சனிக்கிழமைகளில் பள்ளிகள் திறக்க வேண்டும் – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

தமிழகத்தில் இனி அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் திறக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பிப்பு.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டு பள்ளி, கல்லூரிகள் தொடர்ந்து மூடப்பட்டது. பின்னர் பரவல் சற்று குறைந்த பிறகு தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை படிப்படியாக அளித்து வந்தது. இதில், பள்ளிகள், கல்வி நிலையங்கள் திறக்க உத்தரவிட்டு திறக்கப்பட்டது.

முதல் கட்டமாக ஒன்பதாம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், நவம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் 8-ஆம் வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்த நேரத்தில் பண்டிகை விடுமுறை மற்றும் தொடர் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக தொடர் விடுமுறை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இனி தமிழகத்தில் அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் திறக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்