன்படி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடைபெற்ற நிலையில், 7.72 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதுபோன்று, 11ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 4ம் தேதி … Read more

பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறை, உயர் கல்வித்துறை சார்ந்த அறிவிப்புகள்!

school education

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இன்று சட்டப்பேரவையில் தமிழக அரசின் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனால் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து வைத்தார். அதில், பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறை சார்ந்த பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தமிழக அரசின் பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.44,042 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.40,299 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், 2024-25ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் 44,042 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. … Read more

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிரடி மாற்றம் – தமிழக அரசு அரசாணை வெளியீடு!

tn school education

தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பில் விருப்பப்பாடத்திற்கு தேர்ச்சி மதிப்பெண்ணை நிர்ணயம் செய்து தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, பத்தாம் வகுப்பில் விருப்பப்பாடத்துக்கான தேர்ச்சி மதிப்பெண் 35-ஆக நிர்ணயம் செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நடைமுறை அடுத்த 2024-25ம் கல்வியாண்டு முதல் அமலாகும் வகையில் தமிழ்நாடு தமிழ் கற்றல் சட்டம் 2006ல் திருத்தம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ் மற்றும் ஆங்கிலத்தை தாய்மொழியாக கொள்ளாத 10ம் வகுப்பு மாணவர்கள் விருப்ப பாடத்திலும் தேர்ச்சி … Read more

பொதுத்தேர்வு தேதி…மாணவர்களுக்கு புதிய செயலி – அன்பில் மகேஸ்.!

anbil mahesh poyyamozhi

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று பள்ளிக் கல்வித்துறை சார்பில், மாணவர் நலனுக்கான “நலம் நாடி” செயலியை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிமுகம் செய்தார். அதேபோல், அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான இணையதளத்தையும் தொடங்கி வைத்தார். மேலும் கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உண்டு உறைவிடப் பள்ளி மாணவ மாணவியர்களுக்கான மாதாந்திர ஊக்கத் தொகை நேரடி பயனாளர் பணப் பரிவர்த்தனை மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான இணையவழி குறைதீர் புலம் … Read more

பிப்.1 முதல் 100% மாணவர்களுக்கும் நேரடி வகுப்பு – பள்ளிக் கல்வி ஆணையர்

பள்ளிகளில் 100% மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் நடத்த அனுமதி வழக்கப்பட்டுள்ளது என பள்ளிக்கல்வி ஆணையர் தகவல். தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு கடந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. பின்னர், தமிழகத்தில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவல் அதிகரிக்க தொடங்கிய நிலையில், மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, தமிழகத்தில் பிப்ரவரி 1-ம் தேதி முதல் 1 to 12-ம் வகுப்பு வரை அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும், … Read more

பிப் 1 முதல் பள்ளிகள் திறக்கப்பட்டால் மே மாதத்தில் தேர்வு – அமைச்சர் அறிவிப்பு!

பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் பள்ளிகளை திறப்பது தொடர்பான அறிவிப்பை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியிடுவார் என அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல். தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு கடந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. பின்னர், தமிழகத்தில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவல் அதிகரிக்க தொடங்கிய நிலையில், மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, தமிழகத்தில் பிப்ரவரி 1-ம் தேதி முதல் 1 to 12-ம் … Read more