,

ஓன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுடன் பெற்றோர்களும் இருக்கலாம் – அமைச்சர்

By

ஓன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுடன், அவர்களது பெற்றோர்களும் இருக்கலாம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு.

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, வரும் 1ம் தேதி முதல் 1-ம் தேதி முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், ஒன்றாம் வகுப்பிற்கு வரும் மாணவர்கள் எப்படி முககவசம் அணிவது என்பது கூட தெரியாத நிலை இருக்கும்.

இதனால், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வந்து உடன் இருக்கலாம் என்றும் குழந்தைகள் நீண்ட நேரம் முகவசம் அணிந்து உட்கார முடியவில்லை என்ற நிலை வந்தால், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்து செல்லலாம் என அறிவித்துள்ளார்.

மேலும், பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகளின் பெற்றோர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஏற்கனவே அறிவுறுத்தியுள்ள நிலையில், தற்போது கூடுதல் கவனம் செலுத்தி மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என தெரிவித்தார்.

Dinasuvadu Media @2023