#Breaking:லீவு..லீவு…தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இன்று விடுமுறை அறிவிப்பு!

கனமழை காரணமாக மதுரை,நாமக்கலில் ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில்,தற்போது விருதுநகர் மாவட்டத்திலும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில்,தமிழகத்தில் கடந்த வாரம் கனமழை வெளுத்து வாங்கியது.இதனால்,சாலைகள்,வீடுகள் என மழைநீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பது. இதன்காரணமாக பள்ளிகள்,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில்,இன்று காலை முதல் பெய்து வரும் கனமழை காரணமாக விருதுநகர் மாவட்டதில் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே,மதுரை,நாமக்கலில் விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில்,தற்போது விருதுநகர் மாவட்டத்திலும் விடுமுறை அறிவிக்கப்பட்டதையடுத்து,தமிழகத்தில் இன்று … Read more

#Breaking:ஒமைக்ரான் தொற்று:பள்ளிகளுக்கு போடப்பட்ட முக்கிய உத்தரவு!

ஒமைக்ரான் தொற்றானது பரவாமல் தடுக்க,பள்ளிகளுக்கு முக்கிய உத்தரவை பள்ளிக்கல்வித்துறை விதித்துள்ளது. உலகின் சில நாடுகளில் ஒமைக்ரான் பரவிய நிலையில், வெளிநாடுகளிலிருந்து இந்தியா வந்த இரண்டு பேருக்கு இத்தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,தமிழக பள்ளிகளில் ஒமைக்ரான் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக செயல்படுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொடர்பான அரசின் அனைத்து வழிகாட்டுதல்களையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும்,1 ஆம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை சுழற்சி முறையில் மட்டுமே நடத்த வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை … Read more

கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் இன்று பள்ளிகள் திறப்பு!

மழையால் கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளிகள் திறக்காத நிலையில், இன்று திறக்கப்பட்டன. கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. தமிழகத்தில் நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், மழை காரணமாக கடலூர், விழுப்புரத்தில் பள்ளிகள் திறக்கப்படவில்லை. இதனால் அம்மாவட்டங்களில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன என்பது குறிப்பிடப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்த பிறகு தமிழக அரசு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை படிப்படியாக … Read more

சனிக்கிழமைகளில் பள்ளிகள் திறக்க வேண்டும் – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

தமிழகத்தில் இனி அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் திறக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பிப்பு. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டு பள்ளி, கல்லூரிகள் தொடர்ந்து மூடப்பட்டது. பின்னர் பரவல் சற்று குறைந்த பிறகு தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை படிப்படியாக அளித்து வந்தது. இதில், பள்ளிகள், கல்வி நிலையங்கள் திறக்க உத்தரவிட்டு திறக்கப்பட்டது. முதல் கட்டமாக ஒன்பதாம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், நவம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் … Read more

மீண்டும் பள்ளி செல்ல மாணவர்களுக்கு ஆர்வம் குறைவு – உயர்நீதிமன்றம்

மாணவர்களின் கல்வி சம்பந்தமாக வேறு பிரச்சனைகள் என்னென்ன உள்ளன என்பதை அரசு கூற உயர்நீதிமன்றம் உத்தரவு. தமிழகத்தில் 18 மாதங்களுக்கு பின் மீண்டும் பள்ளி செல்ல மாணவர்கள் மத்தியில் ஆர்வம் குறைவாக உள்ளது என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கருத்து தெரிவித்துள்ளது. அரசு பள்ளிகளில் மாற்று சான்று பெறுவதில் சிக்கல் உள்ளது என்று தெரிவித்து, மாணவர்களின் கல்வி சம்பந்தமாக வேறு பிரச்சனைகள் என்னென்ன உள்ளன என்பதை அரசு கூற உத்தரவிட்டுள்ளது. மாணவர்கள் படிப்பை … Read more

பள்ளிகள் திறப்புக்கான வழிகாட்டுதல்கள் வெளியீடு! – பள்ளிக்கல்வித்துறை

நவம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்று முதல் 8ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பது தொடர்பாக தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு. தமிழகத்தில் நவம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்று முதல் 8ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. பள்ளிகள் திறப்பதமானால் தமிழக அரசு பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. மீண்டும் பள்ளிக்கு வரும் குழந்தைகளை அன்புடன் வரவேற்போம் என்றும் மாணவர்களுக்கு நம்பிக்கையூட்டுவதன் மூலமாக எதிர்கால மனித ஆற்றலை உருவாக்குவோம் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். … Read more

பெற்றோர்கள் விருப்பப்படி மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் – அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!

நவ.1 முதல் ஒன்று முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம். மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நவ.1ஆம் தேதியில் இருந்து ஒன்று முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. காலை முதல் மாலை வரை வழக்கம்போல் முழு நேரமும் வகுப்புகள் நடைபெறும். திங்கட்கிழமை ஒரு வகுப்பிற்கு பாடம் நடத்தப்பட்டால் செவ்வாய் அன்று விடுமுறை என தெரிவித்தார். எந்த … Read more

ஓன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுடன் பெற்றோர்களும் இருக்கலாம் – அமைச்சர்

ஓன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுடன், அவர்களது பெற்றோர்களும் இருக்கலாம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு. திருச்சி மாவட்டம் மணப்பாறையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, வரும் 1ம் தேதி முதல் 1-ம் தேதி முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், ஒன்றாம் வகுப்பிற்கு வரும் மாணவர்கள் எப்படி முககவசம் அணிவது என்பது கூட தெரியாத நிலை இருக்கும். இதனால், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பெற்றோர்கள் … Read more

ஒரு வகுப்பறையில் 20 மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி – அமைச்சர் அன்பில் மகேஷ்

ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல். தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும்போது, ஒரு வகுப்பறையில் 20 மாணவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவர் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். சுழற்சி முறையில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படும் என்றும் ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் வெகுநேர முகக்கவசம் அணிய முடியாது என்பதால் அது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் எனவும் கூறியுள்ளார். இதனிடையே, தமிழகத்தில் … Read more

#breaking: 1 முதல் 8ஆம் வகுப்புகளுக்கு பள்ளி திறப்பு எப்போது? – முதல்வர் ஆலோசனை!

தமிழகத்தில் 1 முதல் 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளில் நேரடி வகுப்புகளைத் தொடங்குவது குறித்து முதல்வர் ஆலோசனை. தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கூடுதல் தளர்வுகள் அளிப்பதா என்பது குறித்து முதல்வர் மு.க ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்று வரும் ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளள் பங்கேற்றுள்ளனர். அக்.31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு இருந்தாலும், மேலும் சில தளர்வுகள் அளிப்பது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருகிறது. … Read more